பீட்டர் அல்போன்ஸ் திடீர் கலகக் குரல்- காமராஜர் உள்ளிட்டோர் படங்கள் எங்கே? காங். தலைமை மீது பாய்ச்சல்
காங்கிரஸ் தலைமைகு எதிராக பீட்டர் அல்போன்ஸ் கலகக் குரல் எழுப்பியுள்ளார்.
சென்னை: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ராய்ப்பூர் மாநாட்டு விளம்பரங்களில் காமராஜர் உள்ளிட்ட பல தலைவர்கள் இடம்பெறாதற்கு அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு காங்கிரஸ் கட்சியின் முகங்களில் ஒருவரான பீட்டர் அல்போன்ஸ், கட்சித் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் 3 நாட்கள் மாநாடு சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெற்றது. இம்மாநாட்டில் 15,000க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கான வியூகம் உள்ளிட்டவை இந்த ராய்ப்பூர் மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.

ராய்ப்பூரி மாநாட்டில் காங்கிரஸ் செயற்குழுவுக்கான உறுப்பினர்களை நியமிக்க அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு, அக்கட்சியின் 45 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு ஒப்புதல் வழங்கியது. காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை 23-ல் இருந்து 35 ஆக உயர்த்தப்பட உள்ளது. காங்கிரஸ் கமிட்டியில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது குறித்தும் இம்மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. இந்த மாநாட்டின் இறுதி நாளான இன்று ராய்ப்பூரில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குதல் உள்ளிட்ட பல தீர்மானங்கள் ராய்ப்பூர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் எம்.பியும் தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் திடீரென காங்கிரஸ் தலைமைக்கு எதிராக கலகக் குரல் எழுப்பியுள்ளார். இது தொடர்பாக பீட்டர் அல்போன்ஸ் இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ரெய்ப்பூரில் நடக்கும் மாநாட்டிற்கு முழுப்பக்க விளம்பரங்களை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் பேரியக்கத்தின் முன்னோடி தலைவர்கள் மவுலானா அபுல் கலாம் ஆசாத், பெருந்தலைவர் காமராஜர்,பாபு ஜெகஜீவன்
ராம் படங்கள் இடம் பெறாதது வருத்தமளிக்கிறது. சுதந்திர போருக்கும், காங்கிரஸ் பேரியக்கத்திற்கும் இஸ்லாமிய தலைவர்களின் பங்களிப்பை நாமாவது அங்கீகரிக்க வேண்டும்.பெருந்தலைவர் இரண்டு பிரதமர்களை அடையாளம் கண்டு காங்கிரஸை காத்தவர். அண்ணல் அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாவலர். பாபு ஜெகஜீவன் ராம் அப்பழுக்கற்ற காங்கிரஸ்காரர். இவ்வாறு பீட்டர் அல்போன்ஸ் பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் ஏற்கனவே சோனியா குடும்பத்தின் ஆதிக்கத்துக்கு எதிராக 23 தலைவர்கள் போர்க்கொடி தூக்கினர். அதில் பல சீனியர் காங்கிரஸ் தலைவர்கள் காங்கிரஸைவிட்டே வெளியேறிவிட்டனர். குலாம் நபி ஆசாத் தனி கட்சியே தொடங்கிவிட்டார். தற்போது தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தலைமைக்கு எதிராக கலக குரலை பீட்டர் அல்போன்ஸ் எழுப்பி உள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications