புரட்சி தலைவர், புரட்சி தலைவி வரிசையில்.. "புரட்சி தாய்.." சசிகலாவுக்கு சூட்டப்பட்ட புது பெயர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை, புரட்சித்தலைவி என்று தொண்டர்கள் அழைப்பது வழக்கம். அந்த வரிசையில் அவருடைய தோழி சசிகலாவுக்கு புரட்சித் தாய் சின்னம்மா என்ற பட்டப் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    ADMKக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது - Jayalalitha நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் சசிகலா பேட்டி

    இதை வழங்கியது வேறுயாருமல்ல.. சசிகலா தரப்பு நிர்வாகத்தில் உள்ள ஜெயா டிவி பிளஸ் சேனல் தான். அப்போது சசிகலாவை, புரட்சித் தாய் சின்னம்மா என்று அந்த சேனல் குறிப்பிட்டது.

    மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு இன்று சசிகலா சென்று அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து அவர் சென்னை தி நகர் இல்லத்தில் இருந்து மெரினா கடற்கரைக்கு காரில் அதிமுக கொடியுடன் பயணம் செய்தார்.

    நேரலை ஒளிபரப்பு

    நேரலை ஒளிபரப்பு

    அவர் வீட்டிலிருந்து கிளம்பி மெரினா கடற்கரை செல்லும் சுமார் 45 நிமிடங்களும் ஜெயா பிளஸ் தொலைக்காட்சி அதை நேரலை ஒளிபரப்பு செய்தது. அவர் செல்லக்கூடிய வழிநெடுகிலும் அதிமுக கொடியுடன் தொண்டர்கள் நிற்பதையும் வாழ்க கோஷங்கள் எழுப்பியும் தொலைக்காட்சியில் காட்டியது.

    சின்னம்மா

    சின்னம்மா

    இதுவரை, சசிகலாவை, தியாக தலைவி என்றும், சின்னம்மா என்றும் மட்டுமே அவர் சார்ந்த தொலைக்காட்சி சேனல் குறிப்பிடுவது வழக்கம். அதேபோலதான், நமது எம்ஜிஆர் நாளிதழ் குறிப்பிடுவது வழக்கம். ஆனால் இன்று புரட்சித் தாய் சின்னம்மா என்று சசிகலா பற்றி அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி

    புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி

    பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர் என்றெல்லாம், எம்ஜிஆர் அதிமுக தொண்டர்களால் அழைக்கப்படுவார். அதே வரிசையில் ஜெயலலிதா புரட்சித் தலைவி என்று அழைக்கப்பட்டார். எனவே புரட்சி என்ற பெயரை சேர்ந்துகொண்டு புரட்சித் தாய் என்று சசிகலாவுக்கு பட்டப்பெயர் வழங்கியுள்ளது இந்த சேனல். சசிகலா தொண்டர்களும் புரட்சி தாயென்று கோஷம் எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.

    புரட்சிக் கலைஞர் விஜயகாந்த்

    புரட்சிக் கலைஞர் விஜயகாந்த்

    புரட்சி என்ற பெயருக்கும் நம்மூர் அரசியல் மற்றும் சினிமாவுக்கும் ரொம்பவே தொடர்பு உண்டு. நாம் மேலே குறிப்பிட்ட, எம்ஜிஆர் , ஜெயலலிதா தவிர்த்து, பின்னாளில் அரசியலுக்கு வந்த விஜயகாந்த் புரட்சி கலைஞர் என்று அவரது தொண்டர்களால் அழைக்கப்பட்டார். நடிகர் சத்யராஜ், புரட்சி தமிழன் என்று அழைக்கப்படுகிறார்.

    சரத்குமார்

    சரத்குமார்

    இத்தோடு புரட்சி என்ற பட்டப் பெயர் நின்றுவிடவில்லை . நடிகராக இருந்து அரசியலுக்கு வந்த சரத்குமார் அவரது தொண்டர்களால் புரட்சி திலகம் என்று அழைக்கப்படுகிறார். இப்படியாக பல்வேறு புரட்சி பெயர்கள் தமிழக சூழ்நிலையில் உலவி வரும் நிலையில் புதிதாக, புரட்சித் தாய் என்ற பட்டம் சசிகலாவுக்கு கொடுக்கப்பட்டிருப்பது கவனிக்கத் தக்கதாக இருக்கிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+