கட்சிக்காக வருவேன்.. மக்களுக்காக உழைப்பேன்..யாராலும் தடுக்க முடியாது.. சசிகலாவின் புது ஆடியோ ரிலீஸ்!
சென்னை: தமிழக மக்களின் உரிமை மற்றும் நலனுக்காக நான் தொடர்ந்து உழைப்பேன். அதை யாராலும் தடுக்க முடியாது என சசிகலா பேசியுள்ளதாக மற்றொரு ஆடியோ வெளியாகியுள்ளது.
இது தன்னை எதிர்க்கும் அதிமுகவினருக்கு கொடுக்கப்படும் பதிலடியாகவே பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு முன்பு அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிவித்த சசிகலா கடந்த 10 நாட்களாக அதிமுகவினரின் தூக்கத்தை கெடுத்து வருவதாக அவரது செயல்பாடுகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
ஒதுங்குவதாக அறிவித்த போது சசிகலாவால் அதிமுகவுக்கு தேர்தலில் எந்த பாதிப்பும் ஏற்படாது என நிர்வாகிகள் மகிழ்ச்சியடைந்த நிலையில் தற்போது கட்சியை கைப்பற்ற அவர் வருவதாக அறிவித்துள்ளது நிம்மதியை கெடுத்துள்ளது.

ஆடியோ
முதல் ஆடியோவில் ஒரு தொண்டரிடம் சசிகலா பேசும் போது கவலைப்படாதீங்க, இந்த கொரோனா கீரோனாலாம் முடியட்டும் நான் சீக்கிரம் வருவேன். எல்லாத்தையும் சரி செய்துவிடலாம். நீங்கள் எல்லாரும் பத்திரமாக ஜாக்கிரதையாக இருங்கள் என கூறியிருந்தார். மேலும் அதிமுகவில் சண்டையிட்டு கொள்வது வேதனை தருகிறது என்றும் அவர் கூறியிருந்தார்.

சசிகலா
இதை அதிமுக நிர்வாகிகள் மறுத்தனர். சசிகலா ஆடியோவில் பேசுவது அமமுக தொண்டருடன்தானே தவிர அதிமுக தொண்டர்களுடன் இல்லை என துணை ஒருங்கிணைப்பாளர் கே பி முனுசாமி தெரிவித்தார். இதையடுத்து சென்னை அதிமுக நிர்வாகி ராஜா ரகுபதியுடன் அவர் பேசிய ஆடியோ வெளியானது.

சசிகலா
இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியோ சசிகலா கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். அவர் அதிமுகவில் உறுப்பினராகவே இல்லை. அவர் பேசி வருவது அமமுக தொண்டர்களுடன்தான் என்றார். மேலும் புதுக்கோட்டை நகர இணைச் செயலாளர் பூரண ஆறுமுகத்திடம் சசகிலா பேசுகையில் கட்சி நன்றாக போக வேண்டும்.

உரிமை
அதனால்தான் ஆரம்ப கால கட்சி உறுப்பினர்களிடம் பேசி வருகிறேன். விரைவில் எல்லாத்தையும் சரி செய்துவிட்டு ஜெயலலிதா இருந்த போது கட்சி எந்த நிலையில் இருந்ததோ அந்த நிலைக்கு கொண்டு வருவேன் என்றார். இந்த நிலையில் மதுரை மாவட்ட அதிமுக இளைஞரணி செயலாளர் ஆரோக்கியராஜாவிடம் பேசுகையில் தமிழக மக்களின் உரிமைக்காகவும் நலனுக்காகவும் தொடர்ந்து உழைப்பேன், அதை யாராலும் தடுக்க முடியாது என்றார் சசிகலா.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications