என்னாது நிர்பந்தமா?.. என்னையா?.. 1996 லேயே நான் எதற்கும் அசரவில்லை.. சசிகலாவின் புதிய ஆடியோ
சென்னை: நிர்பந்தம் காரணமாக அரசியலை விட்டு ஒதுங்கினேனா என்பது குறித்து சசிகலா தொண்டர் ஒருவரிடம் பதில் அளித்துள்ளார். இது தொடர்பான ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சசிகலா கடந்த சில தினங்களாக அதிமுகவினரிடம் பேசி வரும் ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அவர் தற்போது வெளியிட்டுள்ள புதிய ஆடியோ மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தை சேர்ந்த கோவிந்தராஜ், டாக்டர் ராஜசேகர், நாமக்கல்லை சேர்ந்த சுகந்தி, அம்பிகா, பூபதி மற்றும் குவைத் நாட்டை சேர்ந்த சக்திவேல்ராஜன் ஆகியோருடன் சசிகலா பேசினார்.

ஒற்றுமை
அவர்களிடம் சசி பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. அந்த ஆடியோவில் எல்லாரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒற்றுமையாக இருந்து தேர்தலை சந்தித்து வெற்றி பெற வேண்டும் என்பதுதான் என் எண்ணம். அப்படி செய்திருந்தால் நிச்சயம் வெற்றி பெற்று ஜெயலலிதா ஆட்சி தொடர்ந்திருக்கும்.

கட்சி வீண்
இனி மேலும் கட்சி வீணாவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அரசியலை விட்டு விலகி இருக்கும்படி என்னை யாராவது நிர்பந்தித்தார்களா? என என்னை கேட்கிறார்கள். என்னை யாராவது நிர்பந்தப்படுத்த முடியுமா? என்னையே வேண்டாம் என சொல்லும் போது நாம் என்ன செய்ய முடியும்?

150 இடங்களில் வெற்றி
தனியாக நின்று 150 இடங்கள் வரை வெற்றி பெறுவோம் என்றார்கள். நானும் கட்சி வெற்றிக்காக அமைதியாக இருந்தேன். மற்றபடி என்னை யாராலும் நிர்பந்திக்க முடியாது. நான் யாருக்கும் பயப்படும் சுபாவமே கிடையாது. 1996ஆம் ஆண்டு நடந்த தேர்தலுக்கு பிறகு என்னை சிறையில் அடைத்து அவ்வளவு கொடுமைகளை தந்தார்கள்.

அசரவே மாட்டேன்
அதற்கே நான் அசரவில்லை. அதிமுக அமமுகவுடன் இணைந்து தேர்தலை சந்தித்திருந்தால் நிச்சயம் ஆட்சி அமைத்திருக்கும். ஆனால் அதை எடப்பாடி பழனிச்சாமியும் ஓ பன்னீர் செல்வமும் செய்யவில்லை என சசிகலா தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் எடப்பாடியை மட்டுமே குற்றம்சாட்டி வந்த சசி, தற்போது ஓபிஎஸ்ஸை குற்றம்சாட்டி வருகிறார்.












Click it and Unblock the Notifications