"அந்த SI மேலாடையை பிடித்து இழுத்தார்.." ஆர்கே நகர் போலீஸ் நிலையத்தில் பெண்கள் மீது தாக்குதல்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் விசாரணை என்று அழைத்து செல்லப்பட்ட இளைஞர்களை பார்ப்பதற்காக காவல் நிலையம் சென்ற பெண்களை போலீசார் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. தங்கள் சட்டையை பிடித்து ஆண் காவர்கள் இழுத்ததாக பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளித்துள்ளனர். இந்தச் சம்பவத்திற்கு திமுக எம்பி கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆர்கே நகர் பகுதியை சேர்ந்த சில இளைஞர்களை சந்தேகத்தின் பேரில் போலீசார் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அவர்களை பார்ப்பதற்காக வள்ளி மற்றும் திருமலை ஆகிய பெண்கள் நிலையத்திற்கு சென்றுள்ளனர். அப்போது அவர்களையும் போலீசார் தாக்கி வலுக்கட்டாயமாக லாக்கப்பில் அடைக்க முயன்றதாக கூறப்படுகிறது.

RK Nagar Police Station Controversy Police India

பகீர் வீடியோ

இதனை தட்டிக்கேட்ட வழக்கறிஞர் ஜெயந்தியையும் போலீசார் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் பரவும் அந்த வீடியோவில், பெண் வழக்கறிஞர் ஒருவரை ஆண் காவலர் ஒருவர் கையைப் பிடித்து இழுப்பது போன்ற காட்சிகள் உள்ளன.

இதனிடையே காவல் நிலையத்தில் தங்களை போலீசார் தாக்கியதாகவும் ஆண் போலீசார் மேலாடையை பிடித்து இழுத்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுகையில், "தேர்தலின் சமயத்தில் என்ன சொன்னீர்கள்? பெண்களுக்கு பாதுகாப்பு தருவதாகத்தானே சொன்னீர்கள்? ஒரு அரசு பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டாமா?.

மேலாடை

உள்ளே ஸ்டேஷனில் இருக்கும் எஸ்ஐ ஒருவர், பெண் என்று கூட பார்க்காமல் எனது மேலாடையை பிடித்து இழுக்கிறார். இங்கிருக்கும் பெண் போலீசார் எதையும் செய்வதில்லை. எல்லாவற்றிலும் ஆண் போலீசார் மூக்கை நுழைக்கிறார்கள். ரொம்பவே அநியாயம் செய்கிறார்கள்" என்றார். மேலும், தன்னை ஆண் காவலர் ஒருவர் கையைப் பிடித்து இழுத்ததாகவும், அதனால் கையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் பெண்கள் தாக்கப்பட்டதாக கூறப்படும் இந்தப் புகார் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பெண் வழக்கறிஞரை ஆண் காவலர் ஒருவர் கையைப் பிடித்து இழுப்பது போன்ற வீடியோ பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இதற்கிடையே திமுக எம்பி கனிமொழி இந்தச் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், பெண்களை காவல் நிலையத்திலேயே வைத்து இதுபோன்று துன்புறுத்துவது தான் தவெக சொன்ன மாற்றங்களில் ஒன்றா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

கனிமொழி கண்டனம்

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "சென்னை ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் பெண்களை அடித்து துன்புறுத்திய சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது. சந்தேகத்தின் பேரில் அழைத்துச் செல்லப்பட்டவர்களைப் பார்க்கச் சென்ற வள்ளி என்ற பெண்ணையும், அவரது மகன் திருமலையையும் காவல்துறையினர் தாக்கி லாக்கப்பில் அடைத்ததாகவும், இதைத் தட்டிக்கேட்ட வழக்கறிஞர் ஜெயந்தியை ஆண் காவலர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும், சம்பவத்தை வீடியோ எடுத்த வள்ளியின் மகள் மீனாவையும் தாக்கிய கொடூரமும் நிகழ்ந்ததாக தெரிய வருகிறது.

பெரும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் நாள்தோறும் அரங்கேறும் இடமாக தமிழ்நாடு மாறி இருக்கிறது. பெண்களை காவல் நிலையத்திலேயே வைத்து இதுபோன்று துன்புறுத்துவது தான் தவெக சொன்ன மாற்றங்களில் ஒன்றா?" என்று அவர் கடுமையாக சாடியுள்ளார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+