நானே வருவேன்.. புது ஆடியோ ரிலீஸ் செய்த சசிகலா - சுற்றுப்பயணத்தால் அதிமுகவில் சலசலப்பு வருமா
ஊராடங்கு முடிந்தவுடன் அனைத்து இடங்களிலும் சுற்றுபயணம் வருவேன். மீண்டும் தலைமை பொறுப்புக்கு வந்து அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை வழிநடத்துவேன் என்றும் சசிகலா கூறியுள்ளார்.
சென்னை: சசிகலா உடன் பேசியவர்களை கட்சியில் இருந்து நீக்கிய பின்னரும் தினம் தினம் ஆடியோக்களை ரிலீஸ் செய்து அதிமுகவில் கலகம் ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறார் சசிகலா. ஊராடங்கு முடிந்தவுடன் அனைத்து இடங்களிலும் சுற்றுபயணம் வருவேன். மீண்டும் தலைமை பொறுப்புக்கு வந்து அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை வழிநடத்துவேன் என்றும் கூறியுள்ளார் சசிகலா.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த சசிகலா, அதிரடியாக அரசியலில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அரசியலை விட்டு ஒதுங்கப் போவதாக கூறினார்.
ஆலயங்களில் தரிசனம் செய்த அவர் தற்போது ஆடியோ அரசியல் செய்து வருகிறார்.
சசிகலா உடன் போனில் பேசிய 15 பேர் அதிமுகவை விட்டு நீக்கப்பட்டனர். சசிகலாவுடன் போனில் பேசும் அதிமுக நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கட்சி தலைமை எச்சரித்தும் பலர் அவருடன் பேசி வருகின்றனர்.

ஆடியோ அரசியல்
சசிகலாவின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது என்று கூறியுள்ளார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். தேர்தலில் பலம்மிக்க எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளோம். எங்களைப் பொறுத்தவரை அதிமுகவுக்கு இது வெற்றிகரமான தோல்விதான். இதை சசிகலாவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவர் ஆடியோ அரசியலைச் செய்து வருகிறார்.

சூழ்ச்சி ஜெயிக்காது
பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டு எங்களுக்குள் பிரிவை ஏற்படுத்தி, அதன் மூலம் குளிர் காய்ந்து, கட்சியைப் பிடித்து விடலாம் என்று நினைத்தால் நிச்சயமாக அது நடக்காது என்றும் கூறியுள்ளார் ஜெயக்குமார். அதிமுக தொண்டர்கள் விழிப்பாக உள்ளார்கள். தொண்டர்கள் எல்லோருக்கும் அவர்கள் எப்பேர்ப்பட்ட சூழ்ச்சிக்காரர்கள் என்று தெரியும். அந்த சூழ்ச்சி எந்த விதத்திலும் எடுபடப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ஆடியோ மீண்டும் ரிலீஸ்
இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சேர்ந்த அதிமுக மகளிர் அணி இனை செயலாளர் சண்முக பிரியாவிடம் சசிகலா பேசிய ஆடியோ தற்போது வெளியாகி உள்ளது. நியாயமாகவும் நல்ல விதமாகவும் கட்சியை கொண்டு போகனும் என்ற கட்டாயம் இருக்கு அந்த கட்டயாத்தை ஏற்படுத்தி விட்டார்கள் என்று சசிகலா கூறியுள்ளார்.

கட்சியை வழிநடத்துவேன்
ஊராடங்கு முடிந்தவுடன் சுற்றுபயணம் அனைத்து இடங்களிலும் வருவேன். மீண்டும் தலைமை பொறுப்புக்கு வந்து அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை வழிநடத்துவேன் என்றும் சசிகலா பேசும் ஆடியோ தற்போது வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவில் கலகத்தை ஏற்படுத்த சசிகலா தயாராகி விட்டார். அதற்கு முன்னதாக சசிகலாவிற்கு எதிராக அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார் எடப்பாடி பழனிச்சாமி என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
-
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு










Click it and Unblock the Notifications