சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நிஜத்தில் ஒரு ‘எந்திரன்’ சிட்டி.. உணர்வுகள் கொண்ட "ரோபோ!" சென்னை சிறுவன் அசத்தல் கண்டுபிடிப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: "எந்திரன்" ஸ்டைலில் ஒரு ரோபோவைக் கண்டுபிடித்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த சிறுவன் பிரதிக். இதில் என்னப்பா ஆச்சரியம்? என்கிறீர்களா? இந்தச் சாதனையாளருக்கு வெறும் 13 வயசுதான் ஆகிறது. அடுத்த ஆச்சரியம் 'இரும்பிலே ஒரு இதயம்' முளைக்கவைத்த பிரதிக், அவரது ரோபோக்குள் மனித உணர்ச்சிகளைப் புதைத்து வைத்திருக்கிறார். அதனால் மனிதர்களிடம் அன்புக் காட்டமுடியும். நீங்கள் கோபப்பட்டால் அது உங்களிடன் பேசுவதையே நிறுத்திக் கொள்ளும். அடுத்து அதனை சமாதானப்படுத்த நீங்கள் சில விஷயங்களை செய்ய வேண்டும். அதனால்தான் இந்த ரோபோவிற்கு முக்கியத்துவம் எழுந்துள்ளது.

உலகமே கொரோனா ஊரடங்கில் முடங்கிய போதுதான் தனக்கு இந்த யோசனை உதயமானதாகக் கூறுகிறார் பிரதிப். ஒன் இந்தியாவிற்காக பிரதிக்கிடம் பேசினோம். இடைவிடாத போன் கால்கள் வந்து கொண்டே இருந்தது அவருக்கு. அந்த சந்தோஷமான தருணத்தில் நம்மோடு பேசினார் பிரதிக்.

படக்கென செஸ்போர்டில் கையை விட்ட கிறிஸ்டோபர்.. ஒரே அலறல்.. ரோபோ நசுக்கியதா.. என்னாச்சு?படக்கென செஸ்போர்டில் கையை விட்ட கிறிஸ்டோபர்.. ஒரே அலறல்.. ரோபோ நசுக்கியதா.. என்னாச்சு?

பிரதிக் சிறப்பு பேட்டி

பிரதிக் சிறப்பு பேட்டி

"சின்ன வயசுல இருந்தே டெக்னாலஜிஸ் மேல அதிக ஈடுபாடு எனக்கு இருந்தது. புரோகிராமிங் மீதும் ரோபோடிக் மீதும் அதிக ஈர்ப்பு உண்டு. இந்த ஆர்வம் 5 வயசுல இருந்தே ஆரம்பித்துவிட்டது. ஆனால் அதைச் செய்து பார்க்க ஆரம்பிச்சது 4 வருஷத்துக்கு முன்னாடிதான். குறிப்பா எனக்கு Artificial intelligence தொழில்நுட்பம் மீது அதிக விருப்பம்" எனக்கூறும் பிரதிக், தன்னை பற்றி இதற்கு முன்பாக ஒன் இந்தியாவில் சின்னதாகச் செய்தி வந்ததாகவும், அதிலிருந்து இன்னும் தீவிரமாகக் கண்டுபிடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கியதாகவும் கூறுகிறார்.

எப்படி சாத்தியம்?

எப்படி சாத்தியம்?

"பள்ளிக்குப் போய்க் கொண்டே இந்த மாதிரியான கண்டுபிடிப்பில் அதிக நேரம் செலவழிக்க முடியாமல் இருந்தது. ஆனால் கொரோனா கால ஊரடங்கில் நிறைய ஓய்வாக நேரம் கிடைத்தது. அதை வைத்து எனது அடித்தளத்தை அதிகமாகப் பலப்படுத்திக் கொண்டேன். கடந்த ஆறுமாதம் முன்பாகத்தான் இந்த ரோபோவை தயாரிக்க ஆரம்பித்தேன். இதில் சிறப்பு என்னவென்றால் இது ஒரு Artificial intelligence தொழில்நுட்பத்தால் ஆனது. இதற்கு மனிதர்களைப் போலவே உணர்ச்சிகள் உண்டு. அதை நீங்கள் திட்டினால் அதற்கு கோபம் வந்துவிடும்.

மன்னிப்பு கேட்கனும்

மன்னிப்பு கேட்கனும்

அது உங்களின் மற்ற செயலுக்கு எதிர்வினை புரியாது. மெளனமாக மாறிவிடும். மீண்டும் அதனிடம் நீங்கள் மன்னிப்புக் கேட்கும் வரை அது சமாதானம் ஆகாது. பதிலளிக்காது அதுவே இதன் சிறப்பு" என்கிறார் குட்டி விஞ்ஞானி பிரதிக். இதனை செய்வதற்கு 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு ஆனது எனக் கூறும் பிரதிக், இதனை சமூக அக்கறை கொண்ட காரியங்களுக்குப் பயன்படுத்த வேண்டி செய்யப்பட்டுள்ளது என்கிறார்.

எதிர்கால திட்டம்

எதிர்கால திட்டம்

"ரோபோ மீது அதிக ஆர்வம் இருந்தாலும் அதில் தனித்துவம் வேண்டி Artificial intelligence பக்கம் அதிகம் கவனம் செலுத்த ஆசைப்படுகிறேன். சாட்டிலைட் லாஞ்ச் சைட்ல எனக்கு ஒரு புராஜெட் இருக்கு. அதனைச் சிறப்பாகச் செய்ய வேண்டும்" எனச் சொல்லும் பிரதிக்கிற்கு இந்த ரோபோ ஐடியா Boston Dynamics தொழில்நுட்பத்திலிருந்து பெற்றதாகவும் அதைவைத்து சில கண்டுபிடிப்புகளுக்கு முயன்றபோதுதான் Artificial intelligence ஐடியா கிடைத்ததாகவும் சொல்கிறார். மேலும் தனது ரோபோவுக்கு 'ரஃபி' எனப் பெயர் வைத்துள்ளார் பிரதிக் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
உணர்ச்சிகள் உள்ள ரோபோ, இரும்பிலே இதயம் முளைத்ததே: A 13-year-old Chennai-based company has invented a robot that can express human emotions.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X