Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முடியுமா..முடியாதா? இப்பவே சொல்லிடுங்க! டெல்லிக்கு பறந்த போன்கால்! கடுகடுப்பில் பிடிஆர்! என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

சென்னை : ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த ஆலோசனை கூட்டம் மதுரையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டும் இதுவரை அதற்கான நடவடிக்கைகளை எடுக்காததால் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அதற்காக மத்திய நிதியமைச்சகத்தை தொடர்பு கொண்டு தொடர்ந்து அழுத்தங்கள் கொடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

    Ayushman Bharath-ல் Apply செய்தால் 5 லட்சம் | Vanathi Seenivasan

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 47வது கூட்டம் சண்டிகரில் கடந்த ஜூன் மாதம் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநில நிதியமைச்சர்கள்,அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    சண்டிகரில் நடைபெற்ற கூட்டத்தல் பல பொருட்கள் மீதான வரியை உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. எல்இடி விளக்குகள், பேனா மை, கத்தி, பிளேடு உள்ளிட்டவற்றுக்கான ஜிஎஸ்டி வரி அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

    ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

    பல்வேறு சலசலப்புகளுக்குப் பிறகு இந்த கூட்டம் நிறைவடைந்த நிலையில், இந்த ஜிஎஸ்டி கூட்டத்தின் முடிவில் ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம் ஆகஸ்ட் மாதம் மதுரையில் நடைபெறும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். முன்னதாக தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை மதுரையில் நடத்த வேண்டுனெ அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    நிதியமைச்சர் அறிவிப்பு

    நிதியமைச்சர் அறிவிப்பு

    நிதியமைச்சரின் இந்த அறிவிப்புக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றியும் தெரிவித்தார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட அவர்,"எங்கள் அழைப்பை ஏற்று மதுரையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை நடத்த ஒப்புக் கொண்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு நன்றி. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு வருகை தரும் மாநில அமைச்சர்கள் மற்றும மூத்த அதகாரிகளை கோவில் நகரம் மற்றும் அதன் மக்கள் அன்புடன் வரவேற்கிறோம்" என கூறியிருந்தார்.

    தள்ளிப்போகும் கூட்டம்

    தள்ளிப்போகும் கூட்டம்

    ஆகஸ்ட் 3 அல்லது நான்காவது வாரத்தில் 48-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மதுரையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாடாளுமன்ற கூட்டம் மற்றும் சுதந்திர தினம் ஆகியவற்றால் கூட்டம் நடப்பது தள்ளிப்போனது. தற்போது ஆகஸ்ட் மாதம் நிறைவடைய 10 நாட்களே இருக்கும் நிலையில் கூட்டம் சொன்னபடி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இதனிடையே தேசிய அளவிலான நிகழ்வுகள் முடிவடைந்துள்ள நிலையில் மதுரையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறும் என்ற உறுதியான தகவலை மத்திய நிதி அமைச்சகம் தற்போது வரை வெளியிடவில்லை.

    எப்போது நடக்கும்

    எப்போது நடக்கும்

    இதன் காரணமாக கூட்டத்தை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்த தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தங்கள் கொடுத்து வருகிறார். எப்போது கூட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டால் தான் அதற்கான ஏற்பாடுகளை செய்ய முடியும் என்பதால் மத்திய நிதி அமைச்சகத்துக்கு அவர் கடிதமும் எழுதினார். அதற்கான பதிலும் மத்திய அரசிடம் இருந்து கிடைக்காத நிலையில் கூட்டத்தை எப்படியாவது நடத்திய தீர வேண்டும் என்பதற்காக தொடர்ந்து தொலைபேசி மூலம் மத்திய நிதி அமைச்சக அதிகாரிகளிடமும் பேசியதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை கூட்டம் எப்போது நடக்கும் என்ற தேதி மட்டும் முடிவு செய்யப்படவில்லை.

     பாஜக அதிருப்தி

    பாஜக அதிருப்தி

    நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் மீது தற்போது தமிழக பாஜக மட்டுமல்லாது டெல்லி மேலிடமும் சற்றே அதிருப்தியில் தான் இருக்கிறது. காரணம் மதுரையில் நடந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது காலணி வீசிய சம்பவம், சமீபத்தில் நடந்த தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் நேரலையில் பாஜகவுக்கு அமைச்சர் பிடிஆர் கொடுத்த பதிலடி என தேசிய அளவில் அவரது பெயர் பிரபலமாகியுள்ள நிலையில் தற்போது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திலும் அவருக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைத்து விடுமோ என்ற ரீதியில் வேண்டுமென்றே ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை தாமதப்படுத்துவதாக திமுகவினர் கூறுகின்றனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+