மழை பெய்த அடையாளமே இல்ல! வெள்ளம் வழிந்தோடியது..சென்னை மாநகராட்சியை பாராட்டி பாடகர் ஸ்ரீனிவாஸ் ட்விட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மந்தவெளியில் மழை நீர் ஒரு சொட்டு கூட இன்றி வழிந்தோடியதை சுட்டிக்காடி சென்னை மாநகராட்சிக்கு பாடகர் ஸ்ரீனிவாஸ் பாராட்டு தெரிவித்து ட்விட் பதிவிட்டுள்ளார். இந்த ட்விட்டுக்கு சென்னை மாநகராட்சியும் நன்றி தெரிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக பருவமழை தொடங்கினால் போதும் சென்னையில் தண்ணீர் தேங்கி மக்கள் கடும் அவதிப்படும் நிலை ஏற்படும் சூழல் ஏற்படுகிறது.

சென்னையின் பிராதன பகுதிகள், சாலைகளில் கூட மழை நீர் தேங்கியது. வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்து மக்கள் கடுமையான பாதிக்கப்படும் நிலை இருந்தது.

 மழைக்காலங்களில் சென்னை..

மழைக்காலங்களில் சென்னை..

வருடம் தோறும் மழைக்காலங்களில் இது தொடர்ந்ததால் சென்னை மக்கள் பெரும் கஷ்டத்திற்கு உள்ளாகினர். கடந்த ஆண்டு கூட பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. சிறு மழை பெய்தால் கூட சாலைகளிலும் தெருக்களில் முட்டிக்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டது. மழைக்காலங்களில் சென்னை மக்கள் படும் இந்த கஷ்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது.

 மிகப்பெரிய வடிகால்கள்..

மிகப்பெரிய வடிகால்கள்..

அதாவது சாலைகளின் ஓரம் வெள்ள நீர் வெளியேறுவதற்காக மிகப்பெரிய வடிகால்கள் அமைக்கப்பட்டு ஆறுகளில் கலக்கும் வகையில் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த 4 முதல் 5 மாதங்களாக நடைபெற்று வந்தன. கிட்டத்தட்ட இதற்காக சென்னையில் எல்லா சாலைகளின் ஓரமும் குழி தோண்டப்பட்டது. சாலை ஓரங்களில் குழி தோண்டி பணிகளை செய்து வந்தனர்.

வேகமாக வடிந்த தண்ணீர்

வேகமாக வடிந்த தண்ணீர்

இது மக்களுக்கு கடுமையான இடைஞ்சல்களை ஏற்படுத்தியது. இருந்தாலும் மழை வெள்ளத்தை தடுக்கும் என்பதால் தொடர்ந்து பணிகள் நடந்தன. பெரிய அளவில் அமைக்கப்பட்டு இருக்கும் இந்த குழிகளில் நீர் வெளியேறுவதற்கான கால்வாய் போன்ற வசதியை ஏற்படுத்தி உள்ளனர். பருவமழை நெருங்கி வருவதால் இந்த பணிகள் வேகமாக செய்யப்பட்டு வந்தன. இந்த நிலையில் தான் மழை காரணமாக சென்னையில் பல சாலைகளில் வெள்ளம் ஏற்படாமல் தண்ணீர் வேகமாக வடிந்துள்ளது.

 கடந்த ஆண்டு..

கடந்த ஆண்டு..

இரண்டு வாரங்களுக்கு முன் சென்னையில் மழை பெய்த போது வெள்ளம் வேகமாக வடிகிறதா? என்று சோதனை செய்யப்பட்டது. அதன்படியே வேகமாக வடிந்தது. சென்னை மாநகராட்சியின் பணிக்கு பல்வேறு தரப்பிலும் பாராட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளன. சமூக வலைத்தளங்களில் பலரும் கடந்த முறை சிறிய மழைக்கு கூட வெள்ளத்தில் சாலைகள் மிதந்தன. ஆனால், தற்போது சிறப்பான பணிகளை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது என பாராட்டி பதிவுகளை வெளியிட்டு வந்தனர்.

மழை பெய்ததற்கான சுவடே இல்லாமல்

மழை பெய்ததற்கான சுவடே இல்லாமல்

சூளை, பட்டாளம் என சில பகுதிகளிலும் மழை நீர் தேங்கிய போதிலும் அதையும் உடனடியாக வெளியேற்ற சென்னை மாநகராட்சி ஊழியர்கள் இரவு பகலாக பணியாற்றி வெள்ளநீரை வெளியேற்றினர். குடியிருப்புகள், சுரங்கப்பாதைகளில் தேங்கி இருந்த மழைநீர் மோட்டார் பம்புகளை பயன்படுத்தி அகற்றும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனால்,மழை விட்ட சில மணி நேரங்களில் மழை பெய்ததற்கான சுவடே இல்லாமல் மாறிவிட்டது என்று சொல்லும் அளவுக்கு உள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு பாராட்டுக்கள்

சென்னை மாநகராட்சிக்கு பாராட்டுக்கள்

சில இடங்களில் தண்ணீர் தேங்கினாலும் அதை அகற்றுவதற்கான பணிகள் தீவிரமாக நடக்கிறது. இதை மாநகராட்சி அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். முதல்வர் உத்தரவின் பேரில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்த ஆண்டு மழையின் போது தற்போது தேங்கும் பகுதிகளில் கூட மழை நீர் தேங்காதவறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியின் இந்த பணிக்கு பல்வேறு தரப்பிலும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

 பாடகர் ஸ்ரீனிவாஸ் பாராட்டு

பாடகர் ஸ்ரீனிவாஸ் பாராட்டு

அந்த வகையில், சென்னை மந்தைவெளி பகுதியில் கடந்த ஆண்டு மழையின் போது தண்ணீர் குளம் போல் தேங்கியதாகவும் நடப்பு ஆண்டில் அதற்கான சுவடே இல்லாமல் மாறிவிட்டதாக சஞ்செய் எனபவர் தனது ட்விட்டரில் பகிர்ந்து இருந்தார். இந்த ட்விட்டை சுட்டிக்காட்டி பிரபல பின்னணி பாடகர் ஸ்ரீனிவாஸ், சிறப்பான பணிகள் மேற்கொண்டு இருப்பதாக சென்னை மாநகாராட்சிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னை மாநகாரட்சியும் இதற்கு நன்றி தெரிவித்து பதில் ட்விட் செய்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+