போக்குவரத்து துறை வேணுமா? பட்டென கேட்ட ஸ்டாலின்! மூத்த அமைச்சர் அப்படியா பதில் சொன்னார்! ஏன் இப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: போக்குவரத்து துறையை அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கருக்கு அளிக்கும் முன் வேறு ஒரு மூத்த அமைச்சருக்கு அந்த இலாக்காவை ஒதுக்கும் முடிவில் முதல்வர் ஸ்டாலின் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த மூத்த அமைச்சர் போக்குவரத்து துறையை ஏற்றுக்கொள்ளவில்லை என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதுகுளத்தூரில் ஒன்றிய நிர்வாகியாக இருப்பவர் ராஜேந்திரன். இவரை "எஸ்சி" என்று கூறி ஜாதி ரீதியாக திட்டியதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது புகார் வைக்கப்பட்டுள்ளது .

இதையடுத்து ராஜகண்ணப்பன் அமைச்சரவை இலாக்கா மாற்றப்பட்டுள்ளது. போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிறப்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

ராஜகண்ணப்பன் மாற்றம்

ராஜகண்ணப்பன் மாற்றம்

இவருக்கு எதிராக ஏற்கனவே மற்ற சில குற்றச்சாட்டுகள் உள்ளன. லஞ்ச குற்றச்சாட்டுகள், ரெய்டு சம்பவம், சாதிய துவேசம், அரசு ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தில் பேருந்துகளை இயக்காதது என பல்வேறு விவகாரங்கள் ஒன்று சேர்ந்து அமைச்சர் ராஜ கண்ணப்பன் இலாகாவை மாற்றி விட்டது. பிறப்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்எஸ் சிவசங்கர் போக்குவரத்து துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த இலாக்கா மாற்றத்திற்கு பின் என்ன என்பது குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன.

இலாக்கா மாற்றம்

இலாக்கா மாற்றம்

ராஜ கண்ணப்பன் இலாகாவை மாற்றலாம் என ஸ்டாலின் முடிவு செய்த நிலையில், போக்குவரத்துத்துறையை யாரிடம் ஒதுக்குவது என முதல்வர் ஆலோசித்திருக்கிறார். அப்போது சீனியர் அமைச்சர் ஒருவரிடம் ஒப்படைப்பது சரியாக இருக்கும் என சொல்லப்பட்டிருக்கிறது. அந்த வகையில், சீனியர் அமைச்சர்களில் ஒருவரான ஐ.பெரியசாமியிடம் கொடுக்க முதல்வர் ஸ்டாலின் நினைத்திருக்கிறார்.

ஸ்டாலின் உறுதி

ஸ்டாலின் உறுதி

காரணம், தனக்கு பவர் ஃபுல்லான இலாகா இல்லை என்று ஆரம்பத்திலிருந்தே ஐ பெரியசாமி அதிருப்தியில் இருந்தார். கூட்டுறவுத்துறை அமைச்சராக இவர் இருக்கிறார். தன்னுடைய வருத்தத்தை இவர் ஸ்டாலினிடமும் முன்பே தெரிவித்து விட்டார் என்கிறார்கள் அறிவாலய வட்டாரங்கள். அவரை அப்போது சமாதானம் படுத்திய ஸ்டாலின், சில மாதங்கள் போகட்டும் இலாகாவை மாற்றித் தருகிறேன் என ஸ்டாலின் சொல்லியிருந்திருக்கிறாராம்.

இலாகா

இலாகா

இந்த நிலையில்தான் தற்போது ராஜகண்ணப்பன் விஷயம் வந்ததும்.. அதை பயன்படுத்தி அமைச்சரவை இலாகாவை மாற்ற முதல்வர் ஸ்டாலின் முடிவெடுத்தார். அந்த வகையில்தான் போக்குவரத்துறையை ஐ பெரியசாமிக்கு ஒதுக்கலாம் என ஸ்டாலின் நினைத்து இருக்கிறாராம். இது குறித்து ஐ பெரியசாமியிடம் ஸ்டாலின் விவாதித்தாக கூறப்படுகிறது. என்ன போக்குவரத்து துறையை எடுத்துக்குறீங்களா என்று கேட்டு இருக்கிறார். ஆனால் ஐ.பெரியசாமியோ, போக்குவரத்துறை எனக்கு வேண்டாம் என மறுத்திருக்கிறார் என்கிறார்கள் விவகாரம் அறிந்தவர்கள்.

 ஏன் வேண்டாம்?

ஏன் வேண்டாம்?

இதற்கு காரணம், திமுக ஆட்சி பெற்றதிலிருந்தே, முக்கிய துறை ஒன்றின் அமைச்சராக வேண்டும் என அவர் எதிர்பார்த்தாராம். அந்த துறைக்குதான் ஆரம்பித்தில் இருந்தே அடி போட்டாராம். அந்த எதிர்பார்ப்பிலேயே அவர் இப்போதும் இருக்கிறாராம். இதுவே போக்குவரத்து துறையை அவர் மறுக்க காரணம் என்கிறார்கள். போக்குவரத்துறையை ஏற்க ஐ பெரியசாமி மறுத்த நிலையில்தான், சிவசங்கருக்கு ஒதுக்குவது என முடிவு செய்தார் ஸ்டாலின். போக்குவரத்துறையை ஐ பெரியசாமி ஏற்றிருந்தால், மேலும் சில இலாகாக்கள் மாற்றியமைக்கப்பட்டிருக்கும் என்கிறார்கள் திமுகவின் சீனியர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+