மின்சார ஆட்டோ வாங்க பெண்களுக்கு சூப்பர் சான்ஸ்.. இ ஆட்டோ பெற ரூ.3 லட்சம் கூட்டுறவு வங்கி தரும் கடன்
சென்னை: கிராமப்புறங்களில் பெண்களின் சுயதொழில் கனவுகளை நனவாக்கும் முயற்சியை தமிழக அரசு முன்னெடுத்து வருகிறது.. அந்த வகையில், இந்த மின்சார ஆட்டோ கடன் திட்டம், பெண்களிடையே மிகவும் பிரபலமானதாக மாறி வருகிறது.. கடந்த 5 மாதத்துக்கு முன்புதான் இந்த திட்டம் கொண்டுவரப்பட்ட நிலையில், அதற்குள் பிரம்மிக்கத்தக்க வரவேற்பை பெண்களிடம் பெற்று வருகிறது.. இதுகுறித்து முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதுகுறித்து பார்ப்போம்.
தமிழக அரசு பெண்களுக்கு பல நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது; இதில் 1.14 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர். அனைத்து பெண்களுக்கும் இலவச பேருந்து பயண வசதி உள்ளது, இதனால் வேலைக்கு செல்லும் பெண்கள் மாதம் ரூ.1,000 வரை சேமிக்க முடிகிறது.

திருமண உதவித்திட்டங்களில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு ரூ.25,000 மற்றும் 8 கிராம் தங்கம், உயர்கல்வி பெண்களுக்கு ரூ.50,000 மற்றும் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தலா ரூ.25,000 டெபாசிட் செய்யப்படுகிறது. ஆதரவற்ற பெண்களுக்கு இலவச தையல் இயந்திரமும் வழங்கப்படுகிறது.
பெண்களுக்கு கடனுதவி திட்டம்
அந்தவகையில், மின்சார ஆட்டோவை பெறுவதற்கான கடனுதவியையும் நம்முடைய அரசு செய்து வருகிறது.. கூட்டுறவு துறையின் கீழ் இப்படியான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது..
நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, கூட்டுறவு வங்கிகள் கிராமப்புற மக்களுக்கு நிதி சேவை வழங்கும் முக்கிய ஆதாரமாக தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. விவசாயிகள், சிறு தொழிலாளர்கள், தொழில் தொடங்க நினைப்பவர்கள் உள்ளிட்ட பலருக்கும் குறைந்த வட்டியில் கடன்கள் வழங்கப்படுவது காரணமாக, கூட்டுறவு வங்கிகளை மக்கள் அதிகம் நாடுகிறார்கள்.
மின்சார ஆட்டோ பெற கடன்
விதை, உரம், பூச்சிக்கொல்லி முதல் வேளாண் உபகரணங்கள் வரை பல தேவைகளுக்காக விவசாயிகள் பெறும் கடன்களுக்கும் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன. அதோடு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளுக்கும் அரசு வழங்கும் வட்டி மானியத்துடன் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த பின்னணியில்தான், மின்சார ஆட்டோ வாங்க, மகளிருக்கு 3 லட்சம் ரூபாய் கடன் வழங்கும் புதிய திட்டம் கூட்டுறவு வங்கிகளில் தொடங்கப்பட்டுள்ளது.. கடந்த 2025 ஏப்ரல் 8ம் தேதி நடந்த சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் அமைச்சர் பெரியகருப்பன் இதை அறிவித்திருந்தார்.. முதற்கட்டமாக 1,000 பெண்களுக்கு இந்தக் கடன் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டதும் நினைவிருக்கலாம்.
கூட்டுறவு துறை
இப்போது கூட்டுறவு துறையின் கீழ், 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், அவற்றின் 933 கிளைகள் மூலம் நகைக்கடன், பயிர்க்கடன் போன்ற பல பிரிவுகளில் கடன்பணிகள் நடைபெற்று வருகின்றன.
பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவிக்க உருவாக்கப்பட்ட இந்தத் திட்டம், 18 முதல் 60 வயதுக்குள் உள்ளவர்களுக்கு, குறிப்பிட்ட வருமான வரம்பின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. தனிநபர் அளவிலும் வாகனக் கடன்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிர் மின்சார ஆட்டோ வாங்குவதற்காக 3 லட்சம் ரூபாய் வரை, 9 சதவீத வட்டியில் கடன் பெறலாம்.
எலக்ட்ரிக் ஆட்டோ - 550 விண்ணப்பம்
இந்தத் திட்டம் கடந்த ஜூன் மாதம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.. ஆனால், இத்திட்டம் தொடங்கிய வெறும் 5 மாதங்களிலேயே, எதிர்பார்த்ததை விட அதிகமான பெண்கள் ஆர்வம் காட்டியிருப்பதாக கூட்டுறவு வங்கி அதிகாரிகள் சொல்கிறார்கள்..
அதாவது இதுவரை 550 பேர் இந்த மின்சார ஆட்டோவுக்காக விண்ணப்பித்துள்ளார்களாம்.. அதில் 75 பேருக்கு ஏற்கனவே கடன் வழங்கப்பட்டு, மீதமுள்ள விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. விண்ணப்பத் தொகை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த வருடத்துக்கான ஆயிரம் பேருக்கான இலக்கு கூட அதிகரிக்கக்கூடும் என்று கணக்கிட்டு அதிகாரிகள் கூறுகிறார்கள்.
இதனால் பெண்கள் தங்களுக்கே சொந்தமான வாகனத்துடன் வருமானம் ஈட்டும் வாய்ப்பு கிடைப்பதால், இந்த திட்டம் குடும்பங்களின் பொருளாதார நிலைமைக்கும் நேரடி பலனாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
அவசியமான ஆவணங்கள், சான்றிதழ்கள்
மின்சார ஆட்டோ வாங்க ரூ.3 லட்சம் கடன் பெற வேண்டுமானால், விண்ணப்பதாரர் கூட்டுறவு வங்கியில் உறுப்பினராக இருக்க வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட பெண்கள் தமிழகத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.. 18 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களாகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும்..
இதற்கு ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, அல்லது முகவரி சான்று, வருமான சான்றிதழ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள் போன்றவை தேவைப்படும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications