ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு குட் நியூஸ்! அடேங்கப்பா இதை யாரும் எதிர்பார்க்கலையே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்கள் போடப்பட்டிருந்தன. இந்நிலையில் இதில் ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பயனர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

வழக்கமாக ரேஷன் அட்டையை புதியதாக பெற வேண்டும் எனில், அது கொஞ்சம் தலைவலி பிடித்த வேலை என்றே சொல்லலாம். அதற்கான அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அதிகாரிகள் சரிபார்ப்புக்கு வரும் வரை காத்திருக்க வேண்டும். சரிபார்ப்புக்கு எப்போது வருவார்கள் என்று தெரியாது.

Ration Card tamil nadu

ரேஷன் கார்டு

வந்தாலும் நாம் அலுவலகம் சென்றிருந்தால், செல்போனுக்கு ட்ரை செய்து பார்ப்பார்கள். மொபைலை எடுக்கவில்லை எனில் கிளம்பிவிடுவார்கள். ஆனால் நாம் இது தெரியாமல் காத்திருப்போம். ஆள் வரவேயில்லை என்று சொன்னால் அவர்கள் நடந்த சம்பவத்தை விளக்குவார்கள். எனவே மீண்டும் அவர்கள் சரிபார்ப்புக்கு வரும் வரை காத்திருக்க வேண்டும். இந்த தேதியில்தான் வருவார்கள் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது. இந்த பஞ்சாயத்துக்கெல்லாம் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்கள் முடிவு கட்டியிருக்கின்றன.

முகாமில் பங்கேற்று ரேஷன் கார்டுக்கு அப்ளை செய்திருந்தால் ஒரு வாரத்திற்கெல்லாம் வீட்டிற்கு முகவரி சரிபார்ப்புக்கு அதிகாரிகள் வந்துவிடுகிறார்கள். இது குறித்து சென்னை வில்லிவாக்கத்தில் வசிக்கும் விஜயா என்பவர் கூறுகையில்,

விண்ணப்பமும் சரிபார்ப்பும்

"சமீபத்தில்தான் எனக்கு திருமணம் நடந்தது. எனக்கும் கணவருக்கும் சொந்த ஊர் சென்னை கிடையாது. இருப்பினும் அவர் கடந்த 10 ஆண்டுகளாக இங்குதான் வசித்து வருகிறார். நானும் கடந்த 5 ஆண்டுகளாக இங்குதான் இருக்கிறேன். இப்படி இருக்கையில் இருவரும் திருமணம் செய்துக்கொண்டோம். பெற்றோர்களுக்கு வேறு மாவட்டம். நாங்கள் எங்களுக்கு தனியாக ரேஷன் அட்டை கோரி பலமுறை விண்ணப்பித்திருக்கிறோம். ஆனால் சரிபார்ப்புக்கு அதிகாரிகள் சரியான நேரத்தில் வருவதில்லை.

இப்படி இருக்கையில்தான் கடந்த 22ம் தேதி இங்கு முகாம் போட்டிருந்தார்கள். முகாமில் ரேஷன் அட்டைக்காக விண்ணப்பித்திருந்தோம். ஒரு வாரத்திற்குள் மொபைல் அழைப்பு வந்தது. முகவரி சரிபார்ப்புக்கு வருவதாக சொன்னார்கள். அதே நாளில் ஆட்களும் வந்து சரிபார்த்து சென்றிருக்கிறார்கள். ஒரு வாரத்திற்குள் இவ்வளவு வேலைகள் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை" என்று கூறியுள்ளார்.

வேகமெடுக்கும் பணிகள்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மூலம் இதுவரை 12.65 லட்சம் மனுக்கள் தமிழ்நாடு முழுவதும் பெறப்பட்டிருக்கிறது. இந்த மனுக்களில் மகளிர் உரிமைத் தொகை கேட்டு மட்டுமே 5.88 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கே சென்று மக்களுக்கான தேவையை பூர்த்தி செய்யவே உங்களுடன் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் கடந்த 15ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சர் மு க ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் குறிப்பிட்ட இடத்தில் முகாம் நடைபெறும். முகாம் குறித்து முன்னரே பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

இதற்காக வீடு வீடாக ஆட்கள் சென்று முகாம் நடக்கிறது என்றும் முகாம்களில் குறைகளை தீர்த்துக் கொள்ள முறையிடலாம் என்றும் அதற்கு தேவையான ஆவணங்களை எடுத்து வர வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.

உடனடி தீர்வு

இந்தத் திட்ட முகாம்களில் நகர்புற பகுதியில் 13 அரசு துறைகளில் 43 சேவைகள் வழங்கப்படுகின்றன. இதன் சிறப்பு அம்சமே 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்பதுதான். முகாமில் நம்முடைய கோரிக்கைகள் பெற்றுக் கொள்ளப்பட்டது என்பதற்கு ஆதாரமாக ஒப்படை சீட்டு வழங்கப்படும். இந்த முகாம்களில் மகளிர் உரிமைத் தொகைக்கு அடுத்தபடியாக ரேஷன நாட்டை கோரி பெருவாரியான மக்கள் விண்ணப்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரேஷன் அட்டை கேட்டு வந்த விண்ணப்பங்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+