கண்ண காட்டுனா போதும்..கையில 1000 ரூபாய்! பொங்கல் பரிசு ‘இவங்களுக்கு’ மட்டுமே..அரசின் முக்கிய உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்துடன் அரிசி சர்க்கரை வழங்கப்படும் என தமிழக அரசு பொங்கல் பரிசு திட்டத்தை அறிவித்திருக்கும் நிலையில் அதை பெறுவது தொடர்பாக தமிழக அரசு சார்பில் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசின் சார்பில் எவ்வளவு பணம் தருவார்கள்? இலவச வேட்டி சேலையோடு, ரொக்கமாகவா அல்லது பொருளாகவா என்பது குறித்து தொடர்ந்து சிந்தித்து வந்தனர், அதற்கு தற்போது விடை கொடுத்திருக்கிறது தமிழக அரசு.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.19 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கம் மற்றும் தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை கொண்ட பரிசுத் தொகுப்பை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பொங்கல் பரிசு

பொங்கல் பரிசு

அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 ரொக்கம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டுக்கு அடுத்த நாள் அதாவது ஜனவரி இரண்டாம் தேதி இந்த திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க இருக்கும் நிலையில் மற்ற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் பொங்கல் பரிசு திட்டத்தை தொடங்கி வைக்கின்றனர்.

ரேஷன் கார்டு

ரேஷன் கார்டு

இதனையடுத்து பொங்கல் பரிசு வழங்குவதற்கான ஏற்பாடுகள் தமிழக அரசு சார்பில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ரேஷன் கார்டு எனப்படும் குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவருக்குமே இந்த பொங்கல் பரிசுத்தொகுப்பு கிடைக்காது. அரிசி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு வழங்கப்படும். சர்க்கரை அட்டை வைத்திருப்பவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படாது என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.

கட்டுப்பாடுகள்

கட்டுப்பாடுகள்

அதே நேரத்தில் அரிசி குடும்ப அட்டை வைத்திருக்கும் நபர்களுக்கு பொங்கல் பரிசு டோக்கன் ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் வீடு வீடாக வழங்கப்படும். அதற்காக டோக்கன்கள் அச்சிடப்பட்டு அந்தந்த ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாளை முதல் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த டோக்கன்கள் வழங்கப்படும். இந்த டோக்கனை வைத்து குடும்ப அட்டையாளர்கள் பொங்கல் பரிசு தொகை பெற்றுக் கொள்ளலாம். அதே நேரத்தில் குடும்ப அட்டை மட்டுமே கொண்டு சென்றால் பொங்கல் பரிசு வழங்கப்படாது. அரசு சார்பாக வழங்கப்பட்டுள்ள டோக்கன் மற்றும் ஸ்மார்ட் ரேஷன் கார்டு குடும்ப உறுப்பினர்கள் கொண்டு சென்றால் மட்டுமே ஆயிரம் ரூபாயும் அரிசி சர்க்கரையும் வழங்கப்படும்.

கண்விழி ஸ்கேனர்

கண்விழி ஸ்கேனர்

ரேஷன் அட்டையில் பதிவு செய்யப்பட்டு இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் கைரேகை வைத்தால் மட்டுமே பணமும் பொருட்களும் வழங்கப்படும். ரேகை வைக்காவிட்டால் பொருட்கள் வழங்கப்படாது. அதாவது ரேஷன் அட்டையில் யார் யாரது கை ரேகைகள் இணைக்கப்பட்டு இருக்கிறதோ அவர்கள் மட்டுமே பொங்கல் பரிசு தொகை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டுகளைப் போல முறைகேடுகள் மற்றும் சிக்கல்களை தவிர்க்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. மேலும்சில கடைகளில் சோதனை முறையில் கண் விழி ஸ்கேனர் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. அந்த ரேஷன் கடைகளுக்கு செல்லும் குடும்ப அட்டைதாரர்கள் கண்களை ஸ்கேனர் காட்டினாலே சர்வர் மூலம் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கு உடனடியாக பொங்கல் பரிசு தொகப்பு வழங்கப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+