சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரஜினி - பாஜக - அதிமுக.. உருவாகிறது மாபெரும் கூட்டணி?.. சென்னையில் அமித் ஷா கொடுத்த சிக்னல்!

சென்னையில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் 2021 சட்டசபை தேர்தல் கூட்டணிக்கான சிக்னல்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் 2021 தமிழக சட்டசபை தேர்தல் கூட்டணிக்கான சிக்னல்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

சென்னை கலைவாணர் அரங்கில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எழுதிய "கவனித்தல், கற்றல் மற்றும் தலைமையேற்றல்" என்ற புத்தகம் இன்று வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக தலைவர்கள் மற்றும் ரஜினிகாந்த், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கடந்த இரண்டு வருடங்களாக செய்த பணிகள் குறித்த ஆவண புத்தமாக இது வெளியாக இருக்கிறது. இதில் ரஜினிகாந்த் பேசியது பெரிய வைரலாகி உள்ளது.

பாஜகவைத் தேடி வந்த பிச்சைக்காரர்கள்.. டெல்லியில் வெடித்த குண்டு.. செம டென்ஷனில் அமித் ஷா!பாஜகவைத் தேடி வந்த பிச்சைக்காரர்கள்.. டெல்லியில் வெடித்த குண்டு.. செம டென்ஷனில் அமித் ஷா!

மூன்று

மூன்று

இந்த விழால் அதிமுக சார்பாக முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், நடிகர் ரஜினிகாந்த், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் கலந்து கொண்டனர். இப்படி நான்கு முக்கியமான நபர்களும் ஒரே மேடையில் இருப்பது இதுவே முதல்முறையாகும். தேர்தல் நேரத்தில் கூட இவர்கள் ஒரே மேடைக்கு வந்தது இல்லை.

என்ன பேசினார்

என்ன பேசினார்

இந்த விழாவில் முதலில் பேசிய ரஜினிகாந்த், அமித் ஷாவை புகழ்ந்து தள்ளினார். அமித் ஷா காஷ்மீர் விஷயத்தில் எடுத்த நடவடிக்கை மிக மிக முக்கியமானது. அவர் மிகவும் துணிச்சலான நடவடிக்கையை எடுத்து இருக்கிறார். அவரின் மிஷன் வெற்றிபெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது, என்று பேசினார்.

நன்றி சொன்னார்

நன்றி சொன்னார்

இந்த பேச்சை வியந்து பார்த்த அமித் ஷா, ரஜினியுடன் ஒரே மேடையில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் காஷ்மீர் விஷயத்தில் எடுத்த நிலைப்பாடு மிகுந்த சந்தோசம் கொடுக்கிறது. தன்னுடைய அழைப்பை ஏற்று இங்கே அவர் வந்ததற்கு நன்றி, என்று பதிலுக்கு ரஜினியை புகழ்ந்து தள்ளினார்.

முன்பே அழைப்பு

முன்பே அழைப்பு

இந்த புத்தக வெளியீட்டு விழாவிற்கு ரஜினிகாந்திற்கு முன்பே அழைப்பு சென்றுவிட்டதாக கூறுகிறார்கள்.அமித் ஷா வருகிறார், அதிமுக தலைவர்களும் வருவார்கள் அதனால் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று கண்டிப்பாக கூறி அழைத்து இருக்கிறார்கள். ஆனால் ரஜினி காஷ்மீர் விஷயத்தை மேடையில் பேசுவார் என்று பாஜக தலைவர்களே எதிர்பார்க்கவில்லையாம்.

என்ன மீட்டிங்

என்ன மீட்டிங்

இந்த விழாவிற்கு ரஜினி வருவது குறித்து நேற்று முதல்வர் பழனிச்சாமியிடமும் அமித் ஷா பேசி இருப்பதாக தெரிகிறது. 2021 சட்டசபை தேர்தலுக்காக இப்போதே வலுவான கூட்டணியை உருவாக்க வேண்டும். லோக்சபா தேர்தல் போல சொதப்ப கூடாது என்று அமித் ஷா இந்த சந்திப்பில் கண்டிப்பாக கூறிவிட்டதாக பேசிக்கொள்கிறார்கள்.

வேறு என்ன

வேறு என்ன

இதை எல்லாம் கருத்தில் கொண்டுதான் ஆடிட்டர் குருமூர்த்தியையும் இன்று தலைவர்களுடன் சேர்த்து மேடை ஏற்றி இருக்கிறார்கள். அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் இணைப்பிற்கு முக்கிய காரணமாக இருந்தவர் குருமூர்த்தி என்ற ஒரு பேச்சு நிலவி வருகிறது. அதிமுக, பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையில் கூட இவர் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாய்ப்பு உள்ளது

வாய்ப்பு உள்ளது

அதனால் குருமூர்த்தி ரஜினியுடன் கூட்டணி குறித்து பேச வாய்ப்புள்ளது என்கிறார்கள். ரஜினி அரசியல் அறிவிப்பை வெளியிட்டு ஏறக்குறைய 2 வருடம் ஆக போகிறது. இந்த வருட இறுதியில் ரஜினி கட்சி ஆரம்பிப்பார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதனால் ரஜினி - அதிமுக - பாஜக என்ற மிகப்பெரிய கூட்டணியை உருவாக்க அமித் ஷா முயன்று வருகிறார். அதற்கு அவர் கொடுத்த சிக்னல் இந்த மேடை என்று கூறுகிறார்கள்.

இனி அடிக்கடி வருவார்

இனி அடிக்கடி வருவார்

அதனால்தான் மூவரையும் இப்படி மேடை ஏற்றி இருக்கிறார்கள் எனப்படுகிறது. ரஜினி தேர்தலில் நிற்க வேண்டும் என்றால், குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு முன்பாவது கட்சி தொடங்க வேண்டும். ஆகவே 2021 தேர்தலுக்காக எப்படியும் இந்த வருட இறுதியில் கண்டிப்பாக கட்சி தொடங்கி விடுவார் என்று கூறுகிறார்கள். ரஜினியை வைத்து பெரிய கூட்டணியை உருவாக்க அமித் ஷா இனி அடிக்கடி சென்னை வருவார் என்றும் பேசிக்கொள்கிறார்கள்.

English summary
Rajini, BJP, and AIADMK joined together in a single stage, trigger alliance prospects.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X