ஓபிஎஸ் பேசினதை கேட்டீங்கல்ல? சைலண்ட்டாக இருந்தே சாதித்த சசிகலா? .. அடுத்தது என்ன?
சென்னை: அதிமுகவில் இணையுமாறு வெகு விரைவில சசிகலா, தினகரனை சந்திக்கவுள்ளதாக ஓபிஎஸ் கூறிய நிலையில் சசிகலா மகிழ்ச்சியாக உள்ளதாக கூறப்படுகிறது. அதோடு தான் நினைத்ததையும் சாதித்துவிட்டதாகவே தெரிகிறது.
கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லாது என்ற தொனியில் கடந்த ஜூன் 23 ஆம் தேதிக்கு முந்தைய நிலையே தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துவிட்டது.
இதையடுத்து ஓபிஎஸ் தரப்பு படுகுஷியல் உள்ளது. ஆனால் பொதுக் குழுவை கூட்டினால் எடப்பாடி பழனிசாமி தனது காரியத்தை சாதித்துக் கொள்வார் என்பதால் எப்படியாவது அவர் பக்கம் இருக்கும் ஆதரவாளர்களை இழுக்க ஓபிஎஸ் தரப்பு பக்கா பிளான் செய்து காய் நகர்த்தி வருகிறது.

ஒற்றுமை
இந்த நிலையில் அதிமுக ஒற்றுமையாக இருக்க பிரிந்தவர்கள் எல்லாம் ஒன்றிணைய வேண்டும் என தீர்ப்பு வந்த மறுநாளே ஓபிஎஸ் அழைப்பு விடுத்தார். அது போல் சசிகலா, தினகரன் ஆகியோரின் பெயரை கூறியே அதிமுகவில் இணைய அழைத்தார் ஓபிஎஸ். ஆனால் இந்த அழைப்பை எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை.

அதிமுக பொதுக் குழு
அது போல் அதிமுக பொதுக் குழு தொடர்பாக மேல்முறையீட்டு விசாரணையின் போதும் எடப்பாடி பழனிசாமி தரப்பு, "இனி ஓபிஎஸ்ஸுடன் இணைந்து பணியாற்ற முடியாது" என அறிவித்துவிட்டன. இதனால் எடப்பாடி பழனிசாமி அவருடன் உள்ள சில முன்னாள் அமைச்சர்கள் இல்லாமல் அதிமுகவை நடத்துவது என்பது கூட ஓபிஎஸ்ஸுக்கு ஒரு பிளான் இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஒருங்கிணைப்பாளர்
இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர், அன்று தர்மயுத்தத்தை தொடங்கினேன், இன்று அதிமுகவை இணைக்க வேண்டும் என்பதால் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளேன். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சசிகலாவையும் டிடிவி தினகரையும் விரைவில் சந்திக்கவுள்ளேன் என்றார்.

இலை மறைவாக காய் மறைவாக
இத்தனை நாள்களாக இலை மறைவாக காய் மறைவாக சசிகலாவுக்கு ஓபிஎஸ் ஆதரவு தெரிவித்த நிலையில் கடந்த வாரம் அவரது பெயரை சொல்லியே அதிமுகவுக்கு வருமாறு அழைத்தார். தற்போது நேரில போய் சந்திதது சசிகலாவை அழைப்பேன் என்கிறார். இதனால் சசிகலா மகிழ்ச்சியாக உள்ளாராம். அவர் எதிர்பார்த்தது இதுதான் என்கிறார்கள்.

சசிகலாவை இணைப்பீர்களா
அதாவது அதிமுகவில் சசிகலாவை இணைப்பீர்களா என தேவர் ஜெயந்தி விழாவின் போது ஓபிஎஸ்ஸிடம் கேட்டபோது கூட அவர் தலைமைக் கழக நிர்வாகிகள் முடிவு செய்வர் என்றார். அதாவது கிட்டதட்ட சசிகலாவுக்கு பச்சை கொடி காட்டினார். இதனால் சசிகலா தேனி செல்லும் போது ஓபிஎஸ்ஸை சந்திப்பார் என கூறப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.

சசிகலா நிலைப்பாடு
அப்போது சசிகலாவின் நிலைப்பாடு என்ன என அவரது ஆதரவாளர்கள் தரப்பினரிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் கூறுகையில், "சசிகலா யாரையும் போய் சந்திக்க தயாராக இல்லை. மூத்த முன்னோடிகளை மட்டுமே சந்தித்து வருகிறார். சசிகலாவால் நல்ல நிலைக்கு வந்தவர்களை போய் அவர் எப்படி சந்திக்க முடியும்? எனவே ஓபிஎஸ்தானாக வந்து தம்மை சந்திக்க வேண்டும் என்றுதான் நினைத்திருந்தார்" என்றார்கள். அது தற்போது வெகு விரைவில் நடைபெற போகிறது. எனவே சசிகலா தனது முடிவில் சாதித்து காட்டி விட்டார் என்றே தெரிகிறது. ஒரு வேளை ஓபிஎஸ் சசிகலாவை நேரில் சந்தித்தால் நிச்சயம் பாசிட்டிவான பதிலையே சொல்வார் என தெரிகிறது. மேலும் எடப்பாடியின் மேல்முறையீட்டு மனுவின் தீர்ப்புக்காகவும் ஓபிஎஸ் காத்திருப்பதாகவும், அந்த தீர்ப்பும் தனக்கு சாதகமாக வந்தால் உடனே போய் சசிகலாவையும் தினகரனையும் பார்ப்பார் என தெரிகிறது.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications