சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல! கொள்ளையடித்த பணத்தில் ஆதரவற்றவர்களுக்கு உணவு! யாருயா நீ!

Google Oneindia Tamil News

சென்னை : சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளாக மாதம் ஒருமுறை கொள்ளை அடித்து ஆதரவற்றோருக்கு உதவிய நபரை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்து 11 சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.

சென்னை தாம்பரம் அடுத்த புது பெருங்களத்தூர், சீனிவாசன் நகர் சூராத்தம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர், வரதராஜன் . இவருக்கு உடல்நிலை குறைவு காரணமாக சிகிச்சை பெறுவதற்காக கடந்த 2ஆம் தேதி மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

மருத்துவமனையில் இரண்டு நாள் சிகிச்சை பெற்று விட்டு 4ஆம் தேதி வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

 இந்த முறை தப்புமா தாம்பரம்.. நேரடியாக களத்தில் இறங்கிய தலைமை செயலாளர் இறையன்பு.! அதிரடி ஆய்வு இந்த முறை தப்புமா தாம்பரம்.. நேரடியாக களத்தில் இறங்கிய தலைமை செயலாளர் இறையன்பு.! அதிரடி ஆய்வு

நகைகள் கொள்ளை

நகைகள் கொள்ளை

அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 8 சவரன் தங்க நகை காணாமல் போனது தெரியவந்தது உடனே இது குறித்து புது பெருங்களத்தூர் பீர்க்கங்காரணை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் சென்று அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைபற்றி ஆய்வு செய்தனர்.

கைது

கைது

அப்போது தனி ஒருவனாக வீட்டை நோட்டமிட்டு ஆள் இல்லாததை அறிந்து உள்ளே சென்று பீரோவில் இருந்த நகைகளை கொள்ளை அடித்துச் சென்றது தெரியவந்தது. கொள்ளையனின் அங்க அடையாளங்களை கொண்டு பார்த்தபோது எக்மோர் பகுதியில் உள்ள சாலை ஓரத்தில் வசித்து வரும் அன்புராஜ் என்கின்ற அப்பு என்பது தெரியவந்தது.

மாதம் ஒரு வீடு

மாதம் ஒரு வீடு

இவர் மாதம் ஒரு முறை மட்டும் ரயில் மூலமாக வந்து கொள்ளையடித்துச் செல்லும் வழக்கம் உடையவர் என்பது தெரிய வந்தது. இதை அடுத்து எழும்பூர் ரயில் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குற்றப்பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். சுமார் பத்து நாட்களுக்கு மேலாக கண்காணிப்புக்கு பிறகு அப்பு கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது குறிப்பாக பெருங்களத்தூர் பகுதியில் மட்டும் கடந்த 100 நாட்களில் மாதம் ஒரு வீடு என நான்கு வீடுகளில் கொள்ளை அடித்ததாக கூறியிருக்கிறார். இதை அடுத்து தனியாக விசாரணை நடத்தியுள்ளனர்.

ஆதரவற்றவர்களுக்கு உணவு

ஆதரவற்றவர்களுக்கு உணவு

போலீசார் அதில் கொள்ளை அடிக்கப்பட்ட நகைகளை என்ன செய்தாய் எனக் கேட்டபோது அந்த நகைகளை விற்பனை செய்து அதில் வந்த பணத்தின் மூலம் சாலையோரங்களில் வசிக்கும் மக்களுக்கும் ரயில் நிலையத்தில் ஆதரவு இல்லாமல் இருப்பவர்களுக்கும் உணவு மற்றும் அவர்களுக்கு தேவையான உடைகள் உள்ளிட்டவற்றை வாங்கி கொடுத்ததாக வாக்குமூலம் அளித்திருக்கிறார். தற்போது அவரிடம் இருந்து 11 சவரன் தங்கம் கடைகள் கைப்பற்றப்பட்டு உள்ளது தொடர்ந்து அப்புவை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

English summary
The police arrested a man who had been robbing and helping the needy once a month for the past 10 years in Chennai and surrounding areas and seized 11 pieces of jewelery from him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X