வாகன சோதனையில் ரூ.12.8 கோடி பறிமுதல்... தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
சென்னை: தமிழகத்தில் இதுவரை நடந்த வாகன சோதனையில் மொத்தம் ரூ.12.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நேற்று மட்டும் ரூ.3.76 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இன்றி வாகனத்தில் கொண்டு சென்ற ரூ.20 லட்சம், சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தல் விதிகளை மீறியதாக 56 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

மேலும், ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே எஸ்.பி.பட்டினம் சோதனைசாவடியில் தேர்தல் அதிகாரி ராஜேந்திரன் தலைமையில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லோடு லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, உரிய ஆவணமின்றி 250 நெல்மூட்டைகள் ஏற்றி செல்வது தெரிந்தது.

ரூபாய் 3 லட்சம் மதிப்பிலான நெல்மூட்டைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், எஸ்.பி. பட்டினம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதேபோல், உரிய ஆவணமின்றி பால் வியாபாரி கொண்டு வந்த 61 ஆயிரத்து 310 ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதற்கிடையே, அதிமுகவுக்கு வாக்களித்தால் ரூ.1,500 கிடைக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக புகார் அளித்துள்ளது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications