தனுஷ், அண்ணாமலை தொடங்கும் கட்சியில் கூட நிர்மல்குமார் இணைவார்.. கிண்டல் செய்த ஆர்.எஸ்.பாரதி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் தனுஷ், அண்ணாமலை ஆகியோர் புதிதாக தொடங்க உள்ள கட்சிக்கு கூட அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் செல்வார் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கிண்டல் செய்துள்ளார். யார் புதிதாக கட்சி தொடங்கினாலும் அங்கு செல்வது சிலருக்கு பழக்கம் என்று கூறிய ஆர்.எஸ்.பாரதி, அந்தப் பட்டியலில் சிடிஆர் நிர்மல்குமார் மற்றும் ஆதவ் அர்ஜுனா முதன்மையாக இருப்பார்கள் என்று கூறியுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவடைந்த பின் சபாநாயகர் ஓம் பிர்லா கொடுத்த தேநீர் விருந்தில் திமுக சார்பாக கனிமொழி பங்கேற்றார். இந்தியா கூட்டணி கட்சிகள் இந்த தேநீர் விருந்தை புறக்கணித்த நிலையில், திமுக மட்டும் பங்கேற்றது விவாதமாகியது. இதனால் திமுக - பாஜக கூட்டணி இணைவதற்கான நெருக்கம் அதிகரித்துள்ளதோ என்று காங்கிரஸ் உள்ளிட்டோர் சந்தேகிக்கின்றனர்.

RS Bharathi Mocks CTR Nirmal Kumar

அதேபோல் அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக - பாஜக முன்பாகவே மறைமுகமாக கூட்டணியில் இருந்தனர். இப்போது நேரடி கூட்டணியில் இருக்கிறார்கள். திருச்சி சிவா விரைவில் மத்திய அமைச்சராவார் என்று அனிதா ராதாகிருஷ்ணன் கூறுகிறார். நிரந்தர எதிரியும், நிரந்தர நண்பரும் அரசியலில் இல்லை என்று இரு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் பேசுகிறார்கள்.

இதனால் 2001 நிலை மீண்டும் உருவாகிறது என்று தெரிவித்தார். சிடிஆர் நிர்மல்குமாரின் பேச்சிற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்துள்ளார். ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் எந்த இடத்திலாவது ஆதரித்து வாக்களிப்போம் என்று சொன்னோமா.. சிடிஆர் நிர்மல்குமார் பல கட்சிக்கு போய் வந்தவர். அவரின் வாயில் இருந்து உண்மை வராது.

அகாரணம் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக தொடர்பு தான். பாஜக பற்றி பேசும் யோக்கியதை அவருக்கு கிடையாது. தொகுதி மறுவரையறை மசோதா என்னவென்றே தெரியாமல் கருத்து சொல்ல முடியாது. ஏற்கனவே நாடாளுமன்றத்தில் அந்த மசோதாவை தோற்கடித்திருக்கிறோம். அந்த அளவிற்கு தொகுதி மறுவரையறை மசோதா எதிர்த்தோம். நிர்மல்குமார் ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு மாதிரி பேசக் கூடியவர்.

ஆர்.எஸ்.எஸ்., பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்தவர். இப்போதைக்கு தவெகவில் இருக்கிறார். இன்னும் இந்த ஆட்சி முடிவதற்கு எந்தக் கட்சிக்கு செல்வார் என்று தெரியவில்லை. தனுஷ் ஒரு கட்சி தொடங்கப் போவதாக சொல்கிறார்கள். அண்ணாமலை கட்சி தொடங்குவதாக சொல்கிறார்கள். ஒரு சிலர் யார் கட்சித் தொடங்கினாலும், உறுப்பினர் அட்டை வாங்கி வைத்து கொள்வார்கள்.

சிலருக்கு பாரம்பரியமாக அந்த பழக்கம் உள்ளது. அந்த பட்டியலில் முதன்மையாக இருக்க கூடியவர்கள் நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா. இவர்கள் எல்லா கட்சிக்கும் செல்வார்கள். திமுக தெளிவாக சொல்லிவிட்டது. நாங்கள் சொல்லிய திருத்தங்களை செய்தால், அதற்கேற்ப முடிவு எடுப்போம். தவெக ஆட்சியில் நடக்கும் பிரச்சனைகளை மறைக்க, குறிப்பாக கோவை மாணவர் கொலையை மறைக்க இப்படி பேசுகிறார்கள்.

100 நாட்களாகியும் தூத்துக்குடி பெண் கொடுத்த புகாரில் நடவடிக்கை எடுக்கவில்லை. முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒருவருக்கு கூட அழைப்பு, அனுமதி அளிக்கப்படவில்லை. திமுக போட்ட ஒப்பந்தத்தால் வந்த முதலீடுகள் அவை.. இதில் என்ன ரகசியம் இருக்கிறது. சென்னையில் வீட்டு வரி அதிகமாக உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+