சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ச்சீ..கருப்புனு ஒதுக்குனாங்க! மாடலிங்கில் கலக்கும் ‘மாடல் தமிழச்சி’! சான் ரேச்சல்-ன் சாதனை பயணம்!

Google Oneindia Tamil News

சென்னை : தன் நிறத்தை வைத்து கேலி கிண்டல் செய்தவர்கள் முன்னால் தன் நிறந்தை வைத்தே அதுவும் மாடலிங் துறையில் சாதித்து நிறம் குறித்து தாழ்வு மனப்பான்மையில் இருக்கும் மக்களுக்கு முன்மாதிரியாக சாதித்திருக்கிறார் புதுச்சேரியைச் சேர்ந்த சான் ரேச்சல்.

எங்க வீட்லயே நான் மட்டும்தான் கறுப்பு. உன்னை ஹாஸ்பிடல்ல இருந்து மாத்திக் கூட்டிட்டு வந்துட்டோம்ன்னு கிண்டல் பண்ணியிருக்காங்க என சிரித்த முகத்தோடு பேசுகிறார் நம்ம ஊர் புதுச்சேரியைச் சேர்ந்தவரான சார் ரேச்சல்

சிறிய வயதில் புற்றுநோய் காரணமாக தனது தாயை இழந்த அவர், முழுக்க முழுக்க தந்தையின் அரவணைப்பில் வளர்ந்தார். அவர் குடும்பத்தில் மற்றவர்கள் லைட் கலரில் இருக்க இவருக்கு மட்டுமே தமிழனின் உண்மையான நிறம் வாய்த்திருக்கிறது.

 மாடலிங் பெண் முடியை ஒட்ட வெட்டியதற்கு ரூ.2 கோடி நஷ்ட ஈடு.. நுகர்வோர் ஆணையம் அதிரடி தீர்ப்பு மாடலிங் பெண் முடியை ஒட்ட வெட்டியதற்கு ரூ.2 கோடி நஷ்ட ஈடு.. நுகர்வோர் ஆணையம் அதிரடி தீர்ப்பு

மாடலிங்

மாடலிங்

கருப்பு நிறம் என பலர் அவரை ஒதுக்கிய நிலையில் விடா முயற்சியால் மிஸ் பாண்டிச்சேரி 2020-2021, மிஸ் டார்க் குயின் தமிழ்நாடு 2019, மிஸ் பெஸ்ட் ஆட்டிட்யூட் 2019 என பல டைட்டில்களை ஜெயித்து தற்போது மாடலிங்கில் கலக்கி வரும் இவர்,மிஸ் பாண்டிச்சேரி'தான் என் மனதுக்கு எப்போதும் நெருக்கமானது என்கிறார்.சிறிய வயதிலிருந்தே தன்னை சுற்றியிருக்கும் பலரால் தன் நிறத்தின் காரணமாக பல்வேறு சங்கடங்களை எதிர்கொண்டிருக்கிறார் சான் ரேச்ச.

கருமை நிறம்

கருமை நிறம்

எந்த நிறத்தை வைத்து பிறரால் அவமானங்களையும், புறக்கணிப்புகளையும் சந்தித்த இவர் தற்போது அந்த நிறத்தை வைத்து சாதித்துக் காட்டியுள்ளதோடு, தன் நிறத்தால் தாழ்வு மனப்பான்மையில் இருக்கும் பலருக்கும் முன்மாதிரியாக இருக்கிறார். பொதுவாக மற்ற துறைகளைக் காட்டிலும் மாடலிங் துறையிலும், அழகு சம்பந்தப்பட்ட விஷயங்கள் நிறப் பாகுபாடு இருக்கிறது.

மாடலிங் துறையில் சாதனை

மாடலிங் துறையில் சாதனை

கருமை நிறம் உள்ளவர்களைக் குறைவாகவும், வெண்மை நிறம் கொண்டவர்களை உயர்வாகவும் காட்டுகின்றனர். குறிப்பாக கருப்பு நிறம் கொண்டவர்கள் பல்வேறு விதத்தில் ஒதுக்கப்படுவது தன்னை பெரிதும் பாதித்ததால் அழகுக்கு நிறம் பொருட்டல்ல என்பதை உணர்த்த வேண்டும் என்பதற்காகவே மாடலிங் துறையில் களமிறங்கியதாகக் கூறுகிறார்..

விடாமுயற்சி

விடாமுயற்சி

அதன் முயற்சியாகவே மிஸ் புதுவை 2021, மிஸ் டார்க் குயின் தமிழ்நாடு 2019, மிஸ் பெஸ்ட் ஆட்டிட்யூட் 2019 உள்ளிட்ட பல்வேறு அழகு போட்டியில் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். தற்போது புதுச்சேரியைச் சேர்ந்தவர்களுக்கு மாடலிங் பயிற்சி வகுப்புகள் எடுத்தும் சான் ரேச்சல், மிஸ் இந்தியாவில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டுள்ளார். தற்போது பலரது பேவரைட் லிஸ்டில் சான் ரேச்சல் இடம்பெற்றிருக்கிறார்.

English summary
San Rachel from Pondicherry who used to make fun of people because of her skin color has achieved success in the modeling industry and is a role model for people who have low opinion about color.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X