சேலம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டையில் இடி மின்னலுடன் மழை - வானிலை சொன்ன நல்ல செய்தி
தமிழ்நாட்டில் கடற்கரை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் கடற்கரை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் பகல் நேரங்களில் வெயில் சுட்டெரிப்பதும் மாலை நேரங்களில் குளிர்ந்த காற்று வீசி கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்து வருகிறது. 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்த நிலையில் நேற்று மாலையில் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. இந்த நிலையில் சேலம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி, ஈரோடு, தூத்துக்குடி, நாமக்கல் மாவட்டங்களில் 7 செமீ மழை பதிவாகியுள்ளது. புதுக்கோட்டையில் 6 செமீ மழையும்,கரூர், ராமநாதபுரம், திண்டுக்கல், திருத்துறைப்பூண்டியில் 5 செமீ மழையும் பதிவாகியுள்ளது. இந்த நிலையில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சேலம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு என கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஆகஸ்ட் 25ஆம் தேதியான நாளைய தினம் திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும்.
ஆகஸ்ட் 26ஆம் தேதியன்று திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும். கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், நீலகிரி, கோவையில் இடியுடன் மழை பெய்யக்கூடும்.
ஆகஸ்ட் 27, 28ஆம் தேதிகளில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. தமிழ்நாட்டில் இதர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும், ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரபிக் கடலின் தென்மேற்கு, மத்திய மேற்கு பகுதிகளில் ஆகஸ்ட் 28 வரை பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளது. மணிக்கு 40 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. விடாமல் வெளுக்க போகுது மழை.. வானிலை மையம் எச்சரிக்கை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ்












Click it and Unblock the Notifications