சேலம் 8 வழி சாலை.. நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவோம்.. முதல்வர் பழனிசாமி அதிரடி பேட்டி!
சேலம் 8 வழி சாலை வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்துள்ளார்.
Recommended Video

சென்னை: சேலம் 8 வழி சாலை வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்துள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன் சேலம் 8 வழி சாலை வழக்கில் தீர்ப்பு வந்தது. பெரும் எதிர்ப்பார்ப்பிற்கு இடையில் வந்த இந்த தீர்ப்பில், சேலம் 8 வழி சாலைக்கு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என்று சென்னை ஹைகோர்ட் கூறி உள்ளது.

இந்த திட்டத்திற்கு எதிராக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு, பாமக எம்பி அன்புமணி உள்ளிட்டவர்கள் வழக்கு தொடுத்து இருந்தனர். இந்த நிலையில் சேலம் 8 வழி சாலை தீர்ப்பு குறித்து முதல்வர் பழனிசாமி தி இந்து நாளிதழுக்கு பேட்டியளித்துள்ளார்.
அதில், நீதிமன்றத் தீர்ப்பை மதிக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. தொழில் மண்டலம்; எட்டு வழிச் சாலை கட்டமைப்பு, வேலைவாய்ப்பு வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என நம்புகிறோம். இதனால் பலர் புதிய வேலைகளை பெறுவார்கள்.
இது அதிமுகவின் கனவுத்திட்டம்தான். ஆனாலும் தீர்ப்பை பின்பற்ற வேண்டியது எங்கள் கடமை. நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவோம் என்று முதல்வர் தனது பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார்.
முன்னதாக அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அதிமுக அரசு இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என்று குறிப்பிட்டு இருந்தார். ஆனால் தற்போது அதற்கு எதிராக முதல்வர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா?












Click it and Unblock the Notifications