எம்.ஜி.ஆருக்கு பிறகு சசிகலாவுக்குதான் மிகப் பெரிய மக்கள் எழுச்சி.. சொல்வது பொன். ராதாகிருஷ்ணன்
சென்னை: எம்.ஜி.ஆருக்குப் பின் சசிகலாவுக்குதான் மிகப் பெரிய மக்கள் எழுச்சி உள்ளது என பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய இணை அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களிடம் பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
Recommended Video

சில அரசியல் கட்சிகள் மதத்தின் பெயரில் வாக்குகள் சேகரிக்க முயற்சிப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது முஸ்லிம் லீக்கை குறிப்பிட்டிருக்கலாம். பாஜகவை சொல்வதற்கான வாய்ப்பு இல்லை.

திமுக ஆட்சிக்கு வராது
திமுக ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பே இல்லை. திமுக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றது. தற்போது மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.

அரசின் திட்டங்கள் லீக்
அதிமுகவும் தமிழக அரசும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தங்கள் திட்டங்களை முன் கூட்டியே ஸ்டாலினுக்கு யாரோ தகவல் கொடுக்கிறார்கள். யாரோ அதிமுகவின் நடவடிக்கைகள் குறித்தும் திட்டங்கள் குறித்தும் அறிவிப்புகள் குறித்தும் ஸ்டாலினுக்கு தகவல் கொடுக்கிறார்கள். இதில் கவனமாக இருக்க வேண்டும்.

எடப்பாடியார் முதல்வர் வேட்பாளர்
அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளது. அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்துள்ளது. ஆகையால் அவர் தான் முதல்வர் வேட்பாளர்.

சசிகலாவுக்கு வரவேற்பு
பெங்களூரிலிருந்து சசிகலா தமிழகத்திற்கு வந்த போது மிகப்பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது இதை பெரிய எழுச்சியாக நான் கருதுகிறேன். இது அவர்களின் கட்சிக்கு பலமுள்ளதாக இருக்கும். இதற்கு முன்பு எம்ஜிஆருக்கு இதுபோன்ற வரவேற்பு இருந்ததை நான் பார்த்திருக்கிறேன். இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.
-
அதிமுக உடன் இணைகிறதா அமமுக? காட்டுத்தீயாகப் பரவும் தகவலுக்கு டிடிவி தினகரன் விளக்கம்! -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
தப்பித்தது தம்பிரான் புண்ணியம்.. 21 அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை இல்லை! 4 பேருக்கு தான் சிக்கலே! -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. தவெகவுக்கு தாவிய அதிமுக மாஜி எம்.எல்.ஏ.க்கள்! சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் -
அத்தனை பேரும் இன்ஸ்டாகிராம் வீடியோ போடுங்க.. ஐடி விங் கூட்டத்தில் ராஜ் சத்யனை வறுத்தெடுத்த எடப்பாடி! -
காலை தொட்டு கேட்கிறோம்.. எங்களை சேர்த்துக்கோங்க.. தவெகவினரிடம் மேடையில் கெஞ்சிய அதிமுக நிர்வாகி -
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
இனிமே சிங்கப் பாதை தான்..ஆக்ஷனுக்கு ரெடியான அதிமுக! திமிறி எழுந்த எடப்பாடி பழனிசாமி! கையில் லிஸ்ட்!












Click it and Unblock the Notifications