இதான் ஸ்டாலின்.. ரஜினியை விடுங்க.. "தளபதி"யால் எல்லாம் முடியும்.. திரண்டு வந்த சொன்ன "மகளிர்"
ரஜினி மன்ற மகளிர் அமைப்பினர் இன்று திமுகவில் இணைந்துள்ளனர்
சென்னை: நாளுக்கு நாள் தன்னுடைய செல்வாக்கையும், கட்சியின் பலத்தையும் ஆழமாக வேரூன்றி கொண்டே போகிறார் திமுக தலைவர் முக ஸ்டாலின்... ஏற்கனவே ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தரப்பில் இருந்து பலர், திமுக பக்கம் திரண்டு வந்துள்ளபோது, இப்போது ரஜினியின் மகளிர் அமைப்பினரும் திமுகவில் இணைந்துள்ளது கூடுதல் பரவசத்தையும், தெம்பையும் அக்கட்சிக்கு ஏற்படுத்தி வருகிறது.
Recommended Video
அரசியலுக்கு வரும் முடிவில் இருந்து பின்வாங்கிய ரஜினிகாந்த், தன்னுடைய, அவரவர் விருப்பப்பட்ட கட்சிகளில் இணைந்து கொள்ளலாமென்று தன்னுடைய மன்றத்தினருக்கு சொல்லிவிட்டார்.. இதனால், அப்செட்டின் உச்சிக்கே போன, சில ரஜினி நிர்வாகிகள் பின்னாளில் மாற்று கட்சியில் இணையவும் முடிவு செய்தனர்.
அதன்படி, ரஜினி மக்கள் மன்றத்தின் 4 மாவட்ட செயலாளர்கள் திமுகவில் ஸ்டாலின் முன்னிலையில் இணைந்து மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தினர்.

அண்ணா அறிவாலயம்
இதற்கு காரணம், ரஜினிக்கு அரசியல் எதிராக கருதப்பட்டது முக ஸ்டாலின்தான்.. அதனால்தான், ரஜினி சம்பந்தமான போஸ்டர்கள் எதுவானாலும், அதை கொண்டுபோய் அண்ணா அறிவாலயம் முன்பு ரசிகர்கள் ஒட்டி வந்தனர்... ஆனால் வெறும் பத்தே நாளில், அதே அறிவாலயத்தில் ரஜினி மக்கள் மன்றத்தினர் திமுகவில் இணைந்தது பரபரப்பாக பேசப்பட்டது. அதிலும், தூத்துக்குடி மாவட்ட செயலாளராக இருந்த ஏ. ஜோசப் ஸ்டாலின், இணைந்தது மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டது..

புதிய பொறுப்பு
இந்த ஜோசப் ஸ்டாலினின் சென்னை அட்ரஸில்தான், ரஜினி தன் கட்சியை பதிவு செய்து வைத்ததாக முதலில் தகவல் வெளியானது. இவர் தூத்துக்குடியில் செல்வாக்கானவர்.. ரொம்பவும் பிரபலம்... அதனால்தான் இவருக்கு திமுகவில் இப்போது மாநில பொறுப்பு வழங்கப்பட்டது.. சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு இணைச் செயலாளராக அவரை நியமித்துள்ளனர்..இது ஒரு பக்கம், திமுகவிலேயே சிலருக்கு அதிருப்தியையும் தந்தது. நேத்து வந்தவங்களுக்கெல்லாம் சீட் தந்தால், அப்பறம் நாங்க எங்கே போவது? என்ற ஆதங்க குரல்களும் கேட்டதை மறுக்க முடியாது.

இணைப்பு
இப்போது இன்னொரு ஸ்வீட் நியூஸ் திமுக தொண்டர்களுக்கு கிடைத்துள்ளது.. ரஜினி மக்கள் மன்றத்தின் மகளிரணி முக்கிய நிர்வாகிகள், அந்த அமைப்பில் இருந்து விலகி, இன்று திமுகவில் இணைந்துள்ளனர்.. அண்ணா அறிவாலயத்தில் முக ஸ்டாலின் முன்பு அவர்கள் தங்களை திமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைத்து கொண்டனர்.

விடிவெள்ளி
இதுகுறித்து மகளிர் அணியினர் செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "மக்கள் மன்றத்தில் இருந்து நாங்கள் திமுகவில் இணைந்துள்ளோம்.. கட்சி வளர்ச்சிக்கு பாடுபட போகிறோம்.. அடுத்தடுத்து, 500 மகளிர்கள் வந்து இணைய உள்ளனர்.. எங்க இருந்தாலும் நாங்க ரஜினி ரசிகர்கள்தான்.. யாருக்குமே எதிரிகளாக நாங்கள் இதுவரை மன்றத்தில் சித்தரிக்கப்பட்டதில்லை.. ஆனால், இப்போ நடக்கிற ஆட்சி சரி கிடையாது.. இதை மாற்ற தளபதியால்தான் முடியும்.. அவரால்தான் தமிழகத்துக்கு விடிவெள்ளி கிடைக்கும்.. அதனால்தான் நாங்கள் திமுகவில் வந்து இணைந்துள்ளோம்." என்று தெரிவித்துள்ளனர்.

அதிமுக
ஒருமுறை ராஜேந்திர பாலாஜி ஒரு கூட்டத்தில் பேசும்போது சொன்னார், "ரஜினி அமைப்பில் இருந்து பலரும் அதிமுக பக்கம்தான் வந்து கொண்டிருக்கிறார்கள்.. வேறு கட்சிக்கு அவர்கள் போவதில்லை.. ஏனென்றால், ஆன்மீக அரசியல் பற்றி அவர்கள் புரிந்து வைத்துள்ளனர் என்றார்.. ஆனால், யதார்த்தம் அப்படி இல்லை போல தெரிகிறது.. நாளுக்கு நாள் ரஜினி ரசிகர்கள் அறிவாலயத்துக்குதான் படையெடுத்து கொண்டிருப்பதை பார்த்தால், ஸ்டாலின் மீதான நம்பிக்கை அதிகமாகி கொண்டே போவது புலப்படுகிறது..!












Click it and Unblock the Notifications