என் பொண்டாட்டி அடிக்கிறாங்க.. வலிக்குதுங்க.. காவல்நிலையத்தில் கதறியபடி களேபரம் செய்த ரவுடி!
திருந்தி வாழ விடாமல் போலீசார் தொந்தரவு செய்வதாக கார்த்திக் குற்றஞ்சாட்டி உள்ளார்
சென்னை: "என் பொண்டாட்டி அடிக்கிறா.. என்னால வலி தாங்க முடியல.. " என்று போலீஸ் ஸ்டேஷன் முன்பு கதறி அழுது ஆர்ப்பாட்டம் செய்தும், பிளேடால் கழுத்து, கைகளை கிழித்தும் ரகளை செய்த ரவுடியால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை, நெசப்பாக்கம் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் கார்த்திக். இவர்தான் அந்த ரவுடி. நிறைய அடிதடி, திருட்டு வழக்குகள் உள்ளன. போலீஸ் ஸ்டேஷன்களில் கார்த்தி ரொம்பவும் ஃபேமஸ். ஏதாவது ஒரு கேஸ் விஷயமாக ஸ்டேஷனில் விசாரணைக்கு போய், போய் வருவது ரொம்ப சாதாரணம்!
இவர் இப்படி இருப்பது, மனைவி சுமித்ராவுக்கு பிடிக்கவே இல்லை. நிறைய சண்டை வருவது வாடிக்கை. கேஸ் பற்றி விசாரிக்க போலீசாரும் அடிக்கடி வீட்டுக்கு வருவது சுமித்ராவுக்கு ரொம்ப அவமானமாக இருந்திருக்கிறது.

கோவை சரளா
இப்படித்தான் நேற்றுகூட சுமித்ராவிடம் விசாரணை நடந்துள்ளது. இதையொட்டி ராத்திரி தகராறும் வீட்டில் வெடித்துள்ளது. ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த சுமித்ரா, திடீரென ஒரு செகண்ட் கோவை சரளாவாக மாறினார். ரவுடி கார்த்தியை அடித்து வெளுத்து விட்டார் போலும்.

ஆர்ப்பாட்டம்
செம போதையில் இருந்த கார்த்திக், வலி தாங்க முடியாமல் வீட்டை விட்டு அலறி ஓடிவந்தார். அதுவும் அசோக் நகர் போலீஸ் ஸ்டேஷனுக்கே வந்துவிட்டார்! அங்கு வெளியில் நின்று கொண்டு, "அவள் அடிக்கிறதை என்னால தாங்க முடியல.. அவளை கைது பண்ணுங்க" என்று கத்தினார். பிறகு, பிளேடை எடுத்து கைகளால் கிழித்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தார்.

சிகிச்சை
பின்னர் போலீசார் கார்த்திக்கை மீட்டு ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். போலீசாரிடம் வாக்குமூலமாக கார்த்தி சொல்லும்போது,"நான் முன்னாடிதான் ரவுடியா இருந்தேன்.இப்போ கிடையாது. ஆனால் ஸ்பெஷல் டீமில் பணியாற்றும் போலீசார் 2 பேர் என்னை வீட்டிற்கு வந்து அடித்து உதைக்கிறாங்க.

அறுத்து கொண்டேன்
நான் திருந்தி வாழணும்னு நினைச்சாகூட விடுவதில்லை. போலீஸ் அடி தாங்க முடியாமதான் என் மாமியார் வீட்டுக்கு போனேன். என்னை பத்தி ஸ்டேஷன்ல வந்து சொல்லுன்னு என் மனைவியை கூப்பிட்டேன். ஆனால் வரமாட்டேன்னு சொல்லிட்டாள். இதுலதான் பிரச்சனை ஆயிடுச்சு. நான் என்னதான் செய்யட்டும், வேறு வழியில்லாமதான், என்னை காப்பாத்துங்கன்னு சொல்லி கழுத்தை அறுத்துக்கொண்டேன்" என்றார்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications