"தூய சக்தியா? வரி ஏய்ப்பு சக்தியா?" அம்பலமானதா விஜய் இரட்டை வேடம்? வாசகர்களே கமெண்ட் செய்யுங்கள்
தமிழக அரசியலில் "ஊழல் அற்ற அரசியல்", "தூய சக்தி" என முழக்கமிட்டு புதிய அவதாரம் எடுத்திருக்கும் நடிகர் விஜய், தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பால் ஒரு தர்மசங்கடமான சூழலில் சிக்கியுள்ளார். மற்ற கட்சிகளை 'ஊழல் கட்சிகள்' என்று விமர்சித்தவர், இன்று வரி ஏய்ப்பு புகாரில் நீதிமன்றத்தால் குட்டுப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

பின்னணி என்ன?
கடந்த 2015-ம் ஆண்டு 'புலி' படத்திற்காக விஜய் பெற்ற ரூ.15 கோடி சம்பளத்தை வருமான வரி கணக்கில் காட்டவில்லை என்பதுதான் வழக்கின் சாரம். வருமான வரித்துறை சோதனையில் இது அம்பலமானதைத் தொடர்ந்து, அவருக்கு ரூ.1.50 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
"நான் நேர்மையானவன், அபராதம் விதிக்க காலதாமதம் ஆகிவிட்டது" என தொழில்நுட்ப காரணங்களைச் சொல்லி விஜய் தாக்கல் செய்த மனுவை இன்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது. "வருமான வரித்துறையின் அபராதம் செல்லும்" என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
முரண்பாடுகளின் உச்சம்!
- ஊழல் விமர்சனம்: மேடைகளில் பேசும் போது திமுக, அதிமுக போன்ற கட்சிகளை ஊழல் கட்சிகள் என்றும், தான் ஒரு "தூய சக்தி" (Thooya Sakti) என்றும் பிம்பத்தை கட்டமைக்கிறார் விஜய்.
- நிதர்சனம்: ஆனால், முறைப்படி அரசுக்கு செலுத்த வேண்டிய வரியைச் செலுத்தாமல், அதை மறைக்க முயன்று நீதிமன்றம் வரை சென்றிருப்பது எந்த விதத்தில் "தூய சக்தி" ஆகும்?
- கேள்விக்குறி: சாதாரண மக்கள் ஒரு சோப்பு வாங்கினால் கூட ஜிஎஸ்டி வரி கட்டுகிறார்கள். ஆனால், கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் ஒரு உச்ச நட்சத்திரம், வரியை மறைத்துவிட்டு 'நேர்மை' பேசுவது முரணாக இல்லையா?
- ஊழல் இல்லாத ஆட்சி சாத்தியமா: ஒப்பீட்டளவில் விஜய்க்கு இது சிறிய தொகை. இதிலேயே முறைகேடு செய்துள்ளார்களே, ஆட்சி அதிகாரம் கையில் கிடைத்தால் என்னவாகும் என்ற கேள்வி எழாமல் இல்லையே.
வாசகர்களுக்கான கேள்வி:
மற்றவர்களை ஊழல்வாதிகள் என்று விமர்சிப்பதற்கு முன்னால், தன் மீதான வரி ஏய்ப்பு புகாருக்கு அபராதம் கட்டச் சொன்ன நீதிமன்ற தீர்ப்புக்கு விஜய் என்ன பதில் சொல்லப் போகிறார்? "தூய சக்தி" என்று தன்னை அழைத்துக்கொள்ளும் ஒருவருக்கு இது அழகா?
உங்கள் கருத்துக்களை கீழே கமெண்ட் செய்யுங்கள்!
-
தமிழ்நாட்டில் ஹையோசங் டிஎன்எஸ் புதிய தொழிற்சாலை.. ஏடிஎம் உற்பத்திக்கு திட்டம்! -
பனையூர் பக்கம் திரும்பும் ரராக்கள்.. காலியாகும் அதிமுக கூடாரம்? எடப்பாடி பழனிசாமி முக்கிய மீட்டிங்! -
அம்மா கொடுத்த அனுமதி.. ரஜினியை போல் விஜய்யும் எனக்கு நெருக்கம்.. ராகவா லாரன்ஸ் சொன்ன வார்த்தை! -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
"புரோட்டோகால் முக்கியம்!" சிங்கப்பெண் உடையில் கிண்டல் செய்த கூல் சுரேஷ்.. வலுக்கும் கண்டனம் -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
கோவையன்ஸ் ஓட்டு மட்டும் போதுமா? மதுரையை மறந்த விஜய்! கொந்தளிப்பில் ’சவுத்’ மக்கள்! என்னாச்சு? -
சனிக்கிழமை தோறும் ஆள்பிடிக்கும் விஜய்.. அதிமுக மாஜி அமைச்சர் ஆர்பி உதயகுமார் கடும் டென்ஷன் -
எம்ஜிஆர் பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு வெள்ளி வாள் வழங்கி தரிசனம் -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
கம்ப்ளைன்ட் கொடுக்க போன என் மீதே கேஸ் போட்டுட்டாங்க.. பிளான் பண்ணி பண்ணுறாங்க! ஜூலி ஆதங்கம்











Click it and Unblock the Notifications