‛முக்குலத்தோர்' தான் குறி.. தேர்தலில் வேட்பாளர்களை இறக்கும் சசிகலா! அதிமுக - பாஜகவுக்கு பெரிய ஷாக்
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தற்போது மீண்டும் அரசியல் களத்துக்கு என்ட்ரி கொடுக்க தயாராகி வருகிறார். தனது ஆதரவாளர்களுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டுள்ள நிலையில் இந்த மாத இறுதியில் அவர் தனது முடிவை அறிவிக்க உள்ளார். இப்படியான சூழலில் தான் தமிழக சட்டசபை தேர்தலில் சசிகலா முக்குலத்தோர் அதிகமுள்ள சட்டசபை தொகுதிகளில் வேட்பாளர்களை களமிறக்க திட்டமிட்டுள்ளார். இது அதிமுக- பாஜக கூட்டணிக்கு சிக்கலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்று தண்டனை முடிந்து விடுதலையான பிறகு அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவர் அரசியலில் ஈடுபடவில்லை. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை என்று ஒதுங்கினார். அதுமட்டுமின்றி எப்படியாவது அதிமுகவை மீண்டும் சேர்ந்து கட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சசிகலா முயன்றார். ஆனால் அது எதுவும் நடக்கவில்லை. அதிமுகவில் நீக்கப்பட்ட அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று தொடர்ந்து கூறி வந்தார். ஆனால் அதுவும் நடக்கவில்லை.
சசிகலாவை சேர்க்க மறுப்பு
இன்னும் சொல்லப்போனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா, ஓ பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் உள்பட யாரையும் அதிமுகவில் சேர்க்க முடியாது என்ற முடிவில் உறுதியாக இருந்தார்.
தற்போது டிடிவி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தொடங்கியதால் அவர் அதிமுக - பாஜக கூட்டணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சசிகலா, ஓ பன்னீர் செல்வத்தை சேர்க்கவில்லை. இந்நிலையில் தான் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
ஆதரவாளர்களுடன் ஆலோசனை
இந்த சட்டசபை தேர்தல் தொடர்பாக சசிகலா தனது ஆதரவாளர்களுடன் தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த மாத இறுதியில் சசிகலா தனது நிலைப்பாட்டை அறிவிக்க உள்ளார்.
குறிப்பாக பிப்ரவரி 24ம் தேதி ஜெயலலிதாவின் பிறந்தநாள் வருகிறது. அன்றைய தினம் சசிகலா தனது நிலைப்பாட்டை அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
வேட்பாளர்களை களமிறக்க...
முன்னதாக கடந்த 3ம் தேதி பத்திரிகையாளர்களை சந்தித்த சசிகலா, ‛‛வரும் சட்டசபை தேர்தலில் தனது ஆதரவாளர்கள் களமிறங்குவார்கள்'' என்று கூறினார். இப்படியான சூழலில் தான் தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது டெல்டா மற்றும் தென்மாவட்டங்களில் முக்குலத்தோர் சமுதாய மக்கள் அதிகம் வசிக்கும் சட்டசபை தொகுதிகளை தேர்வு செய்து வேட்பாளர்களை களமிறக்கும் ஐடியாவில் சசிகலா உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி குறிப்பிட்ட தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களை போட்டியிட வைப்பது பற்றி அவர் தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறார்.
சகோதரரின் கட்சி பெயரில்..
மேலும், தனது வேட்பாளர்களை அவர் அண்ணா திராவிடர் கழகத்தின் பெயரில் நிறுத்த திட்டமிட்டு வருகிறார். இந்த அண்ணா திராவிடர் கழகம் என்பது கடந்த 2018 ம் ஆண்டில் சசிகலாவின் சகோதரர் விகே திவாகரனால் தொடங்கப்பட்ட கட்சியாகும்.
மேலும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டு பிப்ரவரி 2வது வாரத்தில் பொதுக்கூட்டம் நடத்தி தனது பலத்தை காட்டவும் சசிகலா திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
அதிமுக -பாஜக கூட்டணிக்கு சிக்கல்
சசிகலாவின் இந்த முடிவு அதிமுக - பாஜகவுக்கு சிக்கலாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் முக்குலத்தோர் சமுதாய ஓட்டுகள் அதிமுகவின் வாக்கு வங்கியாக உள்ளது. இந்த சசிகலா, ஓ பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் உள்ளிட்டவர்களின் நீக்கத்தால் அந்த சமுதாய மக்களின் ஓட்டுகள் அதிமுகவுக்கு கிடைப்பதில் சரிவை சந்தித்தது.
தற்போது டிடிவி தினகரன் மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார். இது அதிமுக - பாஜக கூட்டணிக்கு பிளஸ் பாயிண்ட்டாகும். இப்படியான சூழலில் தான் அதிமுக - பாஜக கூட்டணியில் இணைய சசிகலா விரும்பினார். ஆனால் அது நடக்கவில்லை.
இதனால் அவரது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இந்நிலையில் தான் சசிகலா தனது செல்வாக்கை நிரூபிக்க வேட்பாளர்களை களமிறக்க உள்ளார். இது நடக்கும் பட்சத்தில் முக்குலத்தோர் சமுதாய ஓட்டுகளை பிரிக்க வாய்ப்புள்ளது. இது அதிமுக - பாஜக கூட்டணிக்கான ஓட்டுகளை பிரிக்கலாம். இது என்டிஏ கூட்டணிக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications