• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

"செம டென்ஷன்".. அமைச்சருக்கு போனை போட்ட எடப்பாடியார்.. டிடிவி தினகரன் விஷயத்தில் என்ன நடந்தது?

|

சென்னை: டிடிவி தினகரனை, சரமாரியாக விமர்சித்து சிவி சண்முகம் பேசிய பேச்சினால் எடப்பாடியார் தரப்பு டென்ஷன் ஆகிவிட்டதாக சொல்கிறார்கள்..!

சசிகலா சென்னை வந்ததில் இருந்தே ஆவேசமாக இருப்பவர் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம்தான்.. அமைச்சர் ஜெயக்குமார், அமமுகவுக்கு இடம் கிடையாது என்று சொல்லி வருகிறார்..

சில அமைச்சர்கள் சரியாக பதில் சொல்லாமல் நழுவி கொள்கிறார்.. செல்லூர் ராஜுவோ, சசிகலா என்ற பெயரை செய்தியாளர்கள் சொன்னாதுமே கடுப்பாகி பதிலளிக்க மறுத்துவிடுகிறார்.. இதில், கொந்தளிப்புடன் பேசியது அமைச்சர் சிவி சண்முகம்தான்.

திடீரென "ரஜினி"யை கையில் எடுத்த ஸ்டாலின்.. "அவர்" சொல்வாரே.. அது மாதிரி.. விருத்தாச்சலத்தில் பரபர!

 கைது நடவடிக்கை

கைது நடவடிக்கை

அதிமுக கொடியை கட்டி கொண்டு தமிழகம் எல்லை வந்தால் கைது நடவடிக்கை என்று பேட்டி தந்திருந்தார்... இந்த பேட்டிதான் அந்த 2 நாளாக சோஷியல் மீடியாவில் வலம் வந்து கொண்டே இருந்தது.. அது ஓய்ந்த பிறகு மறுபடியும் விழுப்புரத்தில் டிடிவி தினகரன் மீது பாய்ந்து சரமாரியாக விமர்சித்து விட்டார்.

 குலத்தொழில்

குலத்தொழில்

"நிதானமா பேசிறேனான்னு கேட்கிறார்... இவர்தான் எனக்கு ஊற்றி தந்தாரா? குடிச்சிட்டு பேசறேன்னு சொல்றார்.. கூவத்தூரில் எனக்கு ஊற்றி கொடுத்தார், எல்லோருக்கும்தான் ஊத்தி கொடுத்தார், இல்லைன்னு அவரை சொல்ல சொல்லுங்க பார்ப்போம். ஊத்திக் கொடுப்பது தான் இவருக்கு குலத்தொழில்.. ஊத்திக் கொடுத்து குடியைக் கெடுப்பவர்" என்று கூறியிருந்தார்.

 அற்ப பிறவிகள்

அற்ப பிறவிகள்

இதற்கு டிடிவி கொந்தளித்து, உடனடியாக எதிர்வினையாற்றியது.. நிதானம் இழந்து, தன்னிலை மறந்து, பதற்றத்தில், கோபத்தின் உச்சிக்கே சென்று, பதவி வெறியில் தங்களது பேராசைகள் எல்லாம் நிராசை ஆகிவிடுமோ என்ற பயத்தில் அதிகார போதை கண்ணை மறைக்கும் அளவிற்கு தாங்கள் வகிக்கின்ற பதவியின் மாண்பையும் மறந்து. மனித நிலையிலிருந்து மாறி காட்டு மிருகங்கள் போல கடும் கூச்சலிட்டு வானுக்கும் மண்ணுக்கும் குதிக்கும் ஒரு சில அற்பப் பிறவிகளைப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது என்று பதிவிட்டிருந்தார்.

ஆனாலும், சிவி சண்முகம் பேசிய அந்த பேட்டியும் சோஷியல் மீடியாவில் படுவைரலானது.. பலருக்கு அதிர்ச்சியையும் தந்தது.. ஒரு சட்டத்துறை அமைச்சரே இப்படி பேசலாமா? ஒருமையில் பேசலாமா? அநாகரீகமாக பேசலாமா? என்பன போன்ற அதிருப்திகளை எழுப்பியது.. மற்றொரு பக்கம் அமமுகவின் ஐடி விங்கும் தீவிரத்தில் குதித்தது.. சிவி சண்முகம் பேசிய பேச்சு, முக்குலத்தோருக்கு எதிராக இருப்பதாக பரபரப்பும் சர்ச்சையும் கிளம்பியது...

வருத்தம்

வருத்தம்

இது அத்தனையும்தான் முதல்வர் எடப்பாடியார் கவனத்துக்கு சென்றுள்ளது.. சிவி சண்முகம் பேசிய அந்த பேச்சை முதல்வரும் முழுவதுமாக கேட்டுள்ளார்.. அதற்கு பிறகுதான், சிவி சண்முகத்துக்கு போன் போட்டு, உடனடியாக பேசியதற்கு வருத்தம் தெரிவிக்கும்படி சொன்னாராம்.. மேலும் இனிமேல் பேட்டி தருவதை தவிர்க்க வேண்டும் என்று அட்வைஸ் தந்தாராம்.. இதையடுத்தே சிவி சண்முகம் தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்ததாக கூறப்படுகிறது.

கொந்தளிப்பு

கொந்தளிப்பு

என்னதான், அமைச்சர் தன் பேச்சுக்கு வருத்தம் சொன்னாலும், சோஷியல் மீடியா முழுவதுமே அமைச்சர் பேசியது தொடர்பான விவாதங்கள் நடந்து வருகின்றன.. முதல்வர் ஒரு பக்கம், எத்தனையோ சமாளிப்புகளை மீறி இந்த ஆட்சியை தக்க வைத்து கொள்ள போராடி வரும் நிலையில், அமைச்சரின் பேச்சு அதிமுகவினருக்கு தர்ம சங்கடத்தையே ஏற்படுத்தி வருகிறதாம்.

 
 
 
English summary
Sasikala return and CV Shanmugam controversial speech issue about TTV Dinakaran
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X