வரும் ஆனா வராது.. புதனுக்காக காத்திருக்கும் ரஜினி ரசிகர்கள்.. பின்னணியில் நடக்கும் ஏற்பாடுகள்!
நடிகர் ரஜினிகாந்த் அடுத்த வாரம் வர இருக்கும் அவரது பிறந்த நாளின் போது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவாரா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Recommended Video

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அடுத்த வாரம் வர இருக்கும் அவரது பிறந்த நாளின் போது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவாரா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்களுக்கு 2018 கொஞ்சம் சிறப்பான வருடம்தான். அவர்களுக்கு இந்த வருடமே ரஜினியின் அரசியல் வருகை குறித்த அறிவிப்புடன்தான் தொடங்கியது.
அதேபோல் ரஜினியும் தொடர்ச்சியாக சினிமாக்களை வெளியிட்டு ரசிகர்களின் ஹார்ட் பீட்களை உச்சத்தில் வைத்து இருந்தார். ஆனால் ரஜினி ரசிகர்கள் எதிர்பார்த்த வேறு ஒரு விஷயம் மட்டும் நடக்கவே இல்லை.

சொல்லவில்லை
அரசியல் வருகையை அறிவித்த பின் ரஜினி வேறு எந்த விதமான முக்கிய அரசியல் நடவடிக்கையும் எடுக்கவில்லை. கட்சியின் பெயர் என்ன, கட்சியின் கொடி என்ன , கொள்கை என்ன என்று எந்த ஒரு விஷயத்தையும் ரஜினி சொல்லவில்லை. இது அவரது ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை அளித்தது.

பெரிய சொதப்பல்
அதேபோல் ரஜினி கொடுத்த பேட்டிகளில் எல்லாம் எதோ ஒரு வகையில் சொதப்பினார். தவறாக பேசி மாட்டிக் கொள்வது, மக்களுக்கு விருப்பம் இல்லாத கருத்துக்களை பேசுவது என்று ரஜினி முழுக்க முழுக்க மக்களுக்கு எதிரான கருத்துக்களை பேசி பெரும் விமர்சனத்திற்கு உள்ளானார். முக்கியமாக கடைசியாக கொடுத்த சில பேட்டிகள் பெரிய நெகட்டிவ் வைரல் ஆனது.

தகவல் வந்தது
இந்த நிலையில்தான் சில வாரம் முன் நடிகர் ரஜினி, டிசம்பர் மாதத்தில் தனது கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று தகவல் வந்தது. சென்ற வருடம் போல இந்த வருடம் டிசம்பரில் அவர் தனது ரசிகர்களுக்கு அரசியல் அறிவிப்பை அளித்து சந்தோசம் கொள்ள வைக்கப்போகிறார் என்று தகவல்கள் வந்தது.

இன்னும் அழைப்பு இல்லை
ஆனால், ரஜினி இதுகுறித்து இன்னும் தனது ரசிகர்களுக்கு எந்த கடிதமும் அனுப்பவில்லை. இந்த மாதம் சந்திப்பு நடத்த போவதாகவும், கூட்டம் நடத்த போவதாகவும் ரஜினி தனது ரசிகர்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கொடுக்கவில்லை. இதனால் இந்த வருடம் அப்படி எதுவும் அறிவிப்பு வருமா என்று ரஜினி ரசிகர்கள் காத்து இருக்கிறார்கள். ஆனால் ரஜினி பிண்ணணியில் இதற்காக சில ஏற்பாடுகள் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

பாஜக திட்டம்
அதேபோல் ரஜினி இப்போதே கட்சி தொடங்குவதுதான் சரியாக இருக்கும் என்று அவருக்கு நெருக்கமான பாஜக கருதுவதாக தகவல்கள் வருகிறது. கமல் கட்சி தொடங்கி ரேஸில் முன்னிலையில் இருப்பதால், ரஜினியும் இப்போதே கட்சி தொடங்குவதுதான் சரி என்று பாஜக நினைக்கிறது. அப்போதுதான் ரஜினி நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு பிரச்சாரம் செய்ய வாய்ப்பு அமையும் என்றும் பாஜகவிற்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள்.

வருமா?
இதனால் தற்போது ரஜினி ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் இருக்கிறார்கள். அட, இவர் அரசியல் கட்சியை தொடங்குவாரா? இல்லையா? என்று காத்து இருக்கிறார்கள். ரஜினியும் வரும் ஆனா வராதா என்று கடந்த ஒரு வருடத்தை ஓட்டிவிட்டார். வரும் புதன் கிழமை அவரின் பிறந்த நாளின் போது என்ன அறிவிப்பை வெளியிடுவார் என்று பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications