இதுக்கும் மேல முடியாது.. உறுதியாக சொன்ன சசிகலா.. அடுத்த மாதமே "ஷிப்ட்" ஆகிறார்.. அந்த நாள் வருகிறது!
சென்னை: தி நகரில் தற்போது தங்கி இருக்கும் சசிகலா அடுத்த மாதமே வீடு மாற போகிறார்.. வேறு எங்கு.. அவர் ஆசையாக கட்டிய "அதே" வீட்டிற்குத்தான். சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா தற்போதுதான் கொஞ்சம் ஆக்டிவாக செயல்பட தொடங்கி உள்ளார்.
பெங்களூர் சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா தமிழக அரசியலை புரட்டி போடுவார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சசிகலாவோ சில அரசியல் தலைவர்களை சந்தித்துவிட்டு, பின் மொத்தமாக அரசியலில் இருந்தே விலகுவதாக அறிவித்தார்.
அதன்பின் அரசியல் குறித்து பேசாமல் முழுக்க முழுக்க ஆன்மீக பயணம், கடவுள் வழிபாடு, குல தெய்வ கோவில் வழிபாடு என்று செல்ல தொடங்கினார். சசிகலா சென்ற ஆன்மீக பயணம் எதிலும் பெரிய அளவில் அரசியல் தலைவர்கள் யாரையும் வெளிப்படையாக சந்திக்கவில்லை.

மாற்றம்
இந்த நிலையில் சசிகலா தற்போது தி நகரில் இருந்து போயஸ்கார்டனில் இருக்கும் தனது புதிய வீட்டிக்கு மாற போவதாக தகவல்கள் வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன் போயஸ்கார்டன் சென்ற சசிகலா அங்கு வேதா இல்லத்திற்கு அருகே இருக்கும் விநாயகர் கோவிலில் வழிபாடு செய்தார். அதோடு அங்கு அவர் தியானமும் செய்தார் .

பார்த்தார்
அதற்கு சில நாட்களுக்கு முன் இரவோடு இரவாக ஒருநாள் வேதா இல்லத்திற்கு எதிரே கட்டப்படும் வீட்டை சென்று பார்த்து இருக்கிறார். வெளியே கட்டுமானம் முடிந்த நிலையில் உள்பக்கம் மட்டும் பணிகள் நடந்து வருகிறது. இந்த கட்டமான பணிகளை பார்வையிட்ட சசிகலா இங்கு விரைவில் குடிபெயர வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். இதனால் பணிகளை வேகமாக முடிக்கும்படி கூறியுள்ளாராம்.

என்ன பிளான்
தற்போது தி நகரில் கிருஷ்ணபிரியாவுக்கு சொந்தமான வீட்டில்தான் சசிகலா இருக்கிறார். இந்த வீடு மிகவும் சின்னதாக இருப்பதாக சசிகலா கூறினாராம்.. சீக்கிரம் போயஸ்கார்டன் போகணும். தேர்தல் முடிவு வரத்துக்கு முன்னாடி போயஸ் கார்டன் போகணும். வேகமாக வேலையை முடிங்க .. இந்த வீட்டில் இதுக்கும் மேல் இருக்க முடியாது என்று சசிகலா கூறியுள்ளாராம்.

மாற வேண்டும்
அதோடு தனக்கு போயஸ்கார்டன்தான் தோதாக இருக்கும். தேர்தலுக்கு பின் என்ன வேண்டுமானாலும் நடக்கும் . நான் அந்த வீட்டில் இருப்பதுதான் சரியாக இருக்கும். சீக்கிரம் வேலையை முடியுங்கள் என்று கூறியுள்ளாராம்.

இமேஜ்
தனக்கான இமேஜை போயஸ்கார்டன்தான் கொடுக்கும் என்று சசிகலா நம்புகிறாராம். இவர் சிறையில் இருந்த போதே வேதா இல்லத்திற்கு எதிரே அதேபோன்ற வீட்டை சசிகலா குடும்பத்தினர் கட்டி வந்தனர். சசிகலாவின் இமேஜை மனதில் வைத்தே அங்கு புதிய வீடு கட்டப்பட்டது.

பணிகள்
இதன் பணிகள் முடிந்த நிலையில் சசிகலா அடுத்த மாதம் அங்கே குடிபெயர இருக்கிறார். பல விஷயங்களை மனதில் வைத்துதான் சசிகலா வேகம் காட்டி வருகிறாராம். மீண்டும் போயஸ்கார்டன் போக வேண்டும் என்ற சசிகலாவின் கனவு.. விரைவில் நிறைவேற போகிறதாம்.. அவர் பல நாளாக எதிர்பபார்த்த அந்த நாள் அடுத்த மாதமே வரும் என்கிறார்கள் சசிகலாவிற்கு நெருக்கமானவர்கள் .