ஆதார் கார்டு + ரேஷன் கார்டு.. வேற வழியில்ல, "இதை" செய்தே ஆகணும்.. அரிசி அட்டைதாரர்களே அலர்ட் ப்ளீஸ்
சென்னை: ஆதார் அட்டையை புதுப்பிக்க, வரும் செப்டம்பர் 30ம் தேதி வரையிலும் மீண்டும் இலவசமாக ஆதாரை புதுப்பித்துக்கொள்ளலாம் என்று பிரத்யேகமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆதார் கார்டு எண்ணை, உறுதிப்படுத்தி கொள்வது அவசியமாகிறது.
ஆதார் கார்டு பல்வேறு மோசடிகளைக் கண்காணிக்கவும் அதைத் தடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ஒருவருக்குக் கிடைக்க வேண்டிய பலன்களை, இன்னொருவர் பயன்படுத்திவிடக் கூடாது என்பதற்கும், மோசடிகளில் சிக்காமல் இருக்கவும் ஆதார் பயன்படுத்தப்படுகிறது.

ரேஷன் கடைகளில் குடும்ப உறுப்பினர்களின் கை ரேகை இருந்தால் மட்டுமே ரேஷன் உதவிகளைப் பெறமுடியும். இதில் ஆதார் முக்கியப் பங்கு வகிக்கிறது.
பான் கார்டு: இதனிடையே, ஆதார் கார்டுடன் பான் கார்டு, ரேஷன் கார்டு, வங்கி கணக்கு என அனைத்து முக்கிய ஆவணங்களையும் இணைத்திருக்க வேண்டும் என்று அவ்வப்போது அரசு சார்பாக அறிவுறுத்தப்படுகிறது.. அதேபோல, ஆதார் எண்களைக் கொண்ட அனைத்து நபர்களும், பதிவுசெய்த நாளிலிருந்து 10 வருடங்களுக்கு ஒரு முறையாவது ஆதாரில் உள்ள ஆதார் ஆவணங்களை புதுப்பிக்குமாறு பரிந்துரைக்கப்படுகிறார்கள்..
புதுப்பிப்பு: அதனால்தான், ஆதார் கார்டினை புதுப்பிக்க ஜூன்-11 வரை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், இப்போது செப்டம்பர் 30ம் தேதி வரையிலும் இலவசமாக ஆதாரை புதுப்பித்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
myAadhaar மட்டுமே இலவச சேவையை வழங்குகிறது. இருந்தாலும், நீங்கள் ஆதார் மையங்களுக்குச் செல்ல விரும்பினால் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். முகவரி புதுப்பிக்க கீழ்க்கண்ட முறைகளை பின்பற்றினாலே போதும்:
- https://myaadhaar.uidai.gov.in/-ல் UIDAI-ன் அதிகாரப்பூர்வ வெப்சைட்டை அணுகவும்.
- மை ஆதார் என்ற பக்கத்தை தேர்வு செய்ய வேண்டும்.
- பிறகு, "உங்கள் ஆதாரை புதுப்பிக்கவும்" என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும்.
- இப்போது, ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட செல்போன் நம்பருக்கு ஓடிபி எண் வரும்..
- அந்த ஓடிபி நம்பரை பதிவு செய்தவுடன் "புதுப்பிப்பு புள்ளி விவரங்கள் தரவு" என்கிற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.
- இப்போது மாற்றங்களை செய்ய "முகவரி" விருப்பத்தை பயன்படுத்தவேண்டும். புதிய முகவரிக்கான தகவலையும் பதிவிட வேண்டும். அது இப்போது உங்கள் ஆதார் அட்டையில் தோன்றும்.
- கட்டணப் பக்கத்தில் தேவையான கட்டணத்தை செலுத்த வேண்டும்.
- உங்களுக்கு விருப்பப்பட்ட தகவலை அப்டேட் செய்த பிறகு, SAVE செய்து பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும்.
-பிறகு URN எண்ணை பயன்படுத்தி அப்டேட் செய்யப்பட்ட விவரங்களின் புதுப்பிப்பு நிலையை கண்காணித்துக்கொள்ளலாம்.
இதுஒருபுறமிருந்தாலும், ஆதார் கார்டினை வேறுஒருவருக்கு தரும்போது, அல்லது தெரியாமல் கார்டை தொலைத்துவிட்டு மறுபடியும் மீட்கும்போது, கார்டு மீதான நம்பகத்தன்மை குறித்த சந்தேகம் பலருக்கு வந்துவிடும். இதுபோன்ற சூழல்களில் நம்முடைய ஆதார் கார்டு நம்பரை நாமே, சரிபார்த்து கொள்ள முடியும்..
அதற்கான வசதியை UIDAI வழங்கியிருக்கிறது.. ஆன்லைனிலும் சரிபார்க்கலாம், ஆப்லைனிலும் சரிபார்க்கலாம்.. ஆதார் அட்டையின் உண்மைத்தன்மையை, ஆன்லைனில் எப்படி சரிபார்ப்பது என்று பார்ப்போம்:
ஆன்லைனில் சரிபார்ப்பு: ஆன்லைனில் நம்பகத்தன்மையை சரிபார்க்க ஆதார் வைத்திருப்பவரின் வயது வரம்பு, பாலினம், மாநிலம் மற்றும் அவர்களது போன் நம்பரின் கடைசி மூன்று நம்பர்களை சரிபார்க்க வேண்டும். இதற்கு https://myaadhaar.uidai.gov.in/verifyAadhaar என்ற அதிகாரப்பூர்வ இணையத்திற்கு சென்று உறுதி செய்து கொள்ளலாம்.
ஆஃப்லைனில் சரிபார்ப்பு: ஒவ்வொரு ஆதார் அட்டையிலும் பாதுகாப்பான QR குறியீடு இணைக்கப்பட்டிருக்கும்.. இந்த QR குறியீட்டில், ஆதார் நம்பர், அவரது பெயர், பாலினம், பிறந்த தேதி, முகவரி, போட்டோ உள்ளது.
பாதுகாப்பு: QR குறியீட்டில் உள்ள தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும். ஒருவேளை, உங்கள் ஆதார் கார்டுடன் அட்டையுடன், வேறொருவரின் போட்டோ போட்டோஷாப் செய்யப்பட்டிருந்தாலும், அதையும் எளிதாக கண்டுபிடித்துவிடலாம். இதற்கு உதவியாக இருப்பதுதான், க்யூஆர் ஸ்கேனர் செயலி. இந்த செயலியை உதவியாக கொண்டு, ஆதார் கார்டில் உள்ள QR குறியீட்டை நாம் சரிபார்த்து கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications