ஏன் வீடியோ ரிலீஸ் பண்ணே.. சசிகுமார் தலைமுடியை பிடித்து.. ஜிங்கு ஜிங்குன்னு ஆட்டிய பெண்கள்!
போலி தகவலை பரப்பிய நபரை ஆசிரம பெண்கள் சரமாரி வெளுத்தனர்
Recommended Video
சென்னை: "வீடியோ ஏன் ரிலீஸ் பண்ணே... பாலியல் புகாரா தர்றே.." என்று கேட்டு இளைஞரின் தலைமுடியை பெண்கள் ஜிங்கு ஜிங்கு என இழுத்து பிடித்து ஆட்டி.. சரமாரியாக வெளுத்துள்ளனர்.. "அம்மா.. என்னை காப்பாத்துங்க.. என்னை கொல்றாங்களே என்று அந்த இளைஞர் கதறும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
தாம்பரம் அருகே சதானந்த புரத்தில் சதானந்த சுவாமிகள் மடம் உள்ளது.. இங்கு தங்கியிருக்கும் சிறுவர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக 2 வீடியோக்கள் வெளியானது.. இந்த வீடியோவில் 2 சிறுவர்களும் தங்களுக்கு பாலியல் தொல்லைகள் குறித்து பேசியிருந்தனர்.
தங்களை போல சட்டவிரோதமாக 9 சிறுவர்கள் தங்கவைக்கபட்டுள்ளதாகவும் அவர்களுக்கு நிர்வாகிகள் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அந்த வீடியோவில் அதிர்ச்சி தகவலை சொன்னார்கள்.. இந்த வீடியோ வெளியாகி கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர், போலீசார் அங்கிருந்த சிறுவர்களை மீட்டு, அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

சசிகுமார்
இதையடுத்து இந்த வீடியோ பதிவை போட்டது யார் என்ற விசாரணை ஆரம்பமானது. வீடியோவை வெளியிட்டது சசிகுமார் என்பதும் மடத்திற்கு இவர் கடந்த 26 வருஷங்களாக சசிக்குமார் வந்து செல்பவர் என்றும் தெரியவந்தது.. அது மட்டுமல்ல.. சிறுவர்களை மிரட்டி வீடியோவில் பேச வைத்ததும் இவர்தானாம்.. இவர் தந்த பொய்யான தகவலின்பேரில்தான் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பெண் பக்தர்கள்
இதனிடையே மடம் எப்படி நடக்கிறது, பரபரப்பாக இருக்கிறதா, இழுத்து மூடிவிட்டார்களா என்பதை நோட்டமிட சசிகுமார் அந்த பக்கம் வந்தார்.. அவரை பார்த்தும் மடத்திற்கு வந்து செல்லும் பெண் பக்தர்கள் கொதித்தெழுந்து விட்டனர்.. "எப்படி மடத்தை பத்தி தப்பா பேசலாம்.. மடத்தில் நடக்காத விஷயங்களை ஏன் பரப்பினே? குழந்தைங்களை விட்டு ஏன் பேச வைத்தாய்.. ஏன் வீடியோ வெளியிட்டே" என்று கேட்டு சூழ்ந்து கொண்டனர்.

தலைமுடி
அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியாமல் சசிகுமார் விழித்தார்.. அதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் அவரது தலைமுடியை பிடித்து இழுத்து உலுக்கினர்.. சட்டையை பிடித்து இழுத்து வெளுத்தனர்.. கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் தூக்கி அவர் மீது வீசினர்.. பெண்களுக்கு நடுவில் மாட்டிக் கொண்டு அலறினார் சசிகுமார்..."ஐயோ, என்னால முடியலயே.. என்னை கொல்றாங்களே" என்று கதறினார்.

ஆத்திரம்
இதற்கு பிறகுதான் விஷயத்தை சொன்னார் சசிகுமார்.. மடத்தில் உட்கார்ந்து எப்பவுமே சசிகுமார் கஞ்சா அடிப்பாராம்.. இதை மட நிர்வாகிகள் கண்டித்துள்ளனர்.. இந்த ஆத்திரத்தில் மடத்தில் உள்ள சிறுவர்களை வீடியோவில் பேச வைத்ததாக ஒப்புக் கொண்டார்.. சசிகுமார் பெண்களிடம் அடிவாங்கும் இந்த வீடியோவும், அதனுடன் சேர்ந்து அவரது அலறலும் வைரலாகி வருகிறது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications