தமிழகத்தில் நவம்பர் 8 வரைக்கும் மழை வெளுத்து வாங்கும் - வெதர்மேன் பிரதீப் ஜான்
வடகிழக்குப் பருவமழை தமிழ்நாட்டில் தீவிரமடையும் என்றும் நவம்பர் 8ஆம் தேதி வரை தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார் மழை மனிதர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதிப் ஜான்.
சென்னை: தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் காலை நேரத்திலும் மாலை நேரங்களிலும் உள் மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
வடகிழக்குப் பருவமழை இன்று முதல் தீவிரமடையும் என்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. தமிழகம் முழுவதும் 5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. காலை முதல் சென்னை, காரைக்காலில் கனமழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் வரும் 8ஆம் தேதி வரைக்கும் பருவமழை தீவிரமடையும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். இன்று சென்னை, பாண்டிச்சேரி, கடலூர், நாகை, திருவாரூர், காரைக்கால், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.
தென் தமிழகத்தில் உள் மாவட்டங்களிலும் மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இன்றைய தினம் மேற்கு மாவட்டங்களான திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழை நீடிக்கும். நவம்பர் 8ஆம் தேதி வரைக்கும் தேனி, விருதுநகர், தென்காசி, திண்டுக்கல், திருநெல்வேலியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

வடகிழக்குப் பருவமழையை பொறுத்தவரைக்கும் கடலோர மாவட்டங்களில் காலை நேரங்களிலும், உள் மாவட்டங்களில் மாலை நேரங்களிலும் இரவிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications