ரூல்ஸே உடையுது.. 10 ஏக்கர் நிலமிருந்தும் ரூ.1000? உடனே புகார் தரலாம்.. மகளிர் உரிமை தொகை விரிவடையுது
சென்னை: மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அத்துடன், புதிய பயனாளிகளையும் விரைவில் இந்த திட்டத்தில் சேர்க்க உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, முக்கிய அதிரடி ஒன்றை தமிழக அரசு கையில் எடுத்துள்ளது.
ரேஷன் கார்டு வைத்திருக்கும் பெண்களுக்கு, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக அரசு சில அடிப்படை தகுதிகளை நிர்ணயம் செய்திருக்கிறது..

விதிமுறைகள்: அதன்படி, குடும்ப தலைவிகள் 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். வருடத்துக்கு 2.5 லட்சத்துக்கு கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள், 5 ஏக்கருக்கு குறைவாக நன்செய் நிலங்கள், 10 ஏக்கருக்கு குறைவாக புன்செய் நிலங்கள் வைத்திருப்பவர்களே தகுதியுடையவர்கள் ஆவர்.. 5 ஏக்கருக்கும் மேலாக நன்செய் நிலம் வைத்திருப்பவர்கள், 10 ஏக்கருக்கும் மேல் புன்செய் நிலம் வைத்திருப்பவர்கள் இந்த திட்டத்தின் கீழ் தகுதிபெற முடியாது.
அதேபோல, வருடத்துக்கு 3600 யூனிட்டிற்கும் குறைவான மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களாக இருக்க வேண்டும். கைம்பெண்கள், விதவைகளும் கலைஞர் உரிமைத் தொகை திட்டம் பெற முடியும். ஒரு குடும்ப அட்டைக்கு ஒருவர் மட்டுமே தகுதியான பயனாளி ஆவார்.. 2 பேருக்கு 1000 ரூபாய் கிடைக்காது.
பயனாளிகள்: ரேஷன் கார்டில் குடும்ப தலைவரின் போட்டோ இடம்பெற்றிருந்தாலும்கூட, இந்த திட்டத்தின் கீழ் மாதம் 1000 ரூபாய் பெற முடியும். மத்திய, மாநில அரசு ஊழியர்களின் குடும்பங்கள் இந்த திட்டத்தில் பயனாளிகளாக இருக்க முடியாது.
மேற்கண்டதகுதிகள் உள்ளவர்களை தவிர, வேறு யாருக்குமே உரிமைத்தொகை கிடைக்காது. மேற்கதகுதியில்லாமல் உரிமைத்தொகையை பெறுபவர்கள் குறித்து யார் வேண்டுமானாலும் புகாரளிக்கலாம்.
கார் டிராக்டர்: கார், டிராக்டர் உள்ளிட் வாகனங்கள் வைத்திருப்பவர்களும் தகுதியானவர்கள் கிடையாது. இவ்வளவு விதிமுறைகளை அரசு வகுத்துள்ள போதிலும், இதனை அரசிடமிருந்து மறைத்து ரூ.1,000 சிலர் பெற்று விடுகிறார்களாம். இதுபோன்றவர்களால், தகுதி வாய்ந்த பெண்களுக்கு உரிமைத்தொகை கிடைக்காமல் போய்விடுகிறது..
இத்தகைய பயனாளிகளை இந்த திட்டத்திலிருந்து நீக்கினாலே, புதிய தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு பணம் கிடைக்கும் என்பதால், யாரேனும் விதிகளை மீறி ரூ.1,000 பணம் பெறுவது தெரியவந்தால், அதுகுறித்து பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
புகார் தரலாம்: விதிகளை மீறி யாராவது உரிமைத்தொகை பெறுவது தெரியவந்தால், கலைஞர் உரிமைத்தொகை திட்ட வெப்சைட்டிற்குள் சென்று பயனாளியின் பெயர், ஊர், வட்டம், மாவட்டம், ரேஷன் கடை, அவர் எதனால் கலைஞர் உரிமைத் தொகை பெற முடியாது? போன்ற விவரங்களை பதிவிட வேண்டும். அதேபோல, புகார் அளிப்பவரின் பெயர், ஊர், தொலைபேசி எண்ணையும் பதிவு செய்ய வேண்டும்.
இப்படி பதிவு செய்தால், சம்பந்தப்பட்ட நபர் குறித்த தகுதிகளை வருவாய்த்துறை, உணவுப் பொருள் வழங்கல்துறை அதிகாரிகள் நேரடியாக சென்று விசாரணை நடத்துவார்கள். இறுதியில், பயனாளியின் தகுதியின்மை உறுதி செய்யப்பட்டால், உடனடியாக சம்பந்தப்பட்ட நபர், இந்த திட்டத்திலிருந்து நீக்கப்படுவார். அத்துடன், அவருக்கான ரூ.1,000 உரிமைத்தொகையும் நிறுத்தப்படும்.
தற்போது, சுமார்1 கோடியே 16 லட்சம் பேர், இந்த திட்டத்திலுள்ள நிலையில், மேலும் பல புதிய பயனாளிகள் விரைவில் சேர்க்கப்பட உள்ளதாக தமிழக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் சமீபத்தில் கூட அறிவித்திருந்தார்..
விரிவடைகிறது: அதுமட்டுமல்ல, விரைவில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வர உள்ளதால், இந்த திட்டத்தில் விடுபட்ட தகுதியான பயனாளிகளை கண்டுபிடித்து அவர்களுக்கு உரிமைத்தொகை வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது. அதுவும் பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே மகளிருக்கு இந்த அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள்.
விரைவில் புதிய விண்ணப்பதாரர்கள் சேர்க்கப்பட உள்ள நிலையில், மகளிர் உரிமைதொகை திட்டம் இன்னும் விரிவடைய உள்ளது, பெண்கள் மத்தியில் மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications