சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கனமழைக்கு ரெஸ்ட்.. 5 நாட்களுக்கு லேசான மழை.. சென்னையில் இடி மின்னலுடன் மிதமான மழைதான்

Google Oneindia Tamil News

சென்னை: வடதமிழகம் நோக்கி நகர்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்ப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை கொட்டித்தீர்த்த நிலையில் நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. மழை சற்றே ஓய்வெடுத்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் செஞ்சியில் 2 செமீ வளத்தி, மரக்காணம், ஆரணி, வந்தவாசி, வல்லம் பகுதிகளில் தலா 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்த நிலையில் கனமழை, மிக கனமழை அச்சுறுத்தல் தற்போது நீங்கியுள்ளது.

வங்கக் கடலில் ஃபிலிம் காட்டும் காற்றழுத்தம்! சென்னையில் இன்று மழை வருமா? வெதர்மேனின் 15 ஆண்டு டேட்டாவங்கக் கடலில் ஃபிலிம் காட்டும் காற்றழுத்தம்! சென்னையில் இன்று மழை வருமா? வெதர்மேனின் 15 ஆண்டு டேட்டா

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; நேற்று தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் தெற்கு ஆந்திர மற்றும் வட தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவுகிறது.

மிதமான மழை

மிதமான மழை

இதன் காரணமாக இன்று வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மற்றும் நாளை மறுநாள் வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் இடி மின்னல்

சென்னையில் இடி மின்னல்

25ம் தேதி மற்றும் 26ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

மிதமான வெப்பம்

மிதமான வெப்பம்

அதிகபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

மீனவர்களுக்கான எச்சரிக்கை

இன்று தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், தமிழக-புதுவை கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 'சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும். இதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

English summary
The Meteorological Department has informed that the low pressure area which has moved towards the northeast has weakened into a deep low pressure area. According to a notification issued by the Meteorological Department, there is a possibility of moderate rain in Tamil Nadu from today for 5 days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X