ரூ.1.17 கோடியில் 16 அடி உயர கருணாநிதி கம்பீர சிலை! சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
தமிழகத்தில் இதுவரை வைக்கபட்டுள்ள முழு உருவ உலோகச் சிலைகளிலேயே மிக உயரமான சிலையான கருணாநிதியின் சிலை இன்று சென்னையில் திறக்கப்படுகிறது.
சென்னை: முன்னாள் திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதிக்கு தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள முழு உருவ வெண்கலச்சிலை இன்று திறக்கப்படுகிறது. தமிழகத்தில் இதுவரை வைக்கப்பட்டுள்ள முழு உருவ உலோகச் சிலைகளிலேயே மிக உயரமான சிலையாகும். கருணாநிதியின் கம்பீர சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு திறந்து வைக்கிறார்.
தென்னிந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவரான திமுக தலைவர் கருணாநிதி, தமிழகத்தில் 5 முறை முதல்வராக இருந்தவர். 60 ஆண்டுகள் தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளார். பன்முகத் திறமை பெற்றிருந்த கருணாநிதி, கடந்த 2018 ஆகஸ்ட் 7-ம் தேதி மறைந்தார். சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அங்கு அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டு வருகிறது.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சென்னை அண்ணா சாலையில் சிலை அமைக்கப்படும். அதற்கான இடம் தேர்வு செய்வது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்யப்படும் என்று அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.

கருணாநிதியின் பிறந்தநாள்
சட்டசபையில் 110 விதியின் கீழ் ஒரு அறிவிப்பை முதல்வர் வெளியிட்டார். அந்த அறிவிப்பில் "கலைஞர் அவர்கள் பிறந்த ஜூன் 3ம் தேதி அரசு விழாவாக இனி கொண்டாடப்படும் என இந்த அவைக்கு அறிவிக்கிறேன். சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தின் வளாகத்தில் கலைஞரின் கம்பீர சிலை நிறுவப்படும் என்று அறிவித்தார்.

பிரம்மாண்ட சிலை வடிவமைப்பு
கருணாநிதி மறைக்குப் பிறகு அவருடைய முழு உருவச்சிலை அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டது. அந்த சிலையை வடிவமைத்தவர் சிற்பி கும்மிடிப்பூண்டி தீனதயாளன் என்பவர். தமிழகத்தில் மட்டும் தற்போது 20க்கும் மேற்பட்ட கருணாநிதியின் சிலைகளை செய்துக்கொடுத்துள்ளார் சிற்பி தீனதயாளன். அவரே இப்போது கருணாநிதியின் பிரம்மாண்ட சிலையை வடிவமைத்துள்ளார்.

ரூ.1.17 கோடி..16 அடி உயர வெண்கல சிலை
அண்ணா அறிவாலயத்தில் உள்ள கருணாநிதியின் சிலை மாடலிலேயே இந்த சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. 12 அடி உயர பீடத்தில், 16 அடி உயரத்தில் ரூ.1.17 கோடி மதிப்பில் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலை இரண்டு டன் எடை கொண்டது. தமிழகத்தில் தற்போது உயரமான சிலையாக கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையே உள்ளது. தற்போது கருணாநிதிக்கு அமைக்கப்பட உள்ள இந்த சிலையே உலோகத்தினால் செய்யப்படும் அதிக உயரம் கொண்ட சிலையாகும். இந்த சிலைக்கான செலவுகளை பொதுப்பணித்துறை ஏற்றுக்கொண்டுள்ளது.

ஓமாந்தூரார் அரசினர் தோட்டத்தில் சிலை
அண்ணா சாலையில் சிலையை அமைக்கவே அரசு தரப்பு திட்டமிட்டது. ஆனால் சரியான இடம் அமையாமல் இருப்பதும், அண்ணா சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக எதிர்காலத்தில் சிலையை மாற்றும் சூழ்நிலையும் வரலாம் என்பதால் ஓமந்தூரார் வளாகத்தில் சிலை திறக்கப்படுகிறது. சிலையின் உயரமும் அதிகம் என்பதால் சாலையில் சிலையை வைத்தால் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்படலாம் என அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதனையடுத்து ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் கருணாநிதி சிலை திறக்கப்படுகிறது.

கருணாநிதியின் கம்பீர சிலை
நீண்ட தூரம் ஓடினால்தான் அதிக உயரம் தாண்ட முடியும் என்று அடிக்கடிச் சொல்வார் தலைவர் கலைஞர். நீண்ட தூரம் இந்த தமிழினத்துக்காக ஓடியவர் கலைஞர். அவரை அதிக அதிக உயரத்தில் உயர்த்திப் பார்ப்பதைத் தனது கடமையாகக் கருதுகிறது தமிழக அரசு என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அந்த தலைவருக்கு கம்பீரமாக சிலை அமைக்கப்பட்டுள்ளது திமுக தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

35 ஆண்டுகளுக்குப் பின் அண்ணாசாலையில் சிலை
அண்ணாசாலையில் மணியம்மையார் முயற்சி எடுத்து, திராவிடர் கழகத்தின் சார்பில் இன்றைய தாராப்பூர் டவர்ஸ் சிக்னல் அருகே கலைஞருக்கு சிலை அமைக்கப்பட்டது. தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். உடல்நலக்குறைவால் 1987 ஆம் ஆண்டு மறைந்த போது அந்த சிலை தகர்க்கப்பட்டது. அந்த அண்ணா சாலையில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கருணாநிதியின் உருவச்சிலை நிறுவப்படுகிறது என்பதால் முதல்வர் மு.க ஸ்டாலின் மட்டுமல்ல திமுக தொண்டர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம்












Click it and Unblock the Notifications