Cyclone Ditwah: ரெட் அலர்ட்.. திருவள்ளூர் மாவட்ட மக்களே கவனம்! அவசர உதவி எண்கள் அறிவித்த தமிழக அரசு
சென்னை: டிட்வா புயல் காரணமாக நாளை திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால், பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவசர உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. பேரிடர் கால கட்டுப்பாட்டு அறை எண் - 1077, வாட்ஸ் அப் எண்கள் - 94443 17862, 94989 01077, மருத்துவ உதவிக்கு 93848 14050 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் வட தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இரவு 9 மணியளவில் டிட்வா புயலானது வேதாரண்யத்தில் இருந்து 80 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. தொடர்ந்து வடக்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக நாளை திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பேரிடர் மீட்பு குழுவினர் திருவள்ளூர் விரைந்துள்ளனர். மேலும் மக்களும் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் எனவும் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவசர கால உதவி எண்களை அம்மாவட்ட ஆட்சியர் பிரதாப் அறிவித்துள்ளார். இதன்படி,
* பேரிடர் கால கட்டுப்பாட்டு அறை எண் - 1077,
* வாட்ஸ் அப் எண்கள் - 94443 17862, 94989 01077,
* மருத்துவ உதவிக்கு 93848 14050
* கட்டுப்பாட்டு அறை உதவி எண்கள் - 044-2766 4177, 044-2766 6746, 044-2766 0035
* கால்நடை பாதிப்பிற்கு 1962 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications