20 ரூபாய்க்கு சாப்பாடு.. ரயில் பயணிகளுக்கு மலிவு விலையில் மீல்ஸ்.. தயிர் சாதம், புளி சோறு! சர்ப்ரைஸ்
சென்னை: இந்தியாவிலேயே மிகப்பெரிய நெட்வொர்க்கான ரயில்வே நிறுவனமானது, பொதுமக்களின் சேவையில் பெருத்த கவனத்தை செலுத்தி வருகிறது.. இத்தனைக்கும் பல்வேறு வழிகளில், ரயில்வேக்கு ஏராளமான பண இழப்புகள் ஏற்பட்டாலும்கூட, பயணிகளின் நன்மையை கவனத்தில் கொண்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் அசத்தலான ஒரு அறிவிப்பை ரயில்வே வெளியிட்டுள்ளது.. இந்த அதிரடி நடவடிக்கையானது, ரயில் பயணிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
ரெயில் பயணிகளின் நன்மைக்காகவும், வசதிக்காகவும், ரயில்வே பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.. புதுப்புது மாற்றங்களை அமல்படுத்தியும் வருகிறது.

ரயில்வே தந்த சர்ப்ரைஸ்
டிக்கெட் ரிசர்வேஷன் முதல் தட்கல் வரை புக்கிங்குகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.. மற்றொருபக்கம் பயணிகளின் பாதுகாப்பையும் ரயில்வே நிர்வாகம் உறுதிசெய்ய வேண்டியிருக்கிறது. இதற்கான சிறப்பு நடவடிக்கைகளில் ரயில்வே அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.. இப்படிப்பட்ட சூழலில், மீண்டும் ஒரு சர்ப்ரைஸ் அறிவிப்பு வந்துள்ளது..
பெரும்பாலும் ரயில் பயணிகளுக்கு அதிலும் தொலைதூர பயணிகளுக்கு மிகுந்த சிக்கலை தருவது உணவுதான்.. அதுவும் தொலை தூர ரயில்களில், மாலையில் ரயில் ஏறினால்
மறுநாள்தான் மதியம், மாலை நேரங்களில் இறங்க வேண்டிவரும்.. அதேபோல 2 நாட்கள், 3 நாட்கள் ரயிலில் பயணம் செய்ய வேண்டியிருக்கும்.
பார்சல் சாப்பாடு
இதில் ரிசர்வ் செய்யப்படாத பெட்டிகளில் பயணிப்பவர்கள் பெரும்பாலும் சாமானிய மக்கள்தான்.. எனவே இவர்களுக்கு உணவு என்பது மலிவு விலையில் கிடைப்பதில்லை.. ஒருநாளைக்கு வேண்டுமானால் வீட்டிலிருந்து பார்சல் அல்லது ஓட்டலிலிருந்து பார்சலை வாங்கிக்கொள்ளலாம்.. அல்லது ரயில்வே பிளாட்பார்ம்களில் விற்கப்படும் உணவுகளை வாங்கி சாப்பிடுவார்கள்.
ஆனால், இப்படி வாங்கி சாப்பிடும் அளவுக்கு, விலை மலிவாக இருப்பதில்லை.. விற்கப்படும் உணவும் தரமற்று இருப்பதாக புகார்கள் எழுவது வாடிக்கையாகிவிட்டது.. எனவேதான், 20 ரூபாய்க்கு உணவு என்ற திட்டத்தை ரயில்வே கொண்டுவந்துள்ளது.
பிளாட்பாரத்தில் கவுண்ட்டர்கள்
அதாவது, பொதுப்பெட்டிகள் நிற்கும் இடத்தில், பிளாட்பாரத்தில் கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு, அங்கு ரூ. 20 ரூபாய்க்கு மீல்ஸை வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.. இந்த 20 ரூபாய்க்கு ஆலு பூரி, சாதம், பாவ்-பாஜி, மசாலா தோசை, கிச்சடி, சோலே குல்சே/பத்தூரே போன்ற உணவு வகைகள் விற்பனை செய்யப்படுகிறது.. மலிவு விலையில் குடிநீரும் வழங்கப்படுகிறது.
ஐஆர்சிடிசியின் கிச்சன் யூனிட்களிலிருந்தே சாப்பாடு தயாராகி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.. இந்த நடைமுறை ஏற்கனவே 51 ரயில் நிலையங்களில் பயன்பாட்டில் உள்ளதால், மற்ற ரயில் நிலையங்களிலும் கொண்டு வரப்பட உள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு ரயில்வே தரப்பில் கூறப்பட்டது நினைவிருக்கலாம்.
20 ரூபாய்க்கு சாப்பாடு
இந்நிலையில், தெற்கு ரெயில்வே மீண்டும் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டிருக்கிறது.. அதில், "தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்டம், ஐ.ஆர்.சி.டி.சி.யுடன் இணைந்து முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக கடந்த 2023ம் ஆண்டு ரூ.20-க்கு "சிக்கன உணவு" என்ற திட்டம் தொடங்கப்பட்டது.
இந்த "சிக்கன உணவு" திட்டத்தின் நோக்கம் பயணிகளுக்கு சத்தான மற்றும் குறைந்த விலை உணவுகளை வழங்குவதாகும். இந்த திட்டம் குறித்து பல பயணிகளுக்கு இன்றளவும் தெரிவதில்லை.
64 சிக்கன உணவு கடைகள்
அதனால் சென்னை சென்டிரல், எழும்பூர், செங்கல்பட்டு, அரக்கோணம், காட்பாடி ஆகிய ரெயில் நிலையங்களில் சிக்கன உணவு விற்பனை மையங்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், 27 ரெயில் நிலையங்களில் 64 சிக்கன உணவு கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த மையங்கள் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் வந்து நிற்கும் இடத்தில் வைத்து பயணிகளுக்கு நேரடியாக உணவு வழங்குகின்றன.
இந்த கடைகளில் 200 கிராம் எடையுள்ள எலுமிச்சை சாதம், தயிர் சாதம், புளி சாதம், பருப்பு கிச்சடி மற்றும் பூரி-கிழங்கு போன்ற அரிசி வகை உணவுகள் விற்பனை செய்யப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications