சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஏன் இப்படி போஸ்டர் அடிக்கறீங்க.. எல்லாத்தையும் நிறுத்துங்க".. ரஜினி மன்றத்தினருக்கு திடீர் உத்தரவு

Google Oneindia Tamil News

சென்னை: "ஏன் இப்படி போஸ்டர் அடிக்கறீங்க? தலைமையிடம் இருந்து உத்தரவு வரும்வரை யாரும் போஸ்டர் அடிச்சு ஒட்டாதீங்க" என்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்.. இது ஒரு வாய்மொழி உத்தரவு என்றும் சொல்லப்படுகிறது.

2 தினங்களாக ஒரு செய்தி பரபரத்து காணப்பட்டது.. எல்லா கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகிவிட்ட நிலையில், இன்னும் தலைவர் ரஜினிகாந்த் மட்டும் எந்த அறிவிப்பும் வெளியிடாமல் உள்ளாரே என்ற ஆதங்கம் மன்றத்து நிர்வாகிகளுக்கு எழுந்தது.

இதனால் ஆங்காங்கே 'இப்போ இல்லேன்னா எப்பவுமே இல்லை" என்று போஸ்டர்களை அடித்தும் ஒட்டினார்கள். வேலூர், மதுரை, இராமநாதபுரம் கோவை உள்ளிட்ட நிர்வாகிகள் தரப்பில்தான் இப்படி போஸ்டர்கள் அச்சடித்து ஒட்டப்பட்டது.

 RAJINI: RNM asks its cadres not to paste any poster regarding politics

இந்நிலையில், "தேர்தலுக்கு இன்னும் 6 மாசம்தான் இருக்கு.. இப்போதுகூட, அரசியல் முடிவை தெளிவாக அறிவிக்கமாட்டேன் என்கிறார் தலைவர்.. இப்போது அவரை மன்றத்தினருக்கு வரவில்லை. இப்போ அதிமுக, திமுக உட்பட எல்லா கட்சிகளும் தேர்தல் வேலையில் இறங்கிவிட்டன.. ஆனால், தலைவர் கட்சி பற்றியே பேசமாட்டேன் என்கிறார்... இதெல்லாம் எங்களுக்கு வருத்தமாக உள்ளது... கூடிய சீக்கிரம் அவர் ஒரு நல்ல முடிவை அறிவிக்க வேண்டும்" என்று ஆதங்க கோரிக்கை விடுத்தவாறே இருந்தனர். இதனால் ரஜினி தரப்பு கடுமையாக அப்செட் ஆனதாக தெரிகிறது.

"சரியா சொல்ல மாட்டேங்குறார்.. இப்படி அமைதியா இருந்தால் எப்படி?".. ரஜினி மீது ஆதங்கத்தில் மன்றங்கள்!

இந்நிலையில், மன்றத்து நிர்வாகிகளுக்கு ஒரு உத்தரவு வந்துள்ளாம்.. அதாவது தலைமையிடம் இருந்து உத்தரவு வரும் வரை போஸ்டர்கள் அடிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாம். மேலும் தலைமை உத்தரவு இல்லாமல் தன்னிச்சையாகவும் செயல்பட வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாம்.. இந்த உத்தரவை ரஜினி மன்ற நிர்வாகிகளுக்கு அதன் தலைமை நிர்வாகி சுதாகர் வாய்மொழி உத்தரவாக பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

English summary
RAJINI: RNM asks its cadres not to paste any poster regarding politics
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X