சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கோவில் கோபுரம்! கடவுள் சிலை! இதற்குமுன் அனுமதிக்கப்பட்ட தமிழ்நாடு அலங்கார ஊர்திகள் என்னென்ன தெரியுமா

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி இந்த முறை குடியரசுத் தின அணிவகுப்பில் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு முந்தைய வருடங்களில் என்னென்ன அலங்கார ஊர்திகள் தமிழ்நாட்டில் இருந்து அனுமதிக்கப்பட்டது என்று பார்க்கலாம்.

குடியரசுத் தினத்தை முன்னிட்டு டெல்லியில் ஆண்டுதோறும் குடியரசு தின அணிவகுப்பு நடக்கும். இந்திய பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் இந்த அணிவகுப்பில் விருந்தினர்களாக கலந்து கொள்வார்கள். சமயங்களில் உலக நாட்டு தலைவர்கள் இந்த அணிவகுப்பிற்கு வருவதும் வழக்கம்.

இந்த அணிவகுப்பிற்கு ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மாநிலங்கள் அலங்கார ஊர்திகளை அனுப்பும், தங்கள் மாநில கலாச்சாரம், உணர்வுகள், வரலாற்றை பறைசாற்றும் வகையில் ஊர்திகளை மாநில அரசுகள் அனுப்பும்.

 ஒற்றை அறிவிப்பு! தமிழகமே முதல்வரை வரவேற்கிறது.. திடீரென பாராட்டி தள்ளிய ஆர்பி உதயகுமார்-என்ன காரணம் ஒற்றை அறிவிப்பு! தமிழகமே முதல்வரை வரவேற்கிறது.. திடீரென பாராட்டி தள்ளிய ஆர்பி உதயகுமார்-என்ன காரணம்

பாதுகாப்புத்துறை அமைச்சகம்

பாதுகாப்புத்துறை அமைச்சகம்

ஆனால் இந்த ஊர்திகள் அப்படியே ஏற்றுக்கொள்ளப்படாது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் குழு ஒன்று ஒவ்வொரு மாநிலத்தின் "தீமை (theme) பார்க்கும். அதில் சில மாற்றங்களை சொல்லும். மாற்றங்கள் ஏற்றுக்கொள்ளப்படாத பட்சத்தில் அந்த ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்படும். சுற்றுகள் வாரியாக.. ஒவ்வொரு மாநிலமாக தேர்வு செய்யப்பட்டு இறுதியில் குறிப்பிட்ட சில மாநிலங்கள் மட்டும் அணிவகுப்பிற்கு தகுதி பெறும்.

தமிழ்நாடு

தமிழ்நாடு

இந்த முறை தமிழ்நாடு இதில் 4 சுற்றுகள் வரை சென்றது. ஆனால் கடைசியில் தமிழ்நாட்டின் ஊர்திக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. சுதந்திர போராட்ட தியாகிகள் என்ற தீமில் தமிழ்நாடு அரசு வாகனத்தை உருவாக்க இருந்தது. வ.உ.சி, வேலுநாச்சியார், பாரதியார் ஆகியோரை மையமாக வைத்து வாகனம் உருவாக்கப்பட இருந்தது. ஆனால் கடைசியில் வ.உ.சி., வேலுநாச்சியாரை தெரியாது என கூறி மத்திய அரசு அதிகாரிகள் நிராகரிப்பு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரபலம்

பிரபலம்

இவர்கள் பிரபலம் இல்லை.. வெளிநாட்டு விருந்தினர்களுக்கு இவர்களை தெரியாது.. மற்ற இந்திய மாநிலங்களில் இவர்கள் பிரபலம் இல்லை. மிகவும் பிரபலமான வீரர்களை எதிர்பார்ப்பதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. தென் இந்தியாவில் கர்நாடகாவை தவிர அனைத்து ஊர்தியும் நிராகரிப்பு செய்யப்பட்டு இருக்கிறது. பாஜக ஆளும் மாநிலங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கேரளா

கேரளா

அதேபோல் கேரளாவில் ஜாதி ஒழிப்பு போராளி நாராயண குருவின் சிலையை நீக்க வேண்டும், அதற்கு பதிலாக ஆதி சங்கரர் சிலையை வைக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் கூறியது. இதற்கு கேரளா மறுத்ததால் அவர்களின் ஊர்தியும் அணிவகுப்பில் சேர்க்கப்படவில்லை. மேற்கு வங்கத்தின், சுபாஷ் சந்திர போஸ் கொண்ட வாகனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

என்ன நடந்தது

என்ன நடந்தது

இதற்கு தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி இந்த முறை குடியரசுத் தின அணிவகுப்பில் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு முந்தைய வருடங்களில் என்னென்ன அலங்கார ஊர்திகள் தமிழ்நாட்டில் இருந்து அனுமதிக்கப்பட்டது என்று பார்க்கலாம். 2019ல் தமிழ்நாடு அரசு (அதிமுக ஆட்சியில் இருந்தது) காந்தி சிலை மற்றும் இந்து கோவில் கோபுரம் தீமை அனுப்பியது. இது உடனே ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதேபோல் 2020ம் வரும் நாட்டார் தெய்வங்களை பறைசாற்றும் வகையில் அய்யனார் சிலை அனுப்பப்பட்டது. அதுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அடுத்தடுத்த வருடங்கள்

அடுத்தடுத்த வருடங்கள்

2021ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இருந்த போது மகாபலிபுரம் கோவில் கோபுரம் அனுப்பப்பட்டது. அதேபோல் கோவில் திருவிழா போன்ற தீமும் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில்தான் வரிசையாக 3 வருடங்கள் கோவில், கோவில் தொடர்பான தீம்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்த வருடம் புதிதாக சுதந்திர போராட்ட தியாகிகள் தீம் அனுப்பப்பட்டது. ஆனால் இதை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளது.

English summary
Republic Day parade: What are the Tamilnadu tableau accepted so far, Why this year it is not allowed for the parade?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X