• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

Rajinikanth: ரஜினி சொன்ன மாதிரி ராமர் சிலை நிர்வாணமாக கொண்டுவரலை.. அவுட்லுக் ஜி.சி.சேகர் ஒப்புதல்

|

சென்னை: 1971 சேலம் மாநாட்டில் ராமர் சிலை நிர்வாணமாகக் கொண்டுவரப்படவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் மேற்கோள் காட்டிய அவுட்லுக் ஏட்டின் கட்டுரையாளர் ஜி.சி.சேகர் ஒப்புக் கொண்டுள்ளார்...

சென்னை துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், 1971-ல் சேலத்தில் பெரியார் நடத்திய ஊர்வலத்தில் ராமர் சிலை ஆடை இல்லாமல் கொண்டுவரப்பட்டது; ராமர் சிலைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது; இதை சோ ராமசாமி துக்ளக் ஏட்டில் வெளியிட்டதால் எதிர்ப்பை சந்திக்க நேர்ந்தது என கூறியிருந்தார்.

Rajinikanth issue: Outlook GC Sekar denies Nude Rama, Sita idols in 1971 DKs Salem procession

இதனை மறுத்துள்ள பெரியார் இயக்கத்தினர், சேலம் ஊர்வலத்தில் ராமர் சிலை ஆடை இல்லாமல் கொண்டுவரப்பட்டது என ரஜினிகாந்த் பொய் சொல்கிறார்; இது திட்டமிட்ட அவதூறு; இதற்கு ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றனர்.. ஆனால் ரஜினிகாந்த் தாம் உண்மையை தெரிவித்ததாகவும் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் கூறினார்.

அத்துடன் இதற்கு ஆதாரமாக 2017 அவுட்லுக் ஏட்டில் வெளியான கட்டுரையில் இச்செய்தி இடம்பெற்றுள்ளது என ஜெராக்ஸ் காபியை காட்டினார். ரஜினி சுட்டுக்காட்டிய கட்டுரையை எழுதியவர் மூத்த பத்திரிகையாளர் ஜி.சி. சேகர்.

நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் நேற்று இரவு, தலைமை செய்தி ஆசிரியர் குணசேகரன் ஒருங்கிணைத்த காலத்தின் குரல் நிகழ்ச்சியில் ஜி.சி.சேகர் பங்கேற்று பேசியதாவது:

குணசேகரன்: ஜி.சி.சேகர், நீங்க எழுதின கட்டுரையைத்தான் ரஜினிகாந்த் மேற்கோள் காட்டினார். நீங்கள் எழுதின கட்டுரை என்னிடமும் இருக்கிறது. இதில் ஒரு நோக்கத்துடன் ரஜினிகாந்த் பேசியிருக்கிறார். ரஜினிகாந்த் பேசுனத்துக்கு ஒரு முழுமையான ஆதாரத்தை சந்தேகத்துக்கு இடம் இல்லாத வகையில் யாரும் மறுக்க முடியாத ஆதாரத்தை இன்றைக்கு பொதுவெளியில் வைக்கவில்லை. அவர் மேற்கோள் காட்டுறது நீங்க எழுதின ஒரு கட்டுரையை.. அது போதுமானது அல்ல என்பது கொளத்தூர் மணியின் வாதம். இரண்டாவது ரஜினிகாந்த், வேண்டுமென்றே ரஜினிகாந்த் பெரியாரை இழுத்து பேசுவதற்கு வேறு நோக்கம் இருக்கிறது என சந்தேகிக்கிறார்..உங்க பார்வை?

ஜி.சி. சேகர்: துக்ளக் பங்ஷன் நான் அட்டண்ட் பண்ணினேன்.. 50 ஆண்டு விழா.. இப்ப நடந்தது.. அதில் ரஜினிகாந்த் பேசும்போது 2 எக்ஸாம்பில் கொடுத்தார். அதாவது சோ-வுக்கு எதிர்மறையாக 2 விஷயங்கள் நடந்தன. அதனால அவர் ரொம்ப பாபுலர் ஆனார். முதலில் சம்பவாமி யுகே..யுகேன்னு நடத்திய ஒரு நாடகம்.. பக்தவசலம் கவர்மெண்ட்டை கிரிட்டிசைஸ் பண்ணின வசனங்கள் இருந்ததால அவங்க பேன் பண்ணனும்னு பண்ணனாங்க அதுக்கு எதிராக சோ கோர்ட்ல போய் தடை பண்ணக் கூடாதுன்னு ஒரு ஆர்டர் வாங்கிட்டு வந்தாரு.. அதனால டிராம பீல்டுல அவருக்கு இன்னும் நிறைய புகழ் வந்தது. அதே மாதிரி

கருணாநிதி முதல்வராக இருந்த போது, துக்ளக் ஆசிரியராக இருந்த சோவுக்கு எதிர்மறையாக செயல்பட்டு ஹெல்ப் பண்ணினாரு...அதுதான் சேலம் மாநாட்டு படங்களை துக்ளக்கில் பப்ளிஷ் செய்து அதை பறிமுதல் செய்தாங்க.. ஆனந்த விகடன் பிரஸ்ல இருந்து கருணாநிதி கவர்மென்ட் பறிமுதல் செய்தாங்க.. அந்த போட்டோஸை (சேலம் மாநாட்டு) இவங்க போடப் போறாங்கன்னு இன்டலிஜென்ஸ் மூலமாக தகவல் வந்திருக்கு கிடைச்சதால பறிமுதல் செய்ய போனாங்க.. அப்ப 4,5 பண்டலை வெளியில தூக்கிப் போட்டாங்க.. அது வெளியில ப்ளாக்ல எல்லாம் வித்து தமிழ்நாட்டுக்குள்ள இருந்த துக்ளக் சோவுக்கு அகில இந்திய ரீதியில புகழ் வந்ததுன்னு ... இந்த 2 விஷயத்தைதான் ரஜினி சொல்றாரு..

குணசேகரன்: பிரபலம் வந்தது புகழ் அல்ல..

ஜி.சி. சேகர்; ஆம் பிரபலம் வந்ததுன்னு இந்த 2 சம்பவங்களால சொன்னாரு ரஜினி.. சேலம் சம்பவத்தை தைரியமாக துக்ளல பப்ளிஷ் செய்தது என்பது என்னைக்குமே அவங்க இன்டிபென்டெண்ட்டாக சிந்திக்கிற பத்திரிகைன்னு காட்டுறதுக்குதான் சொன்னார் ரஜினி..

நான் அவுட்லுக்கில் எழுதினது, பொதுவாக தமிழ்நாட்டில் பிரஸ் ப்ரீடம் எப்படி திமுக, அண்ணா திமுக எல்லாருமே நசுக்கியிருக்காங்க என்பதைப் பற்றியது.

ரஜினிகாந்த் இன்னிக்கு வந்த துக்ளக்கில் கூட அந்த படத்தை எடுத்து காட்டி இருந்தாலே போதும்.. அதில சேலம் மாநாட்டு போட்டோஸ் வந்திருக்கு.. சேலம் மாநாட்டில் எவ்வளவு ஆபாசமாக தமிழ் கடவுள்களை, இந்து கடவுள்களை மோசமாக நிர்வாணமாகவே வெளியிட்டிருக்காங்க, நிர்வாணமாகத்தான் வெளியிட்டிருக்காங்க அப்ப வந்த தினமணியிலும் வந்திருக்கு

குணசேகரன்: நீங்க சொல்ற தினமணியில் 'நிர்வாணமாக' கொண்டுவந்தாங்கன்னு இல்லையே இண்டியன் எக்ஸ்பிரஸும் இல்லையே...

ஜி.சி சேகர்: நிர்வாணமாகன்னு இல்லை.. ராமர் சிலையை செருப்பால நிறைய பேரு அடிச்சுட்டே வந்தாங்க.. ஏதோ ஒரு செருப்பு வந்தது.. அதனால அடிச்சாங்கன்னு இல்லை..

குணசேகரன்: அதை அவங்க மறுக்கவில்லை. ராமர் சிலை செருப்பால் அடிக்கப்பட்டது என்பதை அவங்க மறுக்கலை..

ஜி.சி.சேகர்: வீரமணியும் கூட சொன்னாரு.. பெரியார், ராமர் சிலையை அடிச்சாப்புறம்தான் திமுகவுக்கு 138-ல் இருந்து 183 சீட் கிடைச்சதுன்னு சொன்னாரு..

குணசேகரன்: அந்த வீடியோ எடிட்டட்.... போட்டோஷாப்.. கண்டதுண்டமாக வெட்டி உள்நோக்கத்துடன் பரப்புகிற வீடியோன்னு சொல்லி திக சார்புல மறுத்திருக்காங்க...

ஜி.சி. சேகர் : அவங்க மறுத்திருந்தா ரொம்ப நல்லது. இருந்தாலும் என்னோட கேள்வி, ஒரு மூடநம்பிக்கை பற்றிய பிரசாத்தில், கடவுள் மறுப்பு இருக்கிற ஊர்வலத்தில், பெரியார் தலைமை தாங்குகிற ஊர்வலத்தில் நீங்க கடவுளோட கட் அவுட், பெயிண்டிங்கை எடுத்துகிட்டு வர ஒரு காரணம்தான்.. அதை இழிவுபடுத்ததான்.. அதைதான் சோ வெளியிட்டாரு அதில் தவறு இல்லையே அந்த டைத்துல போட்டோவோட வெளியிட்ட ஒரே பத்திரிகை துக்ளக் அந்த தைரியதைத்தான் ரஜினிகாந்த் பாராட்டினார். அதுல கொஞ்சம் ஃபேக்சுவல் எர்ரர்ஸ் இருக்கலாம். நிர்வாணமாக வந்ததா? நிர்வாணமாக வரலையான்னு?

குணசேகரன்: டிஸ்பியூட் அதானே சேகர்

ஜி.சி. சேகர் டிஸ்பியூட் அதுமட்டும் அல்ல

குணசேகரன்: டிஸ்பியூட் 2 பாயிண்டுதான்.. (ஜி.சி.சேகர் குறுக்கீடு) நீங்க ஜீரோ இன் பண்ணுங்க டிஸ்பியூட் எதுல?

அதாவது

கடவுள் படத்தை எடுத்துட்டு வந்தாங்க என்பதை அவங்க மறுக்கலை

ராமரை விமர்சிக்கிறாங்க என்பதையும் அவங்க மறுக்கலை

டிஸ்பியூட் இரண்டே இரண்டுதான்

நிர்வாணமாக படத்தை எடுத்து வந்து, செருப்பு மாலை அணிவிச்சு எடுத்து வந்தாங்க என்பதைதான் அவங்க மறுக்கிறாங்க

இது ஃபேக்சுவலி கரெக்டா? தப்பா?

ஜி.சி.சேகர்: வெயிட்..வெயிட்.. ரஜினிகாந்த் இரண்டு விஷயத்தை மிக்ஸ் பண்ணிட்டாரு.

நிர்வாணமாக பல படங்கள் எடுத்துட்டு வரப்பட்டது முருகர் படம் எடுத்துட்டு வரப்பட்டது.. விஷ்ணு படம் எடுத்துட்டு வரப்பட்டது அது எல்லாம் நிர்வாணமாக எடுத்துட்டு வரப்பட்டது.

ராமர் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து அதுவும் எடுத்துட்டு வரப்பட்டது. இது இரண்டையும் சேர்த்து ரஜினிகாந்த் சொன்னதில்தான் தப்பு வந்திருக்கு

குணசேகரன்: ரஜினிகாந்த் பேச்சு 100% பர்பெக்டா? ரஜினிகாந்த் சொன்னது பேக்சுவலி கரெக்டா?

ஜி.சி. சேகர்: ஒருத்தர் பேசும்போது எல்லாமே 100% கரெக்டா பேக்சுவலா இருக்கனும்னு இல்லை. அவர் சொல்ல வந்த கான்டெக்ஸ்ட் கரெக்ட்

குணசேகரன்: ரஜினிகாந்த் ஸ்பெசிபிக்கா சொல்றது, ஶ்ரீராமச்சந்திர மூர்த்தியும் சீதாதேவியும் நிர்வாணமாக படம் எடுத்துகிட்டு, செருப்பு மாலை அணிவிச்சு எடுத்துட்டு வந்தாங்கன்னு ரஜினிகாந்த் சொல்றதை பேக்சுவலா கரெக்ட் இல்லைஇங்கிறீங்க..

ஜி.சி.சேகர்: நிர்வாணமாக கொண்டுவரவில்லை. பட் டெபனிட்டா செருப்பு மாலை போட்டு கொண்டு வந்தாங்க.

குணசேகரன்: உங்க வெர்சன் 50% கரெக்டுனு எடுத்துக்கலாமா?

ஜி.சி சேகர்: யெஸ்..

 
 
 
English summary
Outlook Journalist GC Sekar has denied that Nude Rama, Sita idols in 1971 DK's Salem procession.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
X