ரூ. 20 லட்சம் வழிப்பறி செய்த வழக்கு: உதவி ஆய்வாளர்களுக்கு நிபந்தனை ஜாமீன் - நீதிமன்றம் உத்தரவு
சென்னை: இருபது லட்சம் ரூபாய் வழிப்பறி செய்த வழக்கில் காவல் உதவி ஆய்வாளர்களான ராஜா சிங் மற்றும் சன்னிலாய்டுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஆயிரம் விளக்கு காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ராயபுரத்தைச் சேர்ந்த தமீம் அன்சாரி என்பவரிடம் கடந்த ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி 20 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்ததாக காவல் உதவி ஆய்வாளர்கள் ராஜா சிங், சன்னிலாய்டு, வருமானவரித் துறை அதிகாரிகள் தாமோதரன் பிரதீப், பிரபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி உதவி ஆய்வாளர்கள் ராஜாசிங் மற்றும் சன்னிலாய்டு ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 80 நாட்களுக்கு மேல் சிறையில் இருப்பதால், ஜாமீன் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
காவல்துறை தரப்பில், ராஜா சிங் மற்றும் சன்னி லாய்டு இருவரும் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. எனவே, ஜாமீன் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சன்னி லாய்டு மற்றும் ராஜா சிங் இருவருக்கும் ஜாமீன் வழங்கிய நீதிபதி, ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டுமென நிபந்தனை விதித்து உத்தரவிட்டார்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்!












Click it and Unblock the Notifications