ரசிகர்கள் பாவம்தான்... "அப்பல்லோ ஊழியர்களுக்கு" மட்டும் ஸ்பெஷல் புத்தாண்டு வாழ்த்து சொன்ன ரஜினி!

அப்பல்லோ ஊழியர்களுக்கு ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வீடியோ போட்டு அப்பல்லோ மருத்துவமனை ஊழியர்களுக்கு ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களைக் கூறியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். இந்த வீடியோவை அப்பல்லோ மருத்துவமனை தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளது.

Recommended Video

    கடவுளின் அருளால் நலமாக இருக்கிறேன்.. ரஜினியின் உருக்கமான வீடியோ..!

    அரசியலுக்கு வராத சோகத்தில் இருக்கும் தனது ரசிகர்களுக்கு அவர் வாழ்த்து எதுவும் கூறாத நிலையில் அப்பல்லோ மருத்துவமனை ஊழியர்களுக்கு ரஜினி வாழ்த்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    அண்ணாத்த படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்தது.அப்போது திடீரென ஷூட்டிங்கில் கலந்து கொண்ட 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக தகவல்கள் பரவின. இதையடுத்து ரஜினிகாந்த் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    Rajinikanth wishes to Appolo staffs, video released

    அங்கு அவருக்கு ரத்த அழுத்தத்தில் அதிக மாறுபாடு இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்தது. இதனால் அங்கு அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்த அவர் பின்னர் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

    நன்றாக ஓய்வெடுக்க வேண்டும். கொரோனா தொற்று ஏற்படும் சூழலில் போய் சிக்கிக் கொள்ளாத வகையில் கவனமுடன் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அட்வைஸ்கள் அவருக்குத் தரப்பட்டன. அதைத் தொடர்ந்துதான் தான் அரசியலுக்கு வர முடியவில்லை, மன்னிச்சிருங்க என்று கூறி ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டு அனைவரையும் அதிர வைத்தார் ரஜினிகாந்த்.

    இந்த நிலையில் ஹைதராபாத் அப்பல்லோ ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் ரஜினிகாந்த் பேசியுள்ளார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ போல தெரிகிறது. அதில் அப்பல்லோ ஊழியர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள ரஜினிகாந்த், மருத்துவமனை ஊழியர்கள் தன்னை நன்றாகப் பார்த்துக் கொண்டதாகவும், அப்பல்லோ மருத்துவமனை நன்றாக பராமரிக்கப்படுவதாகவும், அந்த மருத்துவமனையை வெகுவாகப் பாராட்டிப் பேசியுள்ளார்.
    "கடவுள் அருளாள் நன்றாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன், உங்கள் சேவை சிறப்பானதாக இருந்தது" என்றும் தெரிவித்துள்ளார். இதற்கிடையே இன்று ஆங்கிலப் புத்தாண்டு கோலாகலமாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. இருப்பினும் ரஜினி தரப்பிலிருந்து அவரது ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துதெரிவித்து டிவிட்டரில் எந்த செய்தியும் இடம் பெறவில்லை. ரஜினி அரசியலுக்கு வராமல் போய் விட்டதால் அவரது ரசிகர்கள் தொடர்ந்து அழுது புலம்பி சோகத்துடன் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    ரசிகர்கள் குறிப்பாக பெண் ரசிகர் ஒருவர் அவரது வீடு தேடி வந்து ரோட்டில் நின்று கேவிக் கேவி அழுத காட்சியை தமிழ்நாடு இன்னும் மறக்கவில்லை. இப்படி உயிருக்கு உயிராக நேசிக்கும் தனது ரசிகர்களுக்கு ஒரு வாழ்த்து கூறியிருந்தால் ரஜினியை ரசிகர்கள் இன்னும் தூக்கி வைத்துக் கொண்டாடியிருப்பார்கள். ஆனால் தனக்கு சிகிச்சை அளித்த அந்த தனியார் மருத்துவமனை ஊழியர்களுக்கு மட்டும் ரஜினி புத்தாண்டு வாழ்த்து கூறியிருப்பது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+