உக்ரைன் மீது ரஷ்யா குண்டு மழை.. சென்னையில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை! மக்களுக்கு பேரிடி
சென்னை: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருவதால் சென்னையில் தங்கம், வெள்ளியின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் ராணுவ நடவடிக்கை எடுக்க அதிபர் புதின் உத்தரவிட்டிருந்தார். அதன் பேரில் ரஷ்ய படைகள் உக்ரைன் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன.
உக்ரைன் நாடாளுமன்றம், அரசு மற்றும் வங்கிகளின் இணையதளங்களை குறிவைத்து ரஷ்யா சைபர் தாக்குதலும் நடத்தியதாக கூறப்படுகிறது. நூற்றுக்கணக்கான கணினிகளை மால்வேர் மூலம் மர்ம நபர்கள் முடக்கியுள்ளனர். லாட்வியா, லூத்வானியா பகுதிகளிலும் கணினிகள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

விமான தளங்கள்
உக்ரைன் விமான தளங்களில் ரஷ்ய படைகள் நுழைந்துள்ளனர். அது போல் முக்கிய நகரங்களிலும் ரஷ்ய படைகள் நுழைந்துவிட்டன. ரஷ்யாவின் போருக்கு அமெரிக்கா, நேட்டோ, ஐநா உள்ளிட்டவை கண்டனம் தெரிவித்துள்ளன. ரஷ்யா போரை நிறுத்த உலக நாடுகள் உதவ வேண்டும் என உக்ரைன் அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தங்கம் விலை
இந்த நிலையில் உக்ரைன் போர் எதிரொலியாக சென்னையில் தங்கம், வெள்ளி விலை உயர்ந்துள்ளது. சென்னையில் 22 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 1240 உயர்ந்துள்ளது. இதனால் சவரன் ரூ 38,992 ஆக விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 155 உயர்ந்து 4,874- க்கு விற்பனையாகிறது. ஒன்றரை ஆண்டுகள் கழித்து இந்த விலை உயர்வு நடந்துள்ளது.

வெள்ளி விலை உயர்வு
சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ 2.70 உயர்ந்து ரூ 71.40 க்கு விற்பனையாகிறது. உக்ரைன் தலைநகர் கிவ் மீது ரஷ்யா குண்டு மழை பொழிந்து வருகிறது. துல்லியமான ஆயுதங்களை வைத்து விமான தளங்கள் மற்றும் ராணுவ தளங்களை ரஷ்யா தாக்கி வருகிறது. மேலும் குடியிருப்பு பகுதிகளில் தாக்குதல் நடத்தப்படவில்லை என ரஷ்யா விளக்கமளித்துள்ளார். சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ 1.90 உயர்ந்து ரூ 70.60 க்கு விற்பனையாகிறது. உக்ரைன் தலைநகர் கிவ் மீது ரஷ்யா குண்டு மழை பொழிந்து வருகிறது. துல்லியமான ஆயுதங்களை வைத்து விமான தளங்கள் மற்றும் ராணுவ தளங்களை ரஷ்யா தாக்கி வருகிறது. மேலும் குடியிருப்பு பகுதிகளில் தாக்குதல் நடத்தப்படவில்லை என ரஷ்யா விளக்கமளித்துள்ளார்.

புதின் எச்சரிக்கை
இந்த போர் வாழ்வா, சாவா என்ற நிலையில் நடைபெறுகிறது என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்தார். மேலும் குறுக்கே யார் வந்தாலும் தாக்குதல் கடுமையாக இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார் புதின். இன்றைய தினம் அமெரிக்காவும் மற்ற நாடுகளும் பொருளாதார தடையை அறிவிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications