2000 கோடி போதைப்பொருள்.. ஜாபர் சாதிக்குடன் நெருக்கமான சினிமா பிரபலங்கள் யார்? போலீஸ் அதிரடி முடிவு
சென்னை: ரூ.2000 கோடி போதைப்பொருள் வழக்கில் தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக்குடன் நெருக்கமாக இருந்த சினிமா பிரபலங்கள் யார்? யார்? என்பதை சிசிடிவி காட்சிகளில் பார்த்த மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்..
போதைப்பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப்பொருட்களை தேங்காய் பவுடர் மற்றும் சத்து மாவு பாக்கெட்டுகளில் மறைத்து வைத்து இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதை நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இந்த தகவலை இந்தியாவின் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு அமெரிக்கா மற்றும் நியூசிலாந்து புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன்பேரில் டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவு மற்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் டெல்லியில் தீவிரமான சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் மேற்கு டெல்லியில் உள்ள கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் கடந்த பிப்ரவரி 15ம் தேதி போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இங்கிருந்து தான் அந்த கடத்தல் கும்பல் போதைப்பொருளை சத்து மாவு பாக்கெட்டுகளில் மறைத்து வைத்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தியது உறுதியானது.
சோதனையின் முடிவில் சென்னையை சேர்ந்த முகேஷ் (வயது 33), முஜீபூர் ரகுமான் (34), விழுப்புரத்தை சேர்ந்த அசோக் (34) ஆகிய 3 பேரை கைது செய்தார்கள். அவர்களிடம் நடத்திய விசாரணையில், இதன் பின்னணியில், தமிழகத்தை சேர்ந்த மேலும் சிலர் இருப்பதும், கடந்த 3 ஆண்டுகளில் 45 முறை சுமார் 3,500 கிலோ போதைப்பொருட்களை (வேதிப்பொருள்) வெளிநாடுகளுக்கு அவர்கள் அனுப்பி சுமார் ரூ.2,000 கோடி வரை இவர்கள் சம்பாதித்திருக்கலாம் என்றும் கூறினார்கள்.
இதனிடையே கடத்தல் கும்பலுக்கு மூளையாக செயல்பட்டது தமிழ் சினிமா திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் , நடிகர் மைதீன், அரசியல் பிரமுகர் சலீம் என்பது விசாரணையில் தெரியவந்தது. டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் கடந்த 23-ம் தேதி மயிலாப்பூர், சாந்தோம் பகுதி அருணாச்சலம் தெருவில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் சம்மன் ஒன்றை ஒட்டினார்கள். இதேபோல் புரசைவாக்கம் டவுட்டன் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக்கின் தயாரிப்பு நிறுவன அலுவலகத்திலும் சம்மன் ஒட்டினார்கள். அந்த சம்மனில் டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்கள். ஆனால் அவர் ஆஜராகவில்லை.. மாறாக ஜாபர் சாதிக் தலைமறைவானார்.
இதையடுத்து ஜாபர் சாதிக் வெளிநாடு தப்பிச்செல்வதை தடுக்க, அனைத்து விமான நிலையங்களுக்கும் 'லுக்-அவுட்' நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அவரது 8 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டிருக்கிறது. இதனிடையே ஜாபர் சாதிக் வீட்டுக்கு வந்து சென்றவர்கள் யார்? யார்? என்ற விவரங்களை கண்டறிய அவரது வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகள் அடங்கிய 'ஹார்ட் டிஸ்க்'கை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைப்பற்றியதுடன், டெல்லி கொண்டு சென்று ஆய்வு நடத்தி உள்ளார்கள்.
இந்த சிசிடிவி காட்சிகளில் சினிமா பிரபலங்கள், நண்பர்கள், அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள், தொழில் அதிபர்கள், முகவர்கள் என பல்வேறு தரப்பினர் ஜாபர் சாதிக் வீட்டுக்கு வந்து சென்றிருப்பது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. அவர்களின் பட்டியலை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தயாரித்து வருகிறார்கள். விரைவில் அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் தேடப்பட்டு வரும் ஜாபர் சாதிக், அடிக்கடி கென்யா நாட்டிற்கு சென்று வந்திருப்பதும், அவர் கடந்த மாதம் 17-ந்தேதிக்கு முன்பாக கூட அந்த நாட்டுக்கு சென்று வந்திருப்பதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இதனிடையே ஜாபர் சாதிக்குடன் கென்யா சென்றவர்கள் யார்? யார்? என்பது குறித்த விவரங்களையும் சேகரித்து, அவர்களையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.
ஜாபர் சாதிக் இதுவரை எத்தனை முறை வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார்?, அவருடன் சென்றவர்கள் யார்? இந்த பயணங்களின் நோக்கம் என்ன? போன்றவை குறித்தும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்து வருகிறார்கள். விசாரணையின் முடிவில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்ற பரபரப்பு எழுந்துள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications