குயின் மேக்கர் சசிகலா தரும் சர்ப்ரைஸ்? எடப்பாடி பழனிசாமிக்கு 4 பேர் வேட்டு? திமுக இறக்கிய உளவுத்துறை
சென்னை: சசிகலா, தினகரன், ஓபிஎஸ், செங்கோட்டையன் போன்றோர் அதிமுகவில் இல்லாத நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு பாதிப்பு ஏற்பட்டு, அதனால் ஆட்சி அமைக்கும் சந்தர்ப்பம் தவறி போகும் என்றெல்லாம் கிடையாது. இந்த நால்வரும் வாக்கு வங்கியில் சிறு தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று பேட்டி ஒன்றில் கருத்து கூறியிருக்கிறார் தமிழக அரசியலில் நிர்வாக ஆசிரியர் திரிசக்தி சுந்தரராமன்.
Aadhan Tamil என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள திரிசக்தி சுந்தரராமன், செங்கோட்டையன், ஓபிஎஸ், சசிகலா, தினகரன் என்ற இந்த நால்வருமே திமுக சார்பாக சென்று விடுவார்களோ? அப்படி சென்றுவிடாமல் இருக்க பாஜக இவர்களது ஃபியூஸையே பிடுங்கும் அளவுக்கு டெல்லி செல்லுமா? என்று கேட்கிறீர்கள்..

ஃபியூஸ் பிடுங்க முடியாது
நிச்சயமாக கிடையாது.. இவர்களுக்கு ஃபியூஸே இல்லை என்பதுதான் என்னுடைய கருத்து.. ஒருவருக்கு வாக்கு வங்கி கணிசமாக இருக்குமானால், அந்த பியூஸை பிடுங்கினால் வாக்குவங்கி அப்படியே எடப்பாடி பக்கம் திரும்பும் என்ற சூழலில்தான், அவரது ஃபியூஸ் பிடுங்கப்படும்.. அப்படியிருக்கும்போது, இந்த நால்வரில் யாருக்குமே அதிகபட்ச வாக்குகள் கிடையாது.
எனவே இந்த நால்வரை பற்றி டெல்லி கவலைப்படுவதற்கான வாய்ப்பே கிடையாது. போதாக்குறைக்கு பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக டிடிவியும் ஏற்கனவே அறிவித்துவிட்டார்..
எனவே பெரிதாக வாக்கு வங்கி இல்லாதபட்சத்தில் இந்த நால்வரும் என்ன பேசினாலும், என்ன செய்தாலும் அது களத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாது. ஆனால் முக்குலத்தோர் வாக்குகளில் ஒரு பகுதியை இவர்களால் நிச்சயம் உடைக்க முடியும் என்பதை மறுக்க முடியாது.. அப்படியே உடைத்தாலும் அதனால் அதிமுகவுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால், ஏதோ ஒரு வகையில் மறைமுகமாக திமுகவுக்கு உதவியாக அமைந்துவிடும்.
சசிகலா தரும் சர்ப்ரைஸ்
அதற்காக திமுக சொல்லித்தான் நால்வரும் இப்படி செய்கிறார்கள் என்று அர்த்தமல்ல.. தங்களுக்கு அரசியல் எதிர்காலம் இருப்பதாக நினைத்து கொண்டு, சொந்த நலனை கருதி இவர்கள் செய்வதெல்லாம், திமுகவுக்கு சாதகமாகிவிடக்கூடும்.
சசிகலா, தினகரன், ஓபிஎஸ், செங்கோட்டையனுக்கு நிகழ்கால அரசியலே கேள்விக்குறியாக இருக்போது, எதிர்கால அரசியல் அதைவிட மிகப்பெரிய கேள்விக்குறி.
ஒன்றிணைந்த அதிமுக ஆட்சியை பிடிக்கும் சர்ப்ரைஸ் கொடுப்பேன் என்றெல்லாம் சசிகலா சொல்லி வருகிறார்.. அப்படி சொல்வது சசிகலாவின் உரிமை என்றாலும் அது சாத்தியமாகுமா தெரியவில்லை. எடப்பாடி பழனிசாமி சசிகலாவை கட்சி தலைவராக ஏற்றுக் கொண்டால் மட்டுமே அது சாத்தியம்.. இப்போதுவரை அரசியல் காரணங்களுக்காக அதிமுக நிர்வாகிகள் சசிகலாவை நேரில் சந்திக்கவில்லை.
குயின் மேக்கர் சசிகலா
ஆனால், சசிகலா இன்னமும் தன்னை ஒரு கிங் மேக்கராவோ, குயினாகவோ நினைத்து கொள்கிறார்.. அதேபோல செங்கோட்டையனின் வாக்கு வங்கி எவ்வளவு என்று தெரியவில்லை.. ஓபிஎஸுடன் யாருமே இல்லை, வைத்திலிங்கம் போன்றோர் மட்டுமே அவருடன் இருக்கிறார்கள்.
2024 கணக்குப்படி டிடிவி தினகரனுக்கு 2 சதவீதம் வாக்கு வங்கி இருந்தது. அதுவும்கூட இன்றைய அரசியலில் குறைந்திருக்கும்.. காரணம், தவெக போன்ற கட்சியின் வரவு, சீமான் தொடர்ந்து களத்தில் இருப்பது போன்ற காரணங்களால் அமமுகவின் வாக்கு வங்கி தற்போது குறைந்திருக்கலாம்.
உளவுத்துறை திமுக
எனவே சசிகலா, தினகரன், ஓபிஎஸ், செங்கோட்டையன் போன்றோர் அதிமுகவில் இல்லாத நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு பாதிப்பு ஏற்பட்டு, அதனால் ஆட்சி அமைக்கும் சந்தர்ப்பம் தவறி போகும் என்றெல்லாம் கிடையாது. இந்த நால்வரும் வாக்கு வங்கியில் சிறு தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
அதேபோல அரசியல் ஆட்டத்தில் அதிக அனுபவம் பெற்ற கட்சி திமுகவாக உள்ள நிலையில், தவெக, நாம் தமிழர் கட்சிகளுக்கு ஆதரவு தருபவர்கள் யார்? வாக்கு வங்கி நிலவரம் உள்ளிட்டவற்றை உளவுத்துறை மூலமாக தமிழக அரசு கணக்கெடுப்பதாக இன்று தகவல் வந்துள்ளது.. இதற்கு காரணம், தவெக, நாம் தமிழர் கட்சி வாக்கு வங்கியை திமுக சீரியஸாக கண்காணிக்க துவங்கியிருக்கிறது.
-
ஸ்டாலின் வெள்ளந்தியாக இருந்து விட்டார்.. காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் குறித்து திமுக நிர்வாகி பதிவு -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
115 ஆக உயரும் திமுக மா.செ-க்கள் எண்ணிக்கை.. கட்சிக்குள் ‘இளம் ரத்தம்’ பாய்ச்ச ஸ்டாலின் விதித்த கெடு! -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
“திமுக ஒரு நச்சுப்பாம்பு” வாயை விட்ட.. மதிமுக அர்ஜுன் ராஜ்! வேடிக்கை பார்க்கும் வைகோ! -
இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட விஜய்.. ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுகிறது அரசு - திமுக கேள்வி -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
“எந்த ரீல்ஸ் மூலம் தவெக வென்றதோ அதன் மூலமே நாமும் வெற்றி பெறுவோம்”.. அதிமுகவினருக்கு எடப்பாடி ஆர்டர் -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்!












Click it and Unblock the Notifications