வீரர்களின் பாதங்களில்... வெள்ளை ரத்தமாய் எங்கள் கண்ணீர்... கவிஞர் வைரமுத்து உருக்கம்
சென்னை: வீரர்களின் பாதங்களில் வெள்ளை ரத்தமாய் எங்கள் கண்ணீர் என்று புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 44 சிஆர்பிஎப் வீரர்களின் வீரமரணத்திற்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இரங்கல் கவிதை வெளியிட்டுள்ளார். அதில்

எப்படிச் சகிப்போம்
காஷ்மீர் ரோஜாக்களில்
மாமிசம் வழிவதை
எப்படிப் பொறுப்போம்
சிம்லா பனிக்கட்டி
சிவப்பாய் உறைவதை
ஏ தீவிரவாதமே
நீ புகுந்தது
எல்லைப் புறத்தில் அல்ல
கொல்லைப் புறத்தில்
இந்திய வீரன் எவனும்
கள்ளச் சாவு சாகமாட்டான்
எங்கள் மரணத்தின் வாசல்
நெஞ்சின் பக்கம் உள்ளது
முதுகுப் பக்கமல்ல
உயிரென்ற ஒரு பொருளே
உலகின் பெரும்பொருள்
அதனை மண்ணுங்கீந்த மாவீரர்களே
விழுகிறது உங்கள் பாதங்களில்
வெள்ளை ரத்தமாய் எங்கள் கண்ணீர்
ஓய மாட்டோம்
சாயமாட்டோம்
எங்கள் தேசிய கீதத்தில்
ஒப்பாரி ராகம் ஒட்டாது
எங்கள் தேசியக்கொடி
அரைக் கம்பத்தில் நிற்காது
அகிம்சா தேசம் பெயர்ப் பலகையை
அவிழ்த்து வையுங்கள்
இந்தியா மன்னிக்காது இனியும்
மாவீரர்களே!
உங்கள் கருகிய சீருடைகளால்
தீவிரவாதத்தின் மீது சவத்துணி போர்த்துவோம்
இந்தியாவின் கண்ணீரை
விரல்களால் அல்ல
துப்பாக்கி முனைகளால்
துடைத் தெடுப்போம்
நாய்கள் கனவு கண்டால்
எலும்புமழை பெய்யும்
நாங்கள் கனவு கண்டால்
ஆகாயம் அதிரும்
நட்சத்திரம் உதிரும்
எங்கள் மாவீரர் அஸ்திகளை
கங்கை காவிரியில் அல்ல
சத்ருக்களின் சாப்பாட்டில் கரைப்போம்
சமாதானம் மட்டுமல்ல
மரணம் கூட
ஒருவழிப் பாதை அல்ல
எம்முயிர் காக்கத்
தம்முயிர் ஈந்த தங்கங்களே
இதோ!
நூற்றுமுப்பது கோடித் தலைகளின்
ஒற்றை வணக்கத்தை
ஏற்றுக்கொள்ளுங்கள்
வீழ்க சூழ்ச்சி
வெல்க வீரம்
வாழ்க நாடு
சூழ்க வெற்றி
-
உச்சநீதிமன்ற நீதிபதியாக மோகனா நியமனம்! தமிழகத்தின் கீர்த்திக்கு இன்னொரு கிரீடம்! வைரமுத்து புகழாரம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications