சமாளிக்கவே முடியல.. மேடையில் ’மகனை’ பற்றி பேசிய எஸ்ஏ சந்திரசேகர்! பட்டென பார்த்த எடப்பாடி பழனிசாமி!
சென்னை : நடிகர் விஜய்க்கும் அவரது தந்தையான எஸ்ஏ சந்திரசேகருக்கும் இடையே சுமூகமான உறவு இல்லை என கூறப்படும் நிலையில் ஒரு குடும்பத்தில் ஒரு பிள்ளை மனைவி என்று இருக்கும் போது பல பிரச்சினைகள் வரும் அதனை சமாளிப்பது கஷ்டம் என எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் சந்திரசேகர் பேசியிருக்கிறார்.
'தளபதி' என்று தமிழ் திரையுலகில் ரசிகர்களால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடப்படும் நடிகர் விஜய், திரை உலகுக்கு வந்து கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாகி உள்ளது. அந்த வகையில் நாயகனாக தமிழ் திரையுலகில் சுமார் 30 ஆண்டுகளை கடந்து இருக்கிறார் நடிகர் விஜய்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அடுத்தபடியாக அதிக வசூல் செய்யும் படங்களின் நாயகனாகவும், தளபதி விஜய் இருக்கிறார். மிகச் சிலவற்றை தவிர சமீபத்தில் வெளிவந்த பெரும்பாலான அவரது படங்கள் 100 கோடி 200 கோடி என வசூல் செய்துள்ளன.

எஸ்.ஏ.சந்திரசேகர்
திரையுலகில் உச்சம் தொட்டாலும் அரசியல் ஆசை காரணமாக அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் தளபதி விஜய்க்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மகன் விஜய் பெயரில் கட்சி ஆரம்பித்ததாகவும் இதன் காரணமாக இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. தொடர்ந்து தந்தைக்கு எதிராக நோட்டீஸ் நீதிமன்ற வழக்கு என பல பிரச்சனைகள் ஏற்பட்டது. இதன் காரணமாக ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் தொடர்ந்து பல நாட்களாக நடிகர் விஜய் தனது தந்தையான சந்திரசேகரை சந்திக்கவில்லை.

அப்பா-மகன் மோதல்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு எஸ்ஏ சந்திரசேகர் எண்பதாவது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அந்த நிகழ்ச்சியில் கூட விஜய் கலந்து கொள்ளாதது விமர்சனங்களை ஏற்படுத்தியது. அப்போது எஸ்.ஏ சந்திரசேகர் தனது மனைவி ஷோபாவுடன் தனியே கேக் வெட்டிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியது. ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் தந்தையின் பிறந்தநாளுக்கு கூட நடிகர் விஜய் வர மாட்டாரா என கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.

சமாளிப்பது கஷ்டம்
ஒரு குடும்பத்தில் ஒரு பிள்ளை மனைவி என்று இருக்கும் போது பல பிரச்சினைகள் வரும் அதனை சமாளிப்பது கஷ்டம் என எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் சந்திரசேகர் பேசியிருக்கிறார். சென்னை தியாகராய நகரில் உள்ள வாணி மகாலில் நேற்று எம்.ஜி.ஆர் கிரியேஷன்ஸ் என்னும் பெயரில் தொண்டு நிறுவனத் தொடக்க விழா நடைபெற்றது. இதில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

எடப்பாடி பழனிசாமி
இந்த நிகழ்ச்சியில் பேசிய சந்திரசேகர்," எடப்பாடி பழனிச்சாமி எப்படி ஆட்சி செய்வாரோ என சந்தேகம் எனக்கும் இருந்தது. அவரை விமர்சித்தும் பேசி இருக்கிறேன். ஆனால் சாதாரண ஒருவர் முதல்வராக வந்து அமர்ந்தார்.அவர் முதல்வர் பதவிக்கு சிறந்த நிர்வாகி என்று உறுதிப்படுத்தி இருக்கிறார் .எடப்பாடி பழனிச்சாமி ரொம்ப எளிமையானவர் மனிதநேயமிக்க மனிதர்" என பேசினார்.

ஒரு பிள்ளை
மேலும் எவ்வளவு இக்கட்டான நேரத்திலும் அவரிடம் சிறப்பு மட்டுமே வரும் "ஒரு குடும்பத்தில் ஒரு பிள்ளை மனைவி என்று இருக்கும் போதே பல பிரச்சினைகள் வரும் அதனை சமாளிப்பது கடினம்" எனக் கூறினார். அப்போது அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த பலரும் பலத்த கைதட்டலுடன் சிரித்தனர். தனது மகனுடன் ஏற்பட்ட மோதல் குறித்து எஸ் ஏ சந்திரசேகர் பேசியதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications