சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நான் பக்கத்து மாநில ஆளுநர்..சிதம்பரம் நடராஜர் கோவிலில் சாமி தரிசனம் செய்த தமிழிசை சவுந்தரராஜன்

கோயிலுக்கு அலை, அலையாக பக்தர்கள் வர வேண்டுமே தவிர கொரோனா அலை வரக்கூடாது என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

சிதம்பரம்: நான் பக்கத்து மாநிலம் தமிழக அரசாங்கத்தைப் பற்றி கருத்து சொல்லக்கூடாது என்று புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் கூறியுள்ளார். சிதம்பரம் நடராஜர் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் பேசிய அவர் கோயிலுக்கு அலை, அலையாக பக்தர்கள் வர வேண்டுமே தவிர கொரோனா அலை வரக்கூடாது என பிரார்த்தனை செய்ததாக கூறினார்.

Recommended Video

    நான் பக்கத்து மாநில ஆளுநர்..சிதம்பரம் நடராஜர் கோவிலில் சாமி தரிசனம் செய்த தமிழிசை சவுந்தரராஜன்

    சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் குழு இரண்டு நாட்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதற்கு பொது தீட்சிதர்கள் ஒத்துழைப்பு அளிக்க மறுத்து விட்டனர். இதற்கு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் ஆட்சியர் கூறியுள்ளார். ஆணையருக்கு அறிக்கை அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

    வரி ஏய்ப்பு புகார்: கோவில்பட்டி ஆர்த்தி ஸ்கேன் மையங்களில் 3-வது நாளாக இன்றும் ஐடி ரெய்டு வரி ஏய்ப்பு புகார்: கோவில்பட்டி ஆர்த்தி ஸ்கேன் மையங்களில் 3-வது நாளாக இன்றும் ஐடி ரெய்டு

    இந்த நிலையில் புதுச்சேரி துணை நிலை ஆளுநரும், தெலுங்கானா மாநில ஆளுநருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் புதன்கிழமை இரவு சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வந்தார். அப்போது கோயில் தீட்சிதர்கள் அவரை வரவேற்று அழைத்துச் சென்றனர்.

    தமிழிசை சவுந்தராஜன்

    தமிழிசை சவுந்தராஜன்


    கனகசபையின் மேலே ஏறி நடராஜரை வழிபட்ட ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கோயில் தீட்சிதர்கள் பிரசாதம் வழங்கினர். இதையடுத்து கோயிலை விட்டு வெளியே வந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசினார்.

    நடராஜர் கோவில்

    நடராஜர் கோவில்

    நடராஜர் கோயிலுக்கு வருகை புரிந்து நடராஜரை தரிசனம் செய்தது மகிழ்ச்சி. அதுவும் நடராஜரை அருகில் நின்று தரிசனம் செய்தது மிக்க மகிழ்ச்சி. நடராஜர் அனைவருக்கும் அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார். அலை அலையாக பொதுமக்கள் கோயிலுக்கு வர வேண்டுமே தவிர, கொரோனா அலை வரக்கூடாது என பிரார்த்தனை செய்தேன் என்றார்.

    பிரதமருக்கு கடிதம்

    பிரதமருக்கு கடிதம்

    கோயில் விவகாரம் குறித்து பிரதமருக்கு தீட்சிதர்கள் அனுப்பிய கடிதம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தமிழிசை சௌந்தர்ராஜன், இந்திய பிரதமருக்கு யார் வேண்டுமானாலும் கடிதம் அனுப்பலாம். அது அவர்களது உரிமை என்றார்.

     பக்கத்து மாநில ஆளுநர்

    பக்கத்து மாநில ஆளுநர்

    நடராஜர் கோயில் விவகாரத்தில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தலையிடுவது குறித்தும் ஆய்வு செய்ய வந்தது குறித்தும் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன், நான் பக்கத்து மாநில ஆளுநர். அதனால் இந்த அரசாங்கம் குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை என தெரிவித்தார்.

    English summary
    Puducherry Governor Tamilisai Soundararajan has said that she should not comment on the Tamil Nadu government in the neighboring state. Speaking after the Sami darshan at the Chidambaram Natarajar Temple, She had prayed that the corona wave should not come except for the wave and wave of devotees coming to the temple.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X