சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இரண்டாவது முறையாக ஜெயலலிதா சமாதிக்கு வந்த சசிகலா.. கருப்பு உடையில் கண்ணீர் அஞ்சலி

Google Oneindia Tamil News

ஜெயலலிதாவின் 5ஆவது நினைவு நாள் இன்றைய தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய தினம் மெரினா கடற்கரையில் உள்ள சமாதியில் அஞ்சலி செலுத்துவதற்காக காலையிலேயே அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் வருகை தந்தனர்.

Recommended Video

    Jayalalitha | தடைகளை தகர்த்த தன்னம்பிக்கை பெண்மணி | Oneindia Tamil

    ஓபிஎஸ் உள்ளிட்டோர் வெள்ளை ஆடையிலும் எடப்பாடி பழனிச்சாமி, ஜெயக்குமார், தமிழ்மகன் உசேன் உள்ளிட்டோர் கருப்பு உடையிலும் வந்திருந்தனர். அங்கு ஜெயலலிதாவின் சமாதியில் அஞ்சலி செலுத்திய அவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

    ஜெயலலிதா நினைவு நாள்.. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மகத்தான வெற்றி.. ஓபிஎஸ்- ஈபிஎஸ் உறுதிமொழிஜெயலலிதா நினைவு நாள்.. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மகத்தான வெற்றி.. ஓபிஎஸ்- ஈபிஎஸ் உறுதிமொழி

    உறுதிமொழி

    உறுதிமொழி

    அப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என உறுதிமொழி ஏற்றனர். இதையடுத்து அங்கிருந்து சென்ற போது அதிமுக - அமமுகவினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஜெயலலிதா சமாதிக்கு அஞ்சலி செலுத்த டிடிவி தினகரன் வருகை தந்திருந்தார். அப்போது
    அங்கு குழுமியிருந்த அமமுகவினர் "சின்னம்மா வாழ்க டிடிவி தினகரன் வாழ்க" என கோஷமிட்டபடி வந்தனர்.

    முற்றுகை

    முற்றுகை

    அப்போது ஓபிஎஸ் -ஈபிஎஸ் வாகனத்தை முற்றுகையிடுவது போல் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரே நேரத்தில் அஇஅதிமுக மற்றும் அமமுகவினர் அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்கப்பட்டதே இந்த சலசலப்பு க்கு காரணம் என கூறப்படுகிறது. இதையடுத்து ஜெயலலிதாவின் சமாதியில் அஞ்சலி செலுத்த சசிகலா வருகை தந்திருந்தார்.

    மலரஞ்சலி

    மலரஞ்சலி

    கருப்பு நிற சேலை அணிந்திருந்த சசிகலா, மலரஞ்சலி செலுத்திவிட்டு கண்ணீர் விட்டு அழுதார். 2017ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக கடந்த அக்டோபர் மாதம் 16ஆம் தேதி ஜெயலலிதாவின் சமாதிக்கு சசிகலா சென்றிருந்தார். அங்கு சமாதியில் படுத்து கொண்டு அழுதார். தற்போது இரண்டாவது முறையாக ஜெயலலிதாவின் நினைவு நாளில் அவரது சமாதிக்கு சென்றுள்ள அவர் கண்ணீர் விட்டு அழுதார்.

    சசிகலா அறிக்கை

    சசிகலா அறிக்கை

    அதிமுக உள்கட்சி தேர்தல் குறித்து சசிகலா இன்றைய தினம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ஒற்றுமையாக இருந்தால்தான் எதிரிகளை வெல்ல முடியும். அதிமுக தொண்டர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தனக்கு வேதனையை ஏற்படுத்தியதாக தெரிவித்தார். மேலும் இதையெல்லாம் பார்த்துக் கொண்டு இனியும் என்னால் சும்மா இருக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

    English summary
    Sasikala broke down in Jayalalitha's memorial for the second time.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X