Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் மாயமான லட்சங்கள்.. ரகசிய இடத்தில் இருந்த சாவி.. மனைவி புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தீப் நந்தூரி வீட்டில் ரூ.5 லட்சம் ரொக்கப் பணம் திருடு போயிருக்கிறது. சந்தீப் நந்தூரியின் மனைவி சென்னை கோட்டூர்புரம் போலீஸ் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். பீரோ அருகில் ரகசியமாக வைத்திருந்த சாவி மூலம் பீரோவை திறந்து பணத்தை திருடியிருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து இதுதொடர்பாக போலீசார் வேலைக்காரர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெரிய அதிகாரிகள், பெரிய பணக்காரர்கள், நடிகர்,நடிகைகள் வீடுகளில் சில நேரங்களில் அவர்களுக்கு மிகவும் தெரிந்தவர்களே திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவது உண்டு. ஏனெனில் மிகவும் பாதுகாப்பான அவர்களின் வீடுகளில் திருடர்கள் சுவர் ஏறி வந்தோ அல்லது வீட்டின் பூட்டை உடைத்தோ கொள்ளையடிப்பது சவாலானது. அப்படியே கொள்ளையடித்தாலும் சிசிடிவி காட்சிகள், தெருமுனையில் உள்ள பல்வேறு சிசிடிவி காட்சிகளால் மாட்டிக் கொள்வார்கள். போலீசாரும் தனிப்படை அமைத்து எளிதாக பிடித்துவிடுவார்கள்.

IAS Kotturpuram

வேலைக்காரர்கள் திருடினால் சிக்கல்

சென்னையில் எல்லாம் திருடினால், எங்கே சென்றாலும் சிக்கி கொள்வார்கள். ஏனெனில் சென்னையில் அந்த அளவிற்கு சிசிடிவி கேமராக்களும், எளிதாக கண்டுபிடிக்கும் வகையில் பல்வேறு வசதிகளும் உள்ளன. அதேநேரம் நெருக்கமானவர்கள் திருடினாலும் அல்லது தெரிந்தவர்கள் அல்லது வீட்டில் வேலை செய்தவர்கள் சிறுக சிறுக திருடினால் கண்டுபிடிப்பது கடினம். அவர்களிடம் விசாரணை நடத்தி தான் மேற்கொண்டு உண்மையை கண்டுபிடிக்க முடியும்.

ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் திருட்டு

அந்த வகையில் சென்னையில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தீப் நந்தூரி. வீட்டில் ரூ.5 லட்சம் ரொக்கப் பணம் திருடு போயிருக்கிறது. இவர் சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் (டிட்கோ) நிர்வாக இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அத்யஷா பரிதா (வயது 41) சென்னை கோட்டூர்புரம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

மனைவி அளித்த புகார்

அந்த புகார் மனுவில் அவர் கூறுகையில், "நானும், எனது கணவரும் குடும்பத்தோடு சென்னை கோட்டூர்புரம், கோட்டூர் கார்டன் 2-வது மெயின் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறோம். அண்மையில் நானும், எனது கணவரும் குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டு திரும்பினோம். வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோ லாக்கர் திறந்து கிடந்தது. பீரோ அருகில் ரகசியமாக வைத்திருந்த சாவி மூலம் பீரோ திறக்கபட்டிருந்தது. பீரோவில் வைத்திருந்த ரூ.10 லட்சம் ரொக்க பணத்தில், ரூ.5 லட்சத்தை காணவில்லை. அந்த பணம் திருடப்பட்டிருக்கிறது

வேலைக்காரர்கள் மீது சந்தேகம்

வீட்டில் சமையல்காரராக வேலை செய்யும் பாலன், இதர வேலையாட்களான தேவி, ராஜேஸ்வரி ஆகியோர் மீது எனக்கு சந்தேகம் இருக்கிறது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அதில் ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி அத்யஷா பரிதா கூறியிருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேலைக்காரர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+